Wednesday, September 2, 2015

திரள்வோம் தெருவெங்கும்…

நம் ஊரில் ஒரு மளிகைக் கடை இருக்கிறது என்று கொள்வோம்நீங்களும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அரிசி வாங்குவதற்காக  நிற்கிறீர்கள்இருவரும் கர்நாடகா பொன்னி அரிசியை வாங்குகிறீர்கள்கடைக்காரர் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு கிலோ ஐம்பது ரூபாய்க்கும் உங்களுக்குஅறுபது ரூபாய்க்கும் ஒரே சாக்கிலிருந்து கொட்டி அளந்த ஒரே ரக அரிசியை விநியோகித்தால் உங்கள்மனநிலை எப்படியிருக்கும்?


இப்படியெல்லாம்கூட செய்வார்களாஒருபோதும் இருக்காது என்றுதானே இயல்பாக எல்லோரும்சிந்திப்போம்ஆனால் அப்படித்தான் நடக்கிறதுஅதுவும் அரசு நிறுவனம் ஒன்று ஒரே பொருளுக்குஇரட்டை விலை முறையை வைத்திருக்கிறதுஅதுவும் மத்திய அரசின் நிறுவனம் மாநில அரசின்நிறுவனத்திற்கு ஒரு விலையையும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு விலையையும் நிர்ணயம்செய்திருக்கிறது.

இது உண்மையெனில் நமக்கு இயல்பாகவே ஒன்று தோன்றும்மத்திய அரசின்  நிறுவனம் ஒன்று மாநிலஅரசின் நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனக்களுக்கும் இடையே தனது பொருளை இரட்டைவிலைமுறையில் விநியோகிக்கிறது என்றால் நிச்சயமாக தனியார் நிறுவனங்களைவிடவும் மாநில அரசின்நிறுவனங்களுக்கு குறைச்சலான விலைக்கு வழங்கும் என்றுதான் நினைப்போம்அதுதான்முறையும்கூட.

ஆனால் உண்மை வேறுவிதமாய் உள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைஎண்ணெய் நிறுவனம் டீசலின் விலையை தனியார் பெட்ரோல் பங்குகளைவிட அரசு போக்குவரத்துநிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ஏறத்தாழ பத்து ரூபாய் விலையை அதிகப் படுத்தியது.

கொஞ்சம் புரிகிறமாதிரி பேசிவிடவேண்டும்.

பேருந்துகள் அரசுடமையாக்கப் பட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஆளுகைக்குகீழ் அவைகொண்டுவரப்பட்டபின்னும் வெகுகாலத்திற்கு அவை தனியார் பெட்ரோல் பங்குகளில்தான் டீசலைநிரப்பினஅரசுப் பேருந்துகள் வரிசையில் நீண்டு காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது.

இதில் ஏற்பட்ட நேர விரயமும் பொருள் விரயமும் மாநில அரசை சொந்தமாக டீசல் பங்குகளை நிறுவிடஉந்தியதுவிளைவாக ஒவ்வொரு கிளை டெப்போவிலும் ஒரு டீசல் பங்குகள் ஏற்படுத்தப் பட்டன.

எட்டு கோட்டங்கள் இருபத்திரெண்டு மண்டலங்கள் என்று பரந்து விரியும் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு மாநிலம் முழுக்க ஏறத்தாழ 286 கிளைகள் உள்ளன.

இதன்மூலம் மூன்றுவிதமான பலன்களை போக்குவரத்துக் கழகங்கள் சுவைத்தன.

1 ) தனியார் பங்குகளின்முன் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய அவலம் தவிர்க்கப் பட்டது.

2 )மொத்தமாக டீசலை சொந்தமாகக் கொள்முதல் செய்துகொள்வதால் டீசல் பங்குகளுக்குப் போகக்கூடிய கமிஷன் கழகங்களுக்கு வந்தது.

3 )ஒவ்வொரு டெப்போவிலும் டீசல் பங்குகள் அமைக்கப் பட்டதால் டீசல் நிரப்பும் பணியைசெய்வதற்காக குறைந்த பட்சம் இரண்டு ஊழியர்களின் தேவை வந்ததுஇது ஒவ்வொரு டெப்போவிலும்இரண்டுபேருக்கான வேலை வாய்ப்பைத் தந்தது.

இந்த விலை ஏற்றத்தால்மாநில அரசு டீசல் கொல்முதலை நிறுத்திவிட்டு மீண்டும் தனது பேருந்துகளைடீசல் நிரப்புவதற்காக தனியார் பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பவேண்டிய அவலம் வந்திருக்கிறது.

இதனால் என்ன கெட்டுப் போய்விட்டது என்று கேட்பவர்களுக்காகவும்என்ன நடக்கிறது என்றேதெரியாமல் உள்ளவர்களுக்காவும் சில விஷயங்களை பந்திவைக்க வேண்டியுள்ளது.

இப்போது தனியார் பங்குகளுக்கு ஒரு லிட்டர்  டீசல் 52 ரூபாய் 53 பைசாவிற்கும் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு 65 ரூபாய் 53 பைசாவிற்கும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளதுஇதில் தனியார்நிறுவங்களுக்கு ஒருலிட்டர் டீசலுக்கு 83 பைசா கமிஷன் கிடைக்கிறது. 30 பைசாதான் கமிஷன் என்றும்சொல்லப்படுகிறதுஆக 83 பைசா கமிஷன் எனில் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கானஅடக்கவிலை 51 ரூபாய் 73 பைசா என்றாகிறது. 30 பைசாதான் கமிஷன் எனில் 52 ரூபாய் 23 பைசாஎன்றாகிறது.

இதற்கு மத்திய அரசு முன்வைக்கும் காரணம் மொத்தப் பயன்பாட்டிற்கான மானியத்தைவிலக்கியிருக்கிறோம் என்பதே.

இப்போது ஒரு விஷயத்தைப் பார்ப்போம்ஒரு தனியாருக்கு 25 பேருந்துகள் இருக்கின்றனஅவர் ஒருபெட்ரோல் பங்கும் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்அவர் தனது பேருந்துகளுக்குஅவரது பெட்ரோல் பங்கில்தானே நிரப்புவார்அது மொத்தப் பயண்பாட்டில் வராதா?

இப்போது எல்லாத் தனியார் கல்லூரிகளுக்கும் ஏராளமான பேருந்துகள் உள்ளனஎனக்குத் தெரிய 200பேருந்துகளை வைத்திருக்கக் கூடிய கல்வி நிறுவனக்களும் உள்ளனஅவற்றில் சில பெட்ரோல்பங்குளையும் வைத்துள்ளன என்றே தெரிகிறதுஅது உண்மையெனில் அந்தக் கல்வி நிறுவனங்களின்பேருந்துகள் அனைத்தும் அவர்களது பெட்ரோல் பங்கில்தானே டீசலை நிரப்பும்எனில் நமக்கொரு கேள்வி இயல்பாகவே வருகிறது, “ இது மொத்தப் பயன்பாட்டில் வராதா?”

வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படுகிற  அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின்எண்ணிக்கை 22400 என்றும் 22552  என்றும் இரண்டுவிதமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.  இயக்கப் படுகிற சிறப்பு வழித்தடங்களையும் சேர்த்தால் ஒவ்வொரு நாளும் இயக்கப் படுகிற அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் எண்ணிக்கை சற்றேரக்குறைய 23500 தேறும்.

சராசரியாக ஒரு வண்டிக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் டீசல் தேவைப் படும்  என்று கொள்வோம்எனில்23500 பேருந்துகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2350000 லிட்டர் டீசல் தேவப் படும்எவ்வளவுதான்குறைவாக வைத்தாலும் ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாய் அதிகம் என்று வைத்தால்கூட ஏறத்தாழ2,35,00,000 ரூபாயை போக்குவரத்து கழகங்கள் டீசலுக்காக ஒவ்வொரு நாளும் அதிகம் செலவுசெய்யவேண்டி வரும்.

இந்தவகையில்  ஏறத்தாழ 70 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒவ்வொருமாதமும் டீசலுக்காகபோக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கோடு இயக்கப் படுவதில்லைஇந்தக் கருத்தோடு முரண்பட வாய்ப்புகள் உள்ள்ன என்பதை நானறிவேன்.

25 ஆண்டுகளாக பெரம்பலூரில் இருந்து சமயபுரத்திற்கு பேருந்தில் தினமும் பயணிப்பவன். எப்போதும் அரசுப் பேருந்துகளில்தான் பயணிப்பவன். தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே தனியார் பேருந்துகளில் ஏறுபவன். முன்னெல்லாம் எந்தக் குழப்பமும் இருக்காது. சரியான சில்லறையோடு பேருந்து ஏறிவிடுவேன். இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு கட்டணம். 16 ரூபாயிலிருந்து 39 ரூபாய் வரிக்கும் ஒவ்வொரு பேருந்திற்கும் ஒவ்வொரு கட்டணம் இப்போது.

மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வந்ததும் பள்ளிக்கு வருகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உட்பட போகப் போக இதனால் பாதிப்புக்குஉள்ளாக நேரலாம்ஏற்கனவே போதுமான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பேருந்துகளின் நிலைமைஇன்னும் மோசமாகலாம்இது சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடும்.

போக, நட்டத்தை குறைக்கிறேன் என்கிற வகையில் அதிக வசூலினைத் தராத வழித்தடங்களைபோக்குவரத்துக் கழகங்கள் நிறுத்திக் கொள்ளவோ அல்லது குறைந்தபட்சம் குறைத்துக் கொள்ளவோவாய்ப்பிருக்கிறதுஇது பல கிராமங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதோடு இலவசப் பேருந்துஇல்லாத காரணத்தினால் பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகப் படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த வகையில் மத்திய அரசின் இந்த இரட்டைவிலை முடிவானது “ எல்லோருக்கும் கல்வி” என்றஅதனுடைய கொள்கைக்கே எதிரானதாக வந்தமையும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏறத்தாழ 280 கிளைகள்  உள்ளன. எல்லாக் கிளைகளிலும் டீசல் பங்குகள் உள்ளன. ஆக 280 டீசல் பங்குகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் உள்ளன. குறைந்த பட்சம் இரண்டு ஷிஃப்ட் என்று வைத்துக் கொண்டால்கூட பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப ஒவ்வொரு டெப்போவிற்கும் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்திருப்பார்கள். ஏறத்தாழ 560 ஊழியர்கள் இந்தப் பணியில் இருந்திருப்பார்கள்.

மத்திய அரசு இரட்டை விலையை அறிமுகம் செய்தவுடன் மாநில அரசு தனது பேருந்துக்ளை டீசல் நிரப்புவதற்காக தனியார் பங்குகளுக்கு அனுப்புகிறது.

 280 பங்குகளையும்  மாநில அரசு மூடியுள்ளது .என்றே கொள்ள வேண்டும்இதை கொஞ்சம் விரிவாகபார்த்தால் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர்களின் வேலை பறிபோகிறது என்று பொருள்.யாரையும் எந்தப் போக்குவரத்துக் கழகமும் இதுவரை வெளியேற்றவில்லையே என்று கேட்கக் கூடும்.ஆமாம்தான்இவர்களை இப்போதைக்கு வேறு ஏதேனும் பிரிவில் போடக்கூடும்பிறகு அந்தத்துறையில் ஏற்படும் காஇப் பணியிடங்களை நிரப்பாமல் விட ஏதுவாகும்ஏற்கனவே போதுமானஊழியர்கள் இல்லாமையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகமாக உள்ளதுஇந்தக் கூடுதல்பணிச்சுமை தரும் அழுத்தமும் எரிச்சலும் பயணிகள்மேல் திரும்ப வாய்ப்புள்ளது.

ஆகவே இந்த இரட்டை விலை முறையானது ஒவ்வொரு நாளும் பயணிக்கும் ஏறத்தாழ இரண்டுகோடிபயணிகளுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்குமான  இயல்பான உறவு நிலையை முறித்துப் போடும்.

மட்டுமல்ல 280 டெப்போக்களிலும் டீசலை சேமிப்பதற்கான டேங்குகளை  பூமிக்கு அடியில் புதைத்துஇருப்பார்கள்பயண்படுத்தாமல் போனால் அவை துருப்பிடித்து பயனற்றுப் போக வாய்ப்புள்ளது.

டீசல் நிரப்புவதற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் பணிநேரம் அதிகரிக்கிறதுஇதற்கே நேரம் அதிகம் பிடிப்பதால் மராமத்து மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குபோதுமான அவகாசம் இருப்பதில்லை.

எல்லாம் கடந்து இன்னொன்றும் உண்டுபோக்குவரத்து அதிகாரிகளுக்கும் தனியார் பெட்ரோல் பங்குமுதலாளிகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு ஊழலுக்கு வழி வகுக்கவும் வாய்ப்புண்டு.

ஒன்று சொல்லவேண்டும்அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது மக்களின் போக்குவரத்துக் கழகம்.இழப்பாய் ஒதுங்கும் ஒவ்வொரு பைசாவும் நமது பைசாஇதனால் பறிபோகக் கூடிய வேலை வாய்ப்புநம் பிள்ளைகளுடையதுகிராமங்களுக்கான போக்குவரத்து நின்று குழந்தைகளின் பள்ளிப் படிப்புபாதிக்குமெனில் அவர்கள் நமது குழந்தைகள்.

மத்திய அரசு இதை திரும்பப் பெறவேண்டும்நாமென்ன செய்யவேண்டும்வேறென்ன

திரண்டு தெருவுக்கு வரவேண்டும்.

நன்றி :  “ காக்கைச் சிறகினிலே” ஜூன் இதழ்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...