இது இந்தியாவில் இருக்கிற ஒரு மாநிலம்
நாங்கள் ஆயிரம் விமர்சனங்கள், கோவம், வெறுப்பு இன்னும் எத்தனையோ இருந்தபோதும் எங்களது தேசமென்றும் எங்களது மத்திய அரசாங்கம் என்றுதான் கருதி வாழ்கிறோம்
கருப்புக் கொடியை எம் பிள்ளைகள் காட்டியதுகூட எங்களுக்கான நியாயமான தண்ணீர் உரிமையை எங்களுக்கு வாங்கித் தர மறுக்கிறாரே எங்கள் பிரதமர் என்ற கோவத்தை வெளிக்காட்டத்தான்
ஒருக்கால் அடுத்தநாளே அவர் வாரியத்தை அமைத்து எங்கள் உரிமைக்கான அங்கீரத்தைக் கொடுத்திருந்தால் அதற்கு அடுத்த நாளே எம் பிள்ளைகள் பூங்கொத்தோடு பிரதமர் இல்லம் போயிருப்பார்கள்
ஆனால் எம் மண்ணை தமது மண்ணாகவும் எங்களைத் தம் மக்களாகவும் கருத மறுக்கிறார்களோ எங்கள் துரைமார்கள் என்று கருதத் தோன்றுகிறது
என்ன வன்மம் எங்கள்மீது உங்களுக்கு?
எதிரி நாட்டிற்கு படையை அனுப்புவதுபோல் ஒரு சிறிய மாவட்டத்திற்குள் ஆயிரக் கணக்கில் ராணுவத்தைக் குவித்திருக்கிறீர்கள்
சூறையும் சமுத்திரமும் கலந்துகட்டி எம் மீனவர்களை வேட்டையாடியபோது ஏதோ கார்டூன் படம் பார்ப்பதுபோல் இருந்தீர்களே எங்கள் கனவான்களே
நதிநீர்ப் பிரச்சினையில் இரண்டு மாநிலங்களுக்கிடையே கருத்து முரண்பாட்டில் நீதிபதியாய் இருந்து பரிபாலனித்திருக்க வேண்டிய நீங்களும் எங்கள் பிரதிவாதியாகவே மாறினீர்களே
நீட் வேண்டாம் என்பது எங்கள் உரிமை. கேட்கிறோம். அதற்காக எம் பிள்ளைகளை ராஜஸ்தானுக்கு தேர்வு எழுத கூறுவது சகிக்கவே முடியாத வன்மம் அல்லவா?
லண்டன் போகிறீர்கள். ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் வரவேற்பு விளம்பரங்களைத் தருகிறார். இப்போது ஆலையை விரிவு செய்வேன் என்கிறார். பொருத்திப் பாருங்கள் பெரியவர்களே?
மீத்தேன் எடுத்தே ஆக வேண்டும் என்பதில் எப்படி இத்தனை கோர முகம்.
என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் துரைமார்களே?
அல்லது என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்