லேபில்கள்

Sunday, January 15, 2017

பெருசா வாடா மானுஷா

நான் வீட்டிற்குள் நுழைந்தபோது Zதமிழ் தொலைக்காட்சியில் "சரிகமப" நடந்து கொண்டிருந்தது. மானுஷா என்ற குழந்தை 'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாடல் கேட்குதா' பாடிக்கொண்டிருந்தாள். இறுதிச் சரணத்தின் இடைப்பகுதியில் இருந்தாள் அப்போது. வெகு அழகாகப் பாடினாள் என்பதைத் தவிர ஏதும் சொல்லும் இசை ஞானமற்றவன் நான். ஆனால் பாடகர் விஜய்பிரகாஷ் கூறிய ஒரு நுட்பத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு சரணத்தின் ஒரு பகுதியில் மானஷாவின் குரலும் புல்லாங்குழலும் பிரிக்கமுடியாதபடி ஒன்றிணைந்து போனதை சுட்டிக் காட்டினார்.
'இலையோடு
பூவும்
தலையாட்டும் பாரு
இலையோடு
பூவுங்காயும்
தலையாட்டும்
பாரு பாரு'
என்ற பகுதியை அவளை மீண்டும் பாட வைத்தார்.
கூர்ந்து கவனித்தபோது புல்லாங்குழலும் மானுஷாவும் பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலந்திருந்ததை உணர முடிந்தது
பெருசா வாடா மானுஷா
நன்றி விஜய்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels