போய்ச்
சேர வேண்டியவர்களுக்கு போய் சேரும் வரைக்கும் சலிக்கவே சலிக்காமல் சிலவற்றை மீண்டும் மீண்டும் பேசவேண்டியிருப்பதன்
அவசியத்தை உணர்கிறேன். “கூறியது கூறல் குற்றம்”
என்ற மரபை உடைத்துக் கொண்டும் கல்விகுறித்து
மீண்டும் மீண்டும் சிலவற்றை பேசவே ஆசைப்படுகிறேன்.
“எல்லாமே
மோசம்” என்ற
பொதுக் கருத்தை சகலத்தையும் நாசப்படுத்தும் மிக முக்கியமான காரணிகளுள் ஒன்றாக நான்
பார்க்கிறேன். எல்லாம் மோசம் என்ற கருத்துக்குள் நிபந்தனையற்று
விழுவதன் மூலம் நல்லதுகளை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் நாம் தவறுகிறோம் என்றே உணர்கிறேன்.
இந்தத் தவறை கல்வித் தளத்திலும் நாம் செய்கிறோம் என்றே படுகிறது.
நல்லதுகளைத் தட்டிக் கொடுத்து ஒன்று திரட்டாமல் அல்லதுகளை அப்புறப் படுத்த
இயலாது.
எனவே
நிச்சயமாக இந்தத் தொடர் நல்லதுகளை தட்டிக் கொடுத்து அல்லதுகளுக்கு எதிராக ஒன்று திரட்ட
முயற்சிக்கும். அது முடியாத பட்சத்தில் குறைந்த பட்சமாக நல்லதுகளை தட்டிக் கொடுக்கிற வேலையையாவது
செய்யும்.
1)
எது
கல்வி?
2)
எது
செய்யக் கல்வி?
3)
மனசைத்
தொட்ட ஆசிரியர்கள், சம்பவங்கள், பள்ளிகள், மாப்பிள்ளை
பெஞ்ச்சுகள், கல்லூரிகள், மாணவர்கள்,
பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுஜனங்கள்…
என
கல்வியோடு தொடர்புடைய அனைத்தையும் அனைவரையும் கலந்து கட்டி பேசவும் விவாதிக்கவும் கிடந்து
தவிக்கிறேன்.
”இளமையில் கல்” என்றாள் கிழவி. முடியும்
வரை கல்வி அவசியம் ஆகிறது. எனவே ”முடியும்
வரை கல்” என்று தொடருக்கு பெயரிட்டிருக்கிறேன். கல்விகுறித்த
எனது கருத்துக்களை உங்களது கருத்துக்களும் விவாதங்களும் வழிநடத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்