Sunday, January 15, 2017

என் பிள்ளைகள்

இறுதி வகுப்பு முடிந்து ஆசிரியர் அறைக்கு சென்று கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு அரி, கார்த்தி, மணி மற்றும் ஜெனித் நால்வரும் என்னை வழிமறிக்கிறார்கள்.
‘என்னாங்கடா?”
”உங்கமேல செமையா கோவமா இருக்கோம்” அரி சொல்கிறான்.
“ஏண்டா?” என்று கேட்டதும் அரிதான் பேசினான்,
“காலாண்டு லீவ்ல சயின்ஸ் குரூப்புக்குதானே க்ளாஸ் வச்சீங்க?”
“ஆமாம் அதுகென்ன?
“அதுக்கென்னவா. அங்கதான் பிரச்சினையே?”
கொஞ்சம் மிரண்டு போனேன். ஆனாலும் சமாளித்துக் கொண்டவனாய் கேட்டேன்,
“என்னங்க சார் பிரச்சினை?”
”பாருடா மணி, என்ன பிரச்சினைனு சாருக்குத் தெரியாதாம். சொல்லுங்க அன்னைக்கு என்ன செஞ்சீங்க அங்க?” என்று அரி முடிப்பதற்குள், “கமான் டெல் மீ, என்ன செஞ்சீங்க அன்னைக்கு” என்கிறான் மணி.
இது சகஜம்தான். நாமலா வாயக் கொடுத்து வம்புல மாட்டிக்கக்கூடாது என்று முடிவெடுத்தவனாக,
“பாடம் நடத்தினேன், வேற என்ன?”
“சார், நீங்க பாடம் நடத்துங்க, பாட்டு நடத்துங்க, கிராமர் நடத்துங்க, அதெல்லாம் வீ நோ கேர்”
“பாருடா தொர இங்லீசெல்லாம் பேசறாரு”
“பேச்ச மாத்தாதீங்க. அவய்ங்களுக்கு சம்சா வாங்கிக் கொடுத்தீங்களா இல்லையா?”
இப்போது முற்றும் புரிந்துவிட்டது. காலாண்டு விடுமுறையில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சிறப்புச் வகுப்பெடுத்தேன். அப்போது எல்லாக் குழந்தைகளுக்கும் இரண்டு சம்சா வாங்கிக் கொடுத்திருந்தேன். இந்த அறையாண்டு விடுமுறைக்கு கலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும். பேச்சு வாக்கில் அறிவியல் பிரிவிலிருந்து ஏதோ ஒரு லூசு போட்டுக் கொடுத்திருக்கான். சும்மாவே சாமியாடுவாய்ங்க ஆர்ட்ஸ் க்ரூப், இப்ப எவிடென்சோடு மாட்டியிருக்கிறேன். ஆனாலும் திமிரோடு,
“ஆமாம், அதுக்கென்ன?”
“ அதுக்கென்னவா, டேய் சார பாருடா, எங்களுக்கும் சம்சா வேணும். இல்லாட்டி ரணகளம் ஆமா”
“சரி, அது சரி அவன் படிக்கிறானே, நீங்க ஏன் அத பத்தி மட்டும் பேச மாட்டேங்கற. நாலு நாயும் இன்னும் ஒரு சம்மரிகூட படிக்கல”
”நாளைக்கு எழுதிக் காட்டறோம்.”
“முடியாது”
“சேலஞ்ச். எழுதிட்டா ஆளுக்கொரு பிரியாணி ஓக்கேவா?”
“சரிடா”
அப்ப 240 ரூவா கொடுங்க”
“எதுக்கு?”
“கொடுங்க போய் நாலுபேரும் பிரியாணி சாப்ட்டுட்டு படிக்கிறோம்”
“நோ, இந்தக் கைல எழுதிக் கொடு. அந்தக் கைல காசு தரேன்”
””ரெண்டும் ஒன்னுதான் சார்”
“எப்படி?”
“சில கடைல மொதல்ல காசு கொடுத்துட்டு டோக்கன் வாங்கிட்டு போய் காபி குடிக்கனும்”
“அப்புற?”
“சில கடைல காபி குடிச்சதும் பில் வாங்கிட்டு வந்து காசு தரனும். ஆனா ரெண்டும் ஒன்னுதான். ரொம்ப யோசிக்காதீங்க, “
250 ரூபாய் வாங்கிட்டுதான் விட்டய்ங்க.
என் பிள்ளைகள்.
09.01.2017 அன்று தீக்கதிர் வண்ணக்கதிரில் வந்தது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...