Thursday, February 29, 2024

இதைத்தான் காந்தி செய்தார்

 காந்தி முஸ்லிம்களுக்காக மட்டுமே எப்போதும் பேசினார் என்பது காந்தியைக் குறித்து அவரது எதிரிகள் எப்போதும் வைக்கும் குற்றசாட்டுகளில் ஒன்று

கோட்சேயும் காந்தி மீதான தனது முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்றாக இதை வைத்தான்
1947 ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த DAWN என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்
பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் வாய் கிழிய பேசும் காந்தி, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பேசுவாரா?
என்று கேட்டிருந்தார்
காந்தி கோவமேப் படவில்லை. அவர் சொன்னார்
நான் எந்தப் பகுதியில் வசிக்கும் எந்த வகை சிறுபான்மையினராயினும் அவர்களது பாதுகாப்பு குறித்து கவலைப் படவும் பேசவுமே செய்வேன்
நான் முஜிபுரிடம் பேசுவதுபோலவே ஜவஹரிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்
என்று சொல்லியதோடு நிறுத்தாமல்
டான் பத்திரிக்கையின் ஆசிரியரும் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து உத்திரவாதமளிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்
அவரும் இதை ஏற்கிறார்
இதுதான் காந்தி
ஒருக்கால் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்து சிங்களவர்களை தமிழர்கள் தாக்கிக் கொண்டிருந்தால் தான் சிங்களவர்களுக்கு ஆதரவாகத்தான் எழுதுவேன் என்று ஒருமுறை தோழர் இன்குலாப் கூறினார்
இதைத்தான் காந்தி செய்தார்

1 comment:

  1. உங்கள் உரை வீச்சு மிக்கதாக இருந்தது

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...