Friday, March 18, 2011

ஒரு துண்டுக் கவிதை


வராத கடனுக்கு 
எதை எடுத்துப் போகலாம் 
எனத் தேடும்
ஈட்டிக்காரனிடம் 
பொக்கை வாய்ச் சிரிப்போடு
இரண்டு கைகளையும் 
நீட்டித் தாவும் 
என் குழந்தை  

6 comments:

  1. எதார்த்தம் ... அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பான தோழமைக்கு,
    வணக்கம்.
    நலம். தானே தோழர்?
    இல்லத்தில் அனைவரின் நலம் அறிய விழைவும், தங்கள் கண் ரீதியான பிரச்சனை தற்போது எப்படியிருக்கிறது? என்ற வினவோடும்.......

    தங்களின் வலைப்பக்கத்தைப் பார்த்தேன். நன்று.
    அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

    18ம் நாளிட்ட ஒரு துண்டுக் கவிதை அருமையாக இருந்தது.
    இன்னமும் எட்வின் என்கிற கவிஞன் தொலைந்து போகவில்லை.
    பிறகு ஏன் ஒரே கட்டுரைத் தொகுப்புகளாக.
    எப்போது கவிதைத் தொகுப்பு?

    தோழமையுள்ள.......
    பாட்டாளி

    ReplyDelete
  3. நன்றி பாட்டாளித் தோழா

    ReplyDelete
  4. அடடா காட்சியை கண் முன் கொண்டு வந்து மனம் கனக்கச் செய்தது.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...