Thursday, September 10, 2015

கடிதம் 07

அன்பின் நண்பர்களே,

வணக்கம்.

நலம்தானே?

நாளை மாலை கிஷோர் அத்தை மாமாவை பார்ப்பதற்காக ஷார்ஜா புறப்படுகிறான். வழியனுப்பி வைப்பதற்காக சென்னை செல்கிறோம். தம்பி அகர முதல்வன் விமான நிலையம்  வந்து சந்திப்பதாகக் கூறியுள்ளார்.

“தம்பிக்கு மூனு மாச விசாண்ணே. அதுக்குள்ளவே வேலை செட்டாயிடும் போலண்ணே. அப்படியில்லன்னா விசா எக்ஸ்டெண்ட் செய்து சரி செய்யனும்.”

“வேலையா?”

“ஆமாம். பார்த்துட்டு இருக்கார். அங்க இருக்கக் கூடாதாம். அதனால அவன் வந்து பார்த்துப்பான்னு வேலைய எல்லாம் ஒதுக்கி வைக்காத.எப்படியும் ஆறேழு மாசமாகும்” என்கிறாள் தீபா.  

நடப்பது நடக்கட்டும்.

***************************************************************************

122 நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி வெளியிடுகிறார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா. முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அவர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறார். மாண்பமை அமைச்சர் வீரமணி அவர்கள் வெளியிடுகிறார்.
ஜோலார்பேட்டையில் வரும் வெள்ளி அன்று.
நூல் குறித்து நான் பேச வேண்டுமாம்.
அதைவிட வேறென்ன வேலை?  

**************************************************************************************************************************

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...