Wednesday, January 7, 2026

செளமா சார் சந்திப்பு


 இன்று மணப்பாறை சௌமா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சகோதரர் செளமா ராஜரத்தினம் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து

காக்கை தமிழர் திருநாள் சிறப்பு மலரை வழங்கி மகிழ்ந்த தருணம்

கொள்கை எதிரி தேர்தல் கூட்டாளியாகலாம்

 
12.01.2026 அன்று CBI விசாரனைக்காக விஜய் டில்லி செல்கிறார்

இதைத் தவிர்க்கவோ தள்ளிப்போடவோ இயலாது என்றே கூறுகிறார்கள்

இதை தனது மாய மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று அமித்ஷா ஆசைப்படுகிறார்

அதனால்தான் டில்லியில் விசாரனை. இல்லையென்றால் விசாரனை சென்னையில் நடந்திருக்கும்

அமித்ஷா விரித்த வலையில் விஜய் சிக்கிக் கொண்டிருக்கிறார்

யாரை திருப்திப்படுத்தவோ

அல்லது யாருடைய குரலுக்கு மதிப்பளித்தோ தெரியவில்லை

அல்லது அவரது இயல்பான பெருந்தன்மையாகவும் இருக்கலாம்

ஸ்டாலின் முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரைக் கூட சேர்க்கவில்லை

எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்பமாட்டார்கள் என்றார்

அமித்ஷா இரண்டு செய்தார்

1) ஸ்டாலின் பலிவாங்குவதாகவும், 41 பேர் சாவில் திமுகவிற்கு பங்கிருப்பதாகவும் விஜயை சொல்ல வைத்தார்

2) CBI கோர வைத்தார்

அமித்ஷாவிடம் வசமாக விஜய் சிக்கியது இப்படித்தான்

யார் கண்டது

கொள்கை எதிரி தேர்தல் கூட்டாளியாகலாம்

எத்தனையோ பார்த்துவிட்டோம்

 இதையும் பார்ப்போம்

Tuesday, January 6, 2026

தோழரின் ஆதங்கம் தோழமை ஆதங்கம்தான்

 


”காக்கை தமிழர் சிறப்பிதழ்” தந்திருக்கிறோம்
தன்னடக்கமே தேவை இல்லை என்றுதான் தோன்றுகிறது
கொஞ்சம் திமிரோடு எங்களை நாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்கிறோம்
இந்த இதழில் வந்துள்ள ஒவ்வொரு படைப்பையும் சின்னக் குறிப்புகளோடு அறிமுகம் செய்ய ஆசையாக இருக்கிறது
எனக்கென்று சில ஆசான்கள் உண்டு
Su Po Agathiyalingam தோழர் அவர்களுள் மிக முக்கியமானவர்
எத்தனை கொடுத்திருக்கிறார்
எத்தனை எடுத்திருக்கிறேன்
ஒரே ஒரு உறுத்தல் எனக்குண்டு. ஒருபோதும் காக்கைக்காக நான் அவரிடம் எதையும் கேட்காத குற்றம் அது
”அறம்”, ”ஒழுக்கம்”, “பழக்கம்”, “பண்பாடு” - எதுவெனக் கேட்பின்
என்ற இந்த சிறப்பிதழிற்கான அவரது பங்களிப்பு அற்புதம்



எத்தனை இருக்கு எடுப்பதற்கு
அன்றைய அறம் இன்றைக்கு அப்படி அல்ல. அறம் மாறிக்கொண்டிருக்கிறது
அன்றைய ஒழுக்கம் இன்றைக்கு கேள்விக்கு உள்ளாகிறது. எனவே ஒழுக்கத்தின் கூறுகள் நிலைத்தவை அல்ல
ஊருக்கு ஊர் பழக்கம் மாறுகிறது. காலத்திற்கு காலம் மாறுகிறது. ஆக, பழக்கத்திற்கான லட்சணங்களும் நிலைத்தவை அல்ல
வழக்கமும் அப்படியே
எல்லாம் மாறுகிறபோது சனாதனம் மட்டும் மாறவே மாறாதது என்பது அயோக்கியத்தனம் என்று நிறுவுகிற கட்டுரை இது
சனாதனத்தை எதிர்ப்பவர்கள் மூவேந்தர்களைக் கொண்டாடுவது தவறல்லவா என்ற தோழரின் ஆதங்கம் தோழமை ஆதங்கம்தான்
வாசித்துவிட்டு சொல்லுங்கள்
எல்லாப் புகழும் முத்தையா தோழருக்கு என்ற இன்னொன்றும் இருக்கிறது

நம்புங்கள்

 


இந்த தமுஎகச கூடுகை நீங்கள் நம்பாவிட்டாலும் தற்செயலானதுதான்
நம்புங்கள்

காக்கையை ஒருபோதும் வியாபாரம் செய்வதில்லை

 


நேற்று வந்திருந்த நண்பனிடம் காக்கையின் தமிழர் திருநாள் சிறப்பிதழைக் கொடுக்கிறேன்

கைகளில் ஏந்தியபடி கொஞ்ச நேரம் அப்படியே அதை வியப்போடு பார்த்துக்கொண்டு நிற்கிறான்

பக்கங்களைப் புரட்டுகிறான்

எழுதியவர்களின் பட்டியலும் கட்டுரைகளின் எண்ணிக்கையும் தன்னை பிரமிக்க வைப்பதாக சொல்கிறான்

படித்துவிட்டு சொல்லுடா

சரி எட்வின் என்றவன் 338 பக்கங்கள் என்கிறான்

அட்டையையும் சேர்த்து 342 பக்கங்கள் என்கிறேன்

இத்தனையையும் 50 ரூபாய்க்கு கொடுக்கறீங்களே. கட்டுபடியாகுமா எட்வின்

காக்கையை ஒருபோதும் வியாபாரம் செய்யறதில்லடா மாப்ள

அடுத்த வாரம் சந்தா கட்டிடறேன் மாப்ள

இதழ் வேண்டுமெனில் தோழர் முத்தையாவைத் தொடர்பு கொள்ளுங்கள்

இதழ் 50 ரூபாய்தான். கொரியர் செலவோடு அனுப்புங்கள். இருக்கும்வரை அனுப்பி வைப்பார்

தோழர் முத்தையா எண் 9841457503

06.01.2026

காரணங்களுள் முக்கியமான காரணம் தோழர் தமிழ்

 


லூசா சார் நீங்க தருமன் சார்
சொன்ன தேதியில் ஏன் விருதுப் பட்டியலை அறிவிக்கவில்லை என்றுதான் கேட்கிறோம்
உங்க ஆள மட்டுமா கொன்றோம். 24 வீட்டுக்காரனையும்தான கொன்றோம் என்பது கொழுப்பெடுத்த வாதமல்லவா
விருதை நிறுத்திவைத்ததற்கான காரணம் உங்களுக்கும் உங்கள் ஆட்களுக்கும் புரியாமல் இருக்கலாம்
ஆனால் நாங்கள் அறிவோம்
காரணங்களுள் முக்கியமான காரணம்
தோழர் தமிழ்

Monday, January 5, 2026

காங்கிரசை அழிக்க காங்கிரசே போதும் என்பது மாறத டெம்ப்லெட்

 காங்கிரசில் இருந்துகொண்டு சிலர் பாஜகவிற்கு வேலை செய்துகொண்டிருப்பதாக ராகுல் சமீபத்தில் கூறியிருக்கிறார்

அவர்களில் இருபதுபேரை நீக்க இருப்பதாகவும்கூட அவர் கூறி இருக்கிறார்
காங்கிரஸ்காரர்கள் சிலர் பாஜகவிற்கு வேலை பார்க்கிறார்கள் என்று அவர் கூறவில்லை. காங்கிரசில் இருந்துகொண்டு என்று மிகச் சரியாகக் கூறுகிறார்
இது தெளிவு
அவர்கள் RSS ஆட்கள்
அவர்கள் எல்லா கட்சிகளிலும் இருப்பார்கள். ஒருபோதும் அவர்கள் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை
அப்படித்தான் காங்கிரஸ் கட்சியிலும் அவர்கள் நிரம்பி வழிகிறார்கள்
ஒன்றிய RSS வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாட்டின் காங்கிரஸ் RSSகாரர்கள் காங்கிரஸ் இல்லாத தமிழ்நாட்டை கட்டியமைக்க முயற்சி செய்கிறார்கள்
அவர்களது திட்டம் எளிதானது
1) 40 சீட், அதிகாரத்தில் பங்கு என்று குட்டையைக் குழப்புவது. திமுகவை ஆத்திரப்படுத்துவதன்மூலம் கூட்டணியை சிதைப்பது
2) எப்படியும் தவெகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடுவது
3) இதன்மூலம் இங்கும் இல்லாமல் அங்கும் போகமுடியாமல் காங்கிரசை தனிமைப்படுத்துவது
காங்கிரசை அழிக்க காங்கிரசே போதும் என்பது மாறத டெம்ப்லெட்
05.01.2026

Sunday, January 4, 2026

அணிய விரும்புவர்களின் அணிதலுக்கான உரிமைக்காவும்

 




நேற்று நண்பர்களை சந்திப்பதற்காக திருச்சி சென்றிருந்தேன்
உரையாடிவிட்டு, உணவருந்திவிட்டு திரும்புவதற்குத் தயாராகிறேன். TVS தோல்கேட் சென்று பேருந்து ஏறிக்கொள்ளலாம் என்று ஏற்பாடு.
உறையூரிலிருந்து TVS தோல்கேட் வரை ஆட்டோ ஏற்பாடு செய்கிறார்கள்
அவரது குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறேன்
மூத்த குழந்தைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் இரண்டாவது குழந்தை KAPV பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள் என்றும் கூறினார்
வாத்தியார் புத்தி பணி ஓய்வு பெற்றபின்பும் போகவில்லை.
பாப்பா எப்படி படிக்கிறா
சூப்பரா படிக்கிறா சார்
நல்லா படிக்க வையுங்க பாய்
வேண்டாம் சார். பத்தாம் வகுப்பு முடித்ததும் மார்க்கம் படிக்க வச்சு கட்டிக் கொடுத்துடனும் சார்
ஏங்க பாய் நல்லா படிக்கிற குழந்தைய போய்...
இடை மறிக்கிறார்,
ஏன் சார் மார்க்கத்தை நல்லா படிக்கிறவங்க படிக்கக்கூடாதா சார்
சிரிக்கிறார்
நானும் சிரிக்கிறேன்
இல்லீங்க பாய், இந்த காலத்துல பொம்பளப் பசங்க சம்பாரிச்சா சுயமிழக்காம இருக்கும்ல
ஆமா சார், வேலைக்கு உத்தரவு வாங்கப்போன பொண்ணோட ஹிஜாப்ப முதலமைச்சரே (நிதீஷ் குமார்) உருவறார். அந்தப் பொண்ணு வேலைக்கே போகல.
இவ்வளவுதான் சார் எங்களுக்கான பாதுகாப்பு
நானே சன்னமா உடைகிறேன்
”சமரசம் - 2026 ஜனவரி 1-15” தலையங்கம் இந்தக் கொடுமையை விரிவாக எடுத்து வைத்திருக்கிறது
பெண்கள் வேலைக்குப் போவதே அரிதாக இருக்கிறது
அதுவும் இஸ்லாமியப் பெண்கள் இன்னும் அரிதாகத்தான் பணிக்கு வருகிறார்கள்
15.12.2025 பீகாரில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணியாணைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்
அந்த 1,283 மருத்துவர்களுள் நுஸ்ரத் பர்வீனும் ஒருவர்
அவரது ஹிஜாப்பைத்தான் நிதீஷ் பிடித்து இழுத்திருக்கிறார்
அந்தக் குழந்தை மனதளவில் சிதைந்திருக்கிறாள்
அதைவிடக் கொடுமை அதைக் கண்டு அருகில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேயும், முதல்வரின் முதன்மைச் செயலர் தீபக் குமாரும் சிரித்திருக்கிறார்கள்
என்ன ஜென்மங்கள் இவர்கள்
உடைந்து செத்துப்போன பர்வீன் பணியில் சேரவில்லை
முகநூலிற்குப் போனால்,
தான் இப்போது ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண். எனவே தான் மரணிக்கும் பொழுது தனது பழைய படங்களை போட்டு தனது மரண செய்தியை அறிவிக்க வேண்டாம் என்றும் ஹிஜாபோடு வெளியிடுமாறும் மக்களை நடிகை மும்தாஜ் கோருகிறார்
இருவருக்கும் மட்டுமல்ல
அனைத்து இஸ்லாமியத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும்
ஹிஜாப் போடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டியது நீங்கள்
அணிய விரும்புவர்களின் அணிதலுக்கான உரிமைக்காவும்
அணிய விரும்பாதவர்களின் மறுத்தலுக்கான உரிமைக்காகவும்
இடது சமூகம் எப்போதும் களமேகும்
04.01.2026

அது சிவாஜி போலவும் இருந்தது

 

நேற்று திருச்சி புத்தூர் பெரிய ஆஸ்பத்திரி பக்கத்தில் நானும் ஆட்டோ நண்பரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது எதிரே ஒரு அழகான சிலை
ஹென்றி பெண் உள்ளிட்டு நமக்குத் தெரிந்த யார்யாரோ போலிருந்தது
அதனால் அந்த சிலை மிக நெருக்கமாக வந்துவிட்டது
சிலை அழகா இருக்குங்கள்ள பாய் என்கிறேன்
சிவாஜி சிலைனா சும்மாவா சார்
சிவாஜி சிலை என்று அவர் சொன்னபிறகு உற்றுப் பார்க்கிறேன்
அது சிவாஜி போலவும் இருந்தது

03.01.2026

Saturday, January 3, 2026

வெனிசுலாவின் பக்கமும் க்யூபாவின் பக்கமும்

 

வெனிசுலா தாக்கப்பட்டதாகவும், அதிபர் நிகோலஸ் மதுராவும் அவரது இணையரும் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் கூறுகிறார்
போதைப் பொருள் கடத்தலுக்கு நிகோலஸ் உதவுவதாக அவர் குற்றம் சொல்கிறார்
இப்படித்தான் இராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா கூறியது. சதாம் உசேனைக் கொன்றது.
எல்லாம் முடிந்தபிறகு இராக்கில் ஏதுமில்லை என்று வெட்கமில்லாமல் சொன்னது
ஈராக்கில் மூக்கை நுழைத்துப் பார்த்தது
பாலஸ்தீனத்தை ரியல் எஸ்டேட் பிசினசின் மூலம் கூறுபோட இருப்பதாகக்கூட கொஞ்சம்கூட அறமே இல்லாமல் ட்ரம்ப் கூறினார்
இப்போது வெனிசுலா
இது நீண்டகாலத் திட்டம்
இதன் பின்னணியில் போதை இல்லை
நாமறிய வேறு இரண்டு இருக்கிறது
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சடோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டபோது அதில் அரசியல் இருப்பதாக சொன்னது வெள்ளை மாளிகை
இப்போது அதே வெள்ளை மாளிகை அதே மரியாவை பொம்மை அதிபராக்க முயற்சி செய்யும்
வெட்கமே இல்லாமல் ட்ரம்ப் அவரோடு கைகுலுக்குவார்
ஏற்கனவே சொன்னதுமாதிரி இரண்டு காரணங்கள் உள்ளன
ஒன்று வெனிசுலாவின் எண்ணெய் வளம்
இரண்டு வெனிசுலாவை முடக்குவதன் மூலம் க்யூபாவை அடக்கிவிடலாம் என்ற நப்பாசை
ஏற்கனவே க்யூபாவில் மின்சாரப் பற்றாக்குறை மிகுதியாக உள்ளது
எண்ணெயை எரித்துதான் க்யூபா மின்சாரம் தயாரித்து வருகிறது
இப்போதுதான் காற்று மற்றும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் அதிக முனைப்பு காட்டுகிறது
க்யூபாவிற்கு எண்ணெய் விற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் தடை விதித்திருக்கிறது
போக அமெரிக்க டாலரில்தான் வணிகம் செய்ய இயலும். க்யூப காசிற்கு டாலர் கிடைப்பதில்லை
மீறி எண்ணெய் தருவது வெனிசுலாவும் ரஷ்யாவும்தான்
அதுவும் பாதியாக குறைந்துள்ள நிலையில்
வெனிசுலாவை கை வைத்தால் எண்ணெய்வரத்து க்யூபாவிற்கு நின்றுபோகும்
ஏற்கனவே உக்ரெய்னோடு போர் இருப்பதால் ரஷ்யாவும் தடுமாறுகிறது
இதைப் பயன்படுத்திக் கொண்டால் ஏற்கனவே தெருவிளக்குகளுக்கே மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் க்யூபா
மருத்துவமனைகள் உள்ளிட்டு எதற்கும் மின்சாரம் இன்றி முடங்கும்
முடித்துவிடலாம் என்பது அமெரிக்காவின் கேவலமான புத்தி
வெனிசுலாவின் பக்கமும் க்யூபாவின் பக்கமும் உலகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்

Thursday, January 1, 2026

அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்


 

இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறான் SFI மாவட்டச் செயலாளர் பிள்ளை ராமு

Al யில் அவனது குறும்பு

பெரம்பலூர் இடதிற்கான என் நம்பிக்கை அவன்

ஆசை ஆசையாக அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்

வருவான்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...