ஏதோ
ஏழெட்டு நாட்களுக்கு முன்பே
விடிந்தது போல்
நீளமாய் நகர்கிறது எனது இன்று
ஒரு மணி போராட்டத்தில்
ஒரு நொடி நகர்கிறது
அழுத்த அழுத்த
கண்களை உடைத்துவிட வேண்டாமென
மரமல்லி மரம் போகிறேன்
நாலைந்து பூக்களைத் தலை சிரிந்து
ஆறுதலிக்கும் அந்த மரத்தாயை
அண்ணாந்து பார்க்கும் அந்தப் புள்ளியில்
காம்பைப் பிரிகிறது ஒரு பூ
காம்புகளைப்
பிரியும்தான் பூக்கள்
ஆனாலும்
அந்தப் பூவை
அது காம்பைப் பிரியும்போது
பார்த்திருக்க வேண்டாம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்