வகுப்புகள்...
மாலை வகுப்புகள்...
சிறப்பு வகுப்புகள்...
இத்தனைக்குப் பிறகும்
தேர்வறையில்
திருட்டுத் தனமாய்
நோட்சைப் பார்க்கிறான்
நோட்சைப் பிடுங்கி...
முதுகில்
இரண்டு பலமாய் போட்டு
கோபம் நிழலாய்
கூடவே தொடர
குறுக்கும் நெடுக்குமாய்
அறையில் நடந்து
"பதினேழு வருஷ அனுபவம் ...
தப்ப முடியுமா?"
பெருமை கொப்பளிக்க
நாற்காலி சேர்ந்து
பற்றிய நோட்சைப் புரட்டினேன்
வினாத் தாளுக்கு
விடை தயாரிக்க
வினாவிற்கான விடைகளை மட்டும், அதிலும் சுருக்கி முக்கியமானதை படிக்கும் பிள்ளையிடம், " இப்படி படிக்காதே " என்று சொல்ல கூட முடிவதில்லை. ஏனெனில் வகுப்பறையில் பாடத்தை வாய்விட்டு படிக்க வைப்பதில்லை . மேலும் ஆசிரியர் பற்றாக்குறை வேறு. இதில் யாரை போய் குற்றம் சொல்வது?
ReplyDeleteமிக அருமை.புத்தகங்களை REFER பண்ணும் பழக்கம் இல்லாமல் போன அவலநிலை நறுக்கென்று பதியும்படி கவிதை வரிகள்.
ReplyDeleteதோழர்கள் மணிச்சுடர் மற்றும் மிருணாவிற்கு நன்றி
ReplyDeleteதோழர்கள் மணிச்சுடர் மற்றும் மிருணாவிற்கு நன்றி
ReplyDelete