Wednesday, April 9, 2025

ஆளுநரே வேண்டாம் என்று

 ஆளுநரின் அதிகாரம் குறித்து 08.04.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஒப்பினீயன் தமிழ் சேனலில் தோழர் வல்லம் பஷீர் சொன்ன ஒரு விஷயம் எனக்கான பாடம்

கற்றுக் கொண்டேன்
ஆளுநரை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது? என்று நினைப்பவன் நான்
அடிக்கடி அதுகுறித்து எழுதியும் வந்திருக்கிறேன்
ஏன் அரசியல் அமைப்பு நிர்ணய சபை இதை கணக்கி கொள்ளவில்லை என்ற அய்யமும் எனக்கிருந்தது
தோழர் வல்லம் பஷீர் நேர்காணலில் எனக்கு தெரிய வந்தது என்னவெனில்
இந்த விஷயத்தை அரசியல் நிர்ணயசபை அமைக்கும்போது கணக்கில் எடுத்திருக்கிறார்கள்
ஆளுநரே வேண்டாம் என்று பேசியிருக்கிறார்கள்
அம்பேத்கர் அமைதிப் படுத்தி இருக்கிறார்
மாநிலம் ஒன்றியம் இடையில் அப்படி ஒரு பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம். இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறியிருக்கிறார்
சரி, தேர்ந்தெடுக்கலாமே
அப்போது அம்பேத்கர் சொன்னாராம்
அப்படி தேர்ந்தெடுத்தால் அவர் முதல்வரைவிட பெரியவர்போல நடந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். நியமனமே போதும்
அண்ணலுக்கும் நன்றி
பசீருக்கும் நன்றி

09.04.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...