மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு,
வணக்கம்.
நீங்கள் நலமென்பதும் நாங்கள் யாரும் நலமில்லை என்பதும் நீங்கள் அறிவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
எங்கள் மண்ணைக் கடந்து கர்நாடகம் சென்றிருக்கிறீர்கள்.
மகிழ்ச்சி
ராகுலுக்கு இல்லாத, எந்தக் குறிப்பும் இல்லாமல் 15 நிமிடம் பேசுகிற ஆற்றல் உங்களுக்கு இருப்பதாக ஒரு கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறீர்கள்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக மேடையில் இருப்பவன் என்ற வகையில் அதன் நிறை குறைகள் எனக்குத் தெரியும் என்பதோடு குறிப்பிருக்கிறதா இல்லையா என்பதில் எதுவும் இல்லை. என்ன பேசுகிறோம் என்பதிலும் , கேட்கிறமாதிரி பேசுகிறோமா என்பதிலும் இருக்கிறது எல்லாம்.
இன்னும் சொல்லப்போனால் மக்களுக்கான உரையாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒழுங்காகப் பேசாவிட்டாலும் மக்கள் அதைப் புரிந்து கொள்ளவே செய்வார்கள்.
சரி,
குறிப்பே இல்லாமல் அப்படி என்னதான் பேசினீர்கள்?
இரண்டு மாநிலங்களில் எரிந்துகொண்டிருக்கிற காவிரிப் பிரச்சினைப் பற்றி பேசினீர்களா?
காஷ்மீரில் சிதைக்கப்பட்ட ஆசிஃபா குறித்து பேசினீர்களா?
குழந்தைகளை சிதைத்தால் தூக்கு என்று நீங்கள் சொல்லி 12 மணி நேரத்திற்குள் நீங்கள் இப்போது நிற்கும் பெங்களூருவிலிருந்து ஈரோடு வந்துகொண்டிருந்து குழந்தையை உங்கள் கட்சியைச் சேர்ந்த ப்ரேம் ஆனந்த் என்பவர் வல்லுறவு கொள்ள முயன்று கைது செய்யப்பட்டிருக்கிறாரே. அது குறித்து பேசினீர்களா?
உத்திரப் பிரதேசத்தில் 17 வயது குழந்தையை சட்டமன்ற உறுப்பினரே சிதைத்து சிறை பட்டிருப்பதைப் பற்றி பேசினீர்களா?
கற்பழிப்பெல்லாம் சகஜம் என்பதாகப் பேசும் உங்கள் கட்சி மந்திரிமார்களைப் பற்றிப் பேசினீர்களா?
எம் தந்தை அம்பேத்கரை பார்ப்பணர் என்று சொன்னவரை திட்டி ஏதேனும் பேசினீரா?
இவை பற்றி எதுவும் பேசமால் நீங்கள் எதைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன?
குறிப்புச் சீட்டு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
நன்றி.
அன்புடன்,
ஒரு தமிழ் வாக்காளன்.
ஒரு தமிழ் வாக்காளன்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்