Wednesday, May 2, 2018

இது வதந்தியாகட்டும்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை ”அரசியல் அறிவியல் “ பிரிவு வினாத்தாளில்
1) கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் GST யின் கூறுகள் குறித்து விவரி
2) உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்த முதல் இந்தியச் சிந்தனையாளர் - நிறுவு
ஆகிய இரு வினாக்கள் இருந்ததாக சில நாட்களுக்கு முன் மிகுந்த கவலையோடு தெரிவித்திருந்தார் தோழர் Mangai Arasi
கவலைப்படுவதற்கும் கவனம் குவிப்பதற்குமான விஷயம்தான்
அரசியல் அறிவியலில் முதுகலை படிக்கும் பிள்ளையை இந்தக் கோணத்தில் சிந்திக்க வைப்பது எப்படித் தவறாகும் என்றுகூட கேட்கலாம். அந்தப் பதிவிலேயே கிட்டத்தட்ட அதே மாதிரி ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு மங்கையும் மிகச் சரியாகவே பதில் சொல்லி இருக்கிறார்
அரசியல் அறிவியல் படிக்கும் பிள்ளைகள் இதுபோல பரந்துபட்டுத் தெளிவது அவசியம்தான்
பிரச்சினை என்னவெனில்
அவர்கள் GST கு எதிரான சிந்தனையாளர்கள் குறித்தோ அல்லது உலகமயலுக்கு எதிர்ச் சிந்தனையாளர்கள் குறித்தோ பிள்ளைகளை சிந்திக்க விடுகிறார்களா? முழு மனதோடு விவாதிக்க அனுமதிப்பார்களா?
மார்க்சை, தந்தை அம்பேத்கரை, அமர்த்தியா சென்னுடைய மாற்றுப் பொருளாதாரப் பார்வையை சிலபசுக்கு வெளியே இருந்து பிள்ளைகள் சிந்திக்கக் கோருவார்களா?
ஒரு அமைச்சர் சொல்கிறார்,
கூகுளே நாரதரின் நீட்சி என்று
ஒரு முதலமைச்சர் சொல்கிறார்,
புராண காலத்தில் இணையம் இருந்ததென்று
ஒரு மாநிலத்தில் 150 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு குழந்தைகூட தேர்ச்சி பெறவில்லை என்று
ரயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன
அநேகமாக அடுத்த ஆண்டு முதல் நம் மண்ணில் பொதுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை இருக்காது என்று தெரிகிறது ( இது வதந்தியாகட்டும்)
நான்குபுறமும் கவலைகளே நம்மை சூழ்ந்திருக்கின்றன
குறைந்தபட்சம் இவை குறித்து அக்கறையோடு முதலில் பேசுவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...