Monday, September 7, 2015

வீட்டுப் பாடம் குறும்படம்




பெரும்பான்மை திரைப் படங்கள் குப்பை என்று படிந்துள்ள பொதுப்புத்தி முழுக்க முழுக்க பொய் என்று நிறுவுவது அப்படி ஒன்றும் எளிதானதல்ல. நமக்கு அதற்கான தேவையும் இல்லை.

இந்தப் பொதுப்புத்தி பொய் என்றோ உண்மை என்றோ நிறுவப் படுவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை.

இது உண்மை எனும் பட்சத்தில் இரண்டு விஷயங்கள்தான் நம்முன் உள்ளளன.

1) பார்த்தீர்களா! பார்த்தீர்களா! எல்லாமே       மோசம் என்று புலம்பித் தீர்ப்பது.

2) இதற்கு மாற்றாக நல்ல படங்களைத் தருவது.

இதில் முதலாவது கருத்தோடு நமக்கு உடன்பாடு இல்லை.

இரண்டாவதை நம்மால் செய்ய இயலவில்லை. சரி, இரண்டும் முடியாதெனில் அமைதியாய் முடங்கி விடலாமா?

நமக்கிருக்கும் வாய்ப்பு மாற்றாய் வருகின்ற நல்ல திரைப்படங்களைக் கொண்டாடி கொண்டு செல்வதேயாகும்.

பொதுவாகவே மோசமான திரைப் படங்களுக்கு மாற்றாக குறும் படங்களே வருகின்றன. அவற்றைத் தேடிக் கண்டடைவது சிரமமாக இருப்பதால் அவற்றைத் தேடிக் கண்டடைந்து வலை மூலம் அறிமுகம் செய்யலாமென்று தோன்றுகிறது.

அப்படி ஒரு முயற்சிதான் "வகுப்பறை"

வீட்டிலே வீட்டுப்பாடம் செய்வதற்கு வாய்ப்பற்ற குழந்தையை அடிப்பதற்கு பதில் வீட்டுப்பாடத்தை பள்ளியிலேயே ஆசிரியரின் வழிகாட்டுதலோடு செய்வதற்கான ஏற்பாட்டினை மாற்றாக வைக்கிறது இந்தக் குறும்படம்.

இந்தக் குறும்படத்தில் குறிப்பிட்டு சொல்வதற்கு இரண்டு உள்ளன,

1) ஆசிரியர் பிரம்பை ஒடித்து குப்பைத் தொட்டியில் போடுமிடம்
2) வீட்டு. பாடத்தை இனி பள்ளியிலேயே முடித்துக் கொள்ளலாம் என்று ஆசிரியர் சொல்லும் போது மகிழ்ந்து விரியப் பார்க்கும் அந்த மாணவனின் முகம்.

வீட்டுப் பாடங்களே இல்லாத கல் வியைக் கோரும் குறும் படங்கள் விரைவில் வருமென்ற நம்பிக்கையே இனிப்பாயிருக்கிறது.

படத்தைப் பார்த்து சொல்லுங்கள்






No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...