"உன்னுடைய அழைப்பிற்கு
எவரும்
செவி சாய்க்கவில்லையெனில்
தனியாகவேனும் நட!
தனியாகவேனும் நட!!"
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு அடுத்து நடந்த பாகப் பிரிவினையில் பாகிஸ்தானின் பங்கு 75 கோடி ரூபாய் என்று கணக்கிடப் பட்டது. அதில் 20 ௦ கோடியை மட்டுமே கொடுத்த அன்றைய நேரு அரசு மீதமுள்ள 55 கோடியைத் தர இயலாது என்று அழிச்சாட்டியம் செய்தது. காஷ்மீர் பிரச்சினையில் தங்களோடு ஒத்துப் போகும் வரை அந்தப் பங்குத் தொகையை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லையென வல்லபாய் படேல் பிடிவாதமாய் கூறிவிட்டார். இந்த நிலையில் இது விஷயத்தில் நேருவிடமிருந்தும் நியாயம் கிடைத்துவிடாது. ஏன் எனில் துருப் பிடித்த இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலை மீறி நேருவால் எதையும் செய்துவிட முடியாது. மன்மோகன் அளவுக்கு சத்தியமாய் இல்லைதான் என்றாலும் நேருவுக்கும் நிறைய நெருக்கடிகள் இருக்கவே செய்தன. இதை உணர்ந்துகொண்ட காந்தி 1948 ஜனவரி 13 அன்று பிர்லா மாளிகையில் உண்ணாவிரததை தொடங்கினார்.அப்பொழுது அங்கு திரண்டிருந்த ஜனங்களை மேலே காணும் தாகூரின் பாடலைத்தான் பாட சொன்னதாக அருணன் சொல்கிறார். (ஆக காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து முதன் முதலில் உண்ணாவிரதம் இருந்தது அநேகமாக காந்திதான் என்று படுகிறது)
அஸ்மா மக்பூல் மேற்காணும் தாகூரின் வரிகளை வாசித்திருக்க சத்தியமாய் வாய்ப்பில்லை. ஆனால் இதற்கு மிகவும் நெருக்கமாக ஒரு நான்கைந்து வரிகளை "பேஸ் புக்" கில் அவர் கொளுத்திப் போட எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி முபாரக் உசிருக்கு பயந்து தனது குடும்பத்தோடு நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்த எகிப்து மக்களின் சகலத்தையும் சுரண்டிக் கொழுத்த சர்வாதிகாரி முபாரக்கிற்கு எதிராக மக்களின் கவனத்தைத் திருப்ப நான்கு எகிப்திய இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீயிட்டுக் கொளுத்திக் கொண்டு செத்துப் போகிறார்கள். எரிந்த அந்த இளைஞர்களின் ஜுவாலையிலிருந்து எகிப்து மக்கள் இருண்டு கிடந்த தங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கண்டார்கள். இதற்கு காரணமாக அமைந்தது இருபத்தி ஆறே வயதான அஸ்மா மக்பூலின் நான்கைந்து வரிகளும் செயலும்தான்.
" தீக் குளித்த நான்கு இளைஞர்களுக்கும் அஞ்சலி செலுத்த "தஹ்ரீக் சதுக்கத்திற்குப்" போகிறேன். என்னைப் போல் சிந்தனை உள்ள எவரும் வரலாம்" என்கிறமாதிரி ஒரு சன்னமான அழைப்பாகத்தான் அவரது முதல் "பேஸ் புக்" குறிப்பு இருந்தது. அவர் சதுக்கத்திற்குப் போன போது ஒரு மூன்று நான்கு இளைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர்.விவரம் தெரிந்து அங்கு வந்த காவலர்கள் அதை அவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை அழைத்துப் போய் எச்சரித்து அனுப்பி விட்டனர். அந்தக் காவலர்களுக்கு மட்டுமல்ல அந்த இளைஞர்களுக்கும் ஏன் அஸ்மா மக்பூலுக்கே அப்போது அவர் அடுத்ததாய் எழுதப் போகும் நான்கைந்து வரிகள் எகிப்தை மட்டுமல்ல உலகையே ஒரு புரட்டு புரட்டப் போகிறது என்பது.
"தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் , ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்க வேண்டும். யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீக் குளிப்பதற்காக அல்ல. என்னை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை, நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள். அல்லாவைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்" என்று அவர் "பேஸ் புக்" கில் எழுதி போட்ட போது லட்சக் கணக்கான மக்களை ஓரிடத்திலே ஒன்றிணைத்து இறுதி வெற்றி கிட்டும் வரை
அவ்விடம் விட்டு நகராமல் அவர்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறாக அது மாறும் என்பதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க நியாயமில்லை.இந்த வரிகளின் விளைவு ' நீங்கள் உங்களை ஆணாகக் கருதினால்' என்ற அவரது அடி மனசில் உறைந்து கிடக்கும் ஆணாதிக்க நம்பிக்கையை விமர்சிக்க விடாமல் நம்மை நகர்த்திப் போகிறது.
பலரது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே கார்களும் பங்களாக்களும் எஸ்டேட்டுகளும் நிறைந்து மென்மையாய் புன்னகைத்துக் கொண்டிருக்க அஸ்மா மக்பூலோ தான் செய்யப் போவதை எழுதினர். எழுதிய படியே செய்தும் காட்டினார்.
"நீங்கள் ஒன்றும் அனாதைகளல்ல, உங்களோடு நாங்களிருக்கிறோம்" என்று போர்ராடத் திரண்டிருந்த எகிப்திய மக்களிடம் உலக மக்கள் ஒவ்வொருவரும் சொன்னோம்.உலக மக்களின் உணர்வுப் பூர்வமான ஆதரவு அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்தது.எழுச்சியடைந்தார்கள். சலிர்க்கிற மாதிரியும் நெகிழ்கிற மாதிரியும் ஏராளம் சம்பவங்கள் அந்தப் போராட்டத்தில்.
"போராடும் மக்களை நோக்கி ஆயுதுங்களைத் திருப்புங்கள். ராணுவத்தையும் என் குடும்பத்தையும் தவிர அனைவரும் செத்துப் போனாலும் பரவாயில்லை. போராட்டத்தை நசுக்குங்கள்" என்ற அதிபர் முபாரக்கின் உத்திரவை ராணுவம் நிராகரித்தது. "எங்கள் மக்கள் மீது துப்பாக்கியைத் திருப்பவா நாங்கள் ராணுவத்தில் சேர்ந்தது?. எதிரிகளிடமிருந்து எங்கள் மக்களைப் பாதுக்காப்பதே அல்லாமல் சொந்த மக்களை அழித்து அதிபரைக் காக்கும் அரண்மனை அடியாட்கள் அல்ல. எங்கள் மக்களின் ஊழியர்கள் நாங்கள்" என்கிற அவர்களின் புரிதலும் தெளிவும் சிலிர்ப்பூட்டும் சம்பவம் எனில் அடுத்த சம்பவமோ நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.
ஒரு அம்மா ஒரு மகன் என்று மிக மிக அழகான குடும்பம். மகன் ராணுவ வீரன். அந்தத் தாய் போராட வருகிறாள் சதுக்கத்திற்கு. அந்தப் புள்ளியில் ராணுவம் என்ன செய்யப் போகிறது என்பதை அந்தத் தாய் உட்பட யாரும் அறிந்திருக்க வில்லை. அதே சதுக்கத்திற்கு அவரது மகனும் ராணுவப் பணிக்காக வருகிறார். அம்மாவும் பிள்ளையும் சதுக்கத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். காலையில் வீட்டிலிருந்து பணிக்குப் புறப்படும் போது வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த போதுகூட அம்மா தான் அங்கே வரப் போவதை சொல்ல வில்லையே என்ற ஆச்சரியம் மகனுக்கு. கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்கிறார்கள். மகன் ராணுவ வீரர்களை நோக்கிப் போகிறார். தாய் போராளிகளோடு போய் சங்கமிக்கிறார்.
தனது ராணுவம் என்று முபாரக் கருதியிருந்த ராணுவம் மக்கள் ராணுவமாக மாறுகிறது. மக்கள் புரட்சி வெற்றி பெறுகிறது. மிரண்டுபோன முபாரக் தன் குடும்பத்தோடு தனது நாட்டை விட்டு தப்பியோடி தனது உசிரக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தீ அண்டை நாடுகளில் பரவுகிறது. குறிப்பாக லிபியாவில் அயோக்கியத் தனத்தில், கொடூரத்தில், முபாரக்கிற்கு கொஞ்சமும் குறைவுபடாத கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டு எழுந்திருக்கிறார்கள். ராணுவம் இன்னும் மக்கள் ராணுவமாக மாறாமல் கடாபியின் இராணுவமாகவே உள்ளது. எனவே அவர்கள் மக்களை நோக்கித் தங்கள் ஆயுதங்களைத் திருப்பி மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஆனால் எந்த ஆயுதத்தாலும் இந்த நொடி வரை மக்களின் எழுச்சியை ஊனப் படுத்த முடியவில்லை.
ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் நமது உச்சரிப்புக்குள் சிக்க மறுக்கும் பல நாடுகளும் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவும் அறிக்கைகளை மட்டுமல்ல படைகளையும் அனுப்பத் தயாராகின்றன. அமெரிக்கா அனுப்பியே விட்டது.

போராட்டம் வெடித்து சில நூறு மக்கள் செத்துப் போன உடனே லிபியா மீது பொருளாதாரத் தடையினை ஐ.நா வீசியது.
லிபியா மக்கள் மீது வானிலிருந்து லிபிய ராணுவம் குண்டுகளை வீசினால் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்துவோம். லிபியா மீது எந்த விமானம் பறப்பதையும் தடை செய்கிறோம் என்று அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிரகடனம் செய்கின்றன.

மக்களை கொல்வதற்கு ஆணையிட்ட கடாபி, அவரது மகன், மற்றும் அதிகாரிகள் மீது இன்டர்போல் எனப்படும் சர்வ தேச காவல் துறை பிடி வாரண்ட் போட்டிருக்கிறது.
மக்கள் நம்பிக்கையோடு தங்கள் போராட்டத்தை நகர்த்துகிறார்கள். இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ லிபிய மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் .
மக்கள் நம்பிக்கையோடு தங்கள் போராட்டத்தை நகர்த்துகிறார்கள். இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ லிபிய மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் .
நாம் நமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் லிபியா மற்றும் போராடும் ஒவ்வொரு
மக்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.
அதே நேரம் உலக மக்களிடம் சில ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் , போராடும் மக்களிடம், "ஏமாந்து விடாதீர்கள்" என்று அன்போடும் அக்கறையோடும் எச்சரிக்கவும் கடமை
பட்டிருக்கிறோம்.
சில நூறு மக்களை அதன் ராணுவமே கொன்று குவித்த போது சற்றும் தாமதிக்காது கண்டனத்தையும் பொருளாதாரத் தடையையும் வெளியிட்ட ஐ. நா சபையும் ,கடாபி
மீது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள சர்வதேச காவல் துறையும் , அமெரிக்காவும் , பிரிட்டனும் ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொள்ளப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?
எகிப்து லிபியா மற்றும் போராடும் என் இனிய மக்களே , நீங்கள் உங்களையும் உலக மக்களின் ஆதரவையும் மட்டுமே நம்புங்கள். முபாரக்குகளைவிடவும் கடாபிகளைவிடவும் கோடி மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அருள் கூர்ந்துஇவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.

மேலே கூறிய செய்தியை எல்லோரும் எழுதினாலும் கடைசி இரு பத்திகளில் கூறிய நியாயத்தை யாருமே கேள்விகேட்கவில்லையே என நினத்தேன்.தாங்கள் கேட்டதற்கு நன்றிகள்...
ReplyDeleteவணக்கம் தோழர்,
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி. கட்டுரையே இறுதிப் பகுதிக்காகத்தானே?
ஒரு கோடையில் ஓரே வார கால இடை வெளியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மக்கள் தங்களது சொந்த ராணுவத்தால் சுட்டுக் கொள்ளப் பட்டபோது கை கட்டி மௌனித்தமைக்கும், ரகசியமாக ஆயுதங்களையும் ராணுவத் தொழில் நுட்பத்தையும் போராடிய எங்கள் மக...்களின் எதிரிகளுக்கு வழங்கிய கள்ளத் தனத்திற்கும் காரணம் என்ன?
ReplyDelete-------------------------------------------------------------------------------------
எகிப்தில் இருக்கும் ஒரு அஸ்மா மக்பூல் போன்று தமிழகத்தில் ஒரு நூறு அஸ்மா மக்பூல் இருந்தும் ஒரு பயனுமில்லை..
காரணம் ,முடிவு எடுக்க வேண்டிய அரசியல்வாதிகளில் பல பேர் ஆணாக இருந்தும் பெண்ணாக இருந்தும் அவர்கள் தங்களின் செயல்களில் எதிர் பாலினத்தார்போல சில சமயங்களில் நடந்து கொள்வதால் ..இந்த இரண்டு பாலினதிற்கும் நடுவே மாட்டிகொண்டு அவர்களை அவர்களே நம்
அஸ்மா மக்பூல் போன்று ' நீங்கள் உங்களை ஆணாகக் கருதினால்' இல்லை "பெண்ணாக கருதினால்" என்று கேள்வி கேட்டால் குழம்பி விடுகிறார்கள்..இவர்களுக்கெல்லாம் இதைவிட இன்னும் கூர்மையாய் கேட்க வேண்டும் ....
அப்படி கேட்டால் மட்டும் போதாது , தாகூரின் வரிகளை வாசித்திருக்க சத்தியமாய் வாய்ப்பில்லாத அந்த அஸ்மா மக்பூல் போன்று நாம் ஒன்றும் வெகு தொலைவில் இல்ல தமிழை விட்டு,எனவே தமிழர்களாகிய நாம் அரசியல் நாடகக்காரர்களை அரியணையில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை மட்டும் விட்டு கொண்டிருக்காதவாறு ,
"வரும் தேர்தலை ஒட்டு மொத்த தமிழனும் புறக்கணித்தால் அதன் வலிமையையும் தமிழின் பெருமையும் உலகறியும் "
ஆனால் அதற்கு வழி இல்லாமல் போய்விட்டதே வழக்கம் போல .. சில நூறு ரூபாய்களை ஓட்டு போட வாங்கிகொண்டு ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை ஒருவனிடம் கொடுத்து மேலும் ஒரு லட்சம் தமிழ் மக்களையும் பரி கொடுத்த கூமுட்டைகள் ,தமிழ் பாவிகள் நாம் !
நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ளாத வரை ! அரசியல்வாதியானாலும் ஆண்டவனானாலும் அவர்களை திருத்த தகுதியற்ற தமிழ் மாக்கள் நாம் !
நன்றி தோழா,
ReplyDeleteஇவ்வளவுதான்