தம்பி இப்படி மகள் அப்படி
விஷ்ணுபுரம் சரவணன் என் மீது மிக மிகையாய் அன்பும் அபிப்பிராயமும் கொண்டுள்ள என் தம்பி.
எது குறித்தும் மிகச் செறிவாய் ஒரு துளி கூடவோ ஒரு துளி குறைவாகவோ எழுத மாட்டார்.
ஆனால் என்னைப் பற்றி எழுதும்போது மட்டும் ஏதோ இவரது அண்ணன் யாருக்கும் இளைத்தவ்ன் அல்ல என்பதான ஒரு தோற்றம் வரும். நானும் அவரை தாயாய்ப் பார்த்து ரசித்துக் கடந்து விடுவேன்.
நேற்று எனது மூன்றாவது நூலின் அட்டைப் படத்தைப் போட்டு இப்படி எழுதி
யிருந்தார்,
”கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுக்கு மேலாக ஒடுக்கப்படுகிற மக்களுக்காக தெருவோர கூட்டங்களில் தொண்டை தண்ணீர் வறள,வறள பேசியும், என் போன்றோர் கவிதை என கொடுப்பதை தன் குழந்தையை தலைக்கு மேல் தூக்கி கொஞ்சுவதைப் போல கொண்டாடியும், கல்வி குறித்து அதீத அக்கறையும் கொண்ட எழுத்துகளை கொண்ட அண்ணன் இரா.எட்வின் அவர்களின் ”இவனுக்கு அப்போது மனு என்றும் பெயர்” எனும் தலைப்பிலான மூன்றாவது கட்டுரை தொகுப்பு சந்தியா பதிப்பக வெளியீடாக வருகிறது எனபதே எனக்கான இப்புத்தக கண்காட்சிக்கான நற்செய்தி”.
எனக்கு அப்படியொரு கூச்சம். ஆனாலும் கீர்த்தனாவிடம் காட்டி சொன்னேன்,
“பார்த்தியாடி வெள்ள, பொதுத் தளத்தில், இலக்கிய வெளியில் எனக்கும் சின்னதா ஒரு இடம் இருக்கு ஆமா”
கீர்த்தி சொன்னாள்,
“ சரி சரி, அப்ப அந்த இடத்த வித்து கடன அடைக்க முடியுமா பாருங்க”
அது என்ன இவ எப்பவும் ஜெயிச்சுகிட்டே இருக்கா என்னை.
இப்படி யாரால் சொல்ல முடியும் ஐயா !
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Deleteகுறைந்தபட்சம் பதினாறு அடியாவது பாய்ந்தால் தானே அது குட்டி.....
ReplyDelete