லேபில்

Thursday, September 24, 2015

தினமணியின் முன்னுரை

மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர். பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய எட்வின், தற்போது சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் உதவித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

சமுதாய மாற்றத்தில் ஆர்வமுடையவர். ஆசிரியர்களின் உரிமைகளைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள எட்வின், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கத்தில் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். மூன்று கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சென்னையில் இருந்து வெளிவரும் ‘காக்கைச் சிறகினிலே’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்புவகிக்கிறார். இவருடைய வலைத்தளம் http://www.eraaedwin.com.

2 comments:

 1. வாழ்த்துக்கள் தோழர்
  தங்களின் பணி தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023