அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
தமிழில் வரும் நூல்களுக்கு எடிட்டிங் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கத்திக் கொண்டிருப்பவர்களுள் நானும் ஒருவன். மேற்கே நூல்களை செதுக்கித் தருவதற்கென்றே தொழில் முறை எடிட்டர்கள் இருக்கிறார்கள். நல்ல வருமானமும் பெருகிறார்கள்.
தமிழில் அதற்கானத் தேவை நிறைய இருக்கிறது.ஆனால் அது தேவையான அளவிற்கு உணரப் பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்ப் படைப்பாளிடமும் அது குறித்த பார்வை இல்லை என்றால் கூட பழுதில்லை. அதை தங்களுக்கான கௌரவ குறைச்சலாகவே பார்க்கிறார்கள். தனது படைப்பை இன்னொருவர் சரி செய்வதா? என்ற ஆதங்கம் இவர்களுக்கு. உண்மையில் அது சிக்கெடுத்தல் மாதிரி ஒரு விஷயம்தான்.
என்னைக் கேட்டால் ஒவ்வொரு படைப்பிற்குமே எடிட்டிங் தேவைதான் என்பேன்.
நேற்று முக நூலில் போன வருடம் இதே நாளில் வைத்திருந்த கவிதையினை மீண்டும் வைத்தேன்.
பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே
தன்னைத் தானே
இருள் சபித்துக் கொண்டது அறியாமல்
என்ற அந்தக் கவிதையினை வாசித்த தம்பி ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) அதில் உள்ள கடைசி மூன்று வரிகள் பொழிப்புரை போல் எதற்கு என இன்பாக்சில் வந்து கடிந்தான்.
பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே
அதை எடுத்து விட்டு பார்த்தால் கவிதை இப்படி அழகாக வருகிறது. நன்றி ஜானகி.
எடிட்டிங் அவசியம்தான்.

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்