Saturday, October 8, 2016

கடிதம் 19

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
நலம்தானே?

ஐம்பது படைப்பாளிகள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆசையை முகநூலில் வைத்து கருத்து கேட்டிருந்தேன். நிறையபேர் மகிழ்ச்சியோடு ‘செய் எட்வின்’ என்றிருந்தார்கள்.
இது ஒன்றும் புதியதும் இல்லை. இது பட்டியலும் இல்லை.
ஏற்கனவே ‘புதிய தரிசனம்’ இதழிலில் ‘வலைக்காடு’ என்றொரு தொடர் எழுதினேன். எனக்குப் பிடித்த வலை தளங்கள் (BLOGS) குறித்து எழுதினேன். உண்மையைச் சொல்வதெனில் என் கவனத்திற்கு வந்த வலைகளுள் சில வலைகளைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் அது ’வலைக்காடு’ என்ற தலைப்பிலேயே பரிதி பதிப்பக வெளியீடாகவும் வந்தது.
வாசிப்பவர்களின் எண்ணிக்கை தங்களுக்கு கூடிப் போனதாகக் கூட சில நண்பர்கள் சொன்னார்கள்.
சில தோழர்கள் இப்போது இருக்கும் பட்டியல் வெப்பம் என்னை இதை செய்யத் தூண்டுகிறதோ என்றுகூட நினைக்கக் கூடும். அப்படியெல்லாம் இல்லை.
ஏதேனும் வார இதழ் சம்மதித்தால் செய்ய ஆசை. ஒருக்கால் அப்படி வாய்க்காது போயினும் வாரம் ஒருவரது படைப்புகள் குறித்த கட்டுரைகளை எழுதி முகநூலிலும் என் வலைப் பக்கத்திலும் வைக்க நினைத்திருக்கிறேன்
எந்தப் பட்டியலிலும் என் பெயர் ஒருபோதும் இருக்காது. என்னைப் போன்று வெளி உலகம் அறிந்திருக்காத படைப்பாளிகளை அறிமுகம் செய்ய எண்ணம். அதற்காக நூறு விழுக்காடும் அப்படியே என்று சொல்லவில்லை.
விரைவில் அறியப்படாத பேராளுமைகளோடு வருகிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...