84 பேரென்கிறார்கள், 54 பேரென்கிறார்கள்.
85 ஆயிரம் கோடி ரூபாய் என்பது உறுதியாகத் தெரிகிறது.
தொகை கொஞ்சம் கூடக்கூடுமென்பதே எனதபிப்பிராயம். 85 ஆயிரம் கோடியை வங்கியிலிருந்து வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றி இருக்கிறார்கள். 54 பேரெனில் 1500 கோடி ஒவ்வொருவருக்கும் சராசரியாக, 84 பேரெனில் 1000 கோடி ஒவ்வொருவருவருக்கும் சராசரியாக வருகிறது.
40000 ரூபாய் இரண்டுசக்கர வாகனக் கடன் வாங்கி இரண்டு தவணையை ஏதோ காரணங்களால் கட்டமுடியாமல் போனால் விரட்டிக்கொண்டு வந்து மனைவி குழந்தைகளோடு பயணிப்பவனை நடுவழியில் இறக்கிவிட்டு வண்டியைப் பிடுங்கிக் கொண்டு போகும் வங்கிகள்...
கல்விக் கடன் பெற்ற குழந்தைகள் வேலை கிடைக்காது கடனை கட்ட முடியாது தவிக்கிறபோது புகைப் படத்தோடு பிளக்ஸ் வைத்தும் அம்பானியின் அடியாட்களை வைத்து மிரட்டவும் செய்யும் வங்கிகள்....
வரவேண்டிய டிராக்டர் கடன் தவனைக்காக விவசாயியை மனைவி மக்கள் முன்னாலேயே அடியாட்களைக் கொண்டு தாக்கும் வங்கிகள்..
85 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்ட பெரு முதலாளிகளின் பெயர்களை உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கேட்டும் தருவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று வங்கிகள் சொல்ல முடியுமென்றால் அந்த சட்டங்களை மாற்றுவதற்கு இதுதான் தருணம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்