Wednesday, August 14, 2013

நிலைத் தகவல்...8


  • இன்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து கொணலை என்ற இடத்தில் நின்றபோது மிகச் சரியாக பத்து இளைஞர்கள் ஏறினர். தமிழும் ஹிந்தியும் கலந்துதான் பேச முடிந்தது அவர்களால். சமயபுரத்திற்கு பயணச்சீட்டு வாங்கினர். சமயபுரத்திற்கு மூன்று கிலோமீட்டர் இருக்கும் போது ஒரு இடத்தில்அம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். நிறுத்தச் சொல்லி இந்தியிலும் தமிழிலுமாக நடத்துநரிடம் கெஞ்சினர்.

    அந்த இடத்தில் எழும்பும் கட்டிடத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். நடத்துநர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.

    சமயபுரம் இறங்கி இங்கு வருவதெனில் நிச்சயம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

    “எவ்வளவு சம்பளம்?” ஓட்டுநர் கேட்டார்.

    “ரெண்டு நூறு”

    ஓட்டுநர் அவர்கள் கேட்ட இடத்தில் பேருந்தை நிறுத்தினார். மகிழ்வோடு இறங்கினார்கள். நடத்துனரின் முகம் இறுகியது.

    “ நான் முடியாதுங்கறேன். நீ நிறுத்தினா என்னடா அர்த்தம்?”

    பதிலேதும் சொல்லாமல் ஓட்டுநர் சிரித்தார்.

    “என்ன நக்கலா”

    “இல்லடா மாப்ள. பீகார்ல இருந்து வந்திருக்காய்ங்க. இருனூறு ரூபாய்க்கு சக்கையா நம்மாலுங்க சுரண்டுறாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது ரெண்டு கிலோமீட்டர் நடைய குறச்சிருக்கோம். கோவப் படாதடா. குடிகாரங்க அலும்புக்கெல்லாம் ப்ரேக் போடுறதில்லையா?. பாவம் உழைக்கிறப் பசங்க உடுடா”

    நடத்துநர் எதுவும் பேசவில்லை.

    எனக்கு பேசியே ஆக வேண்டும் என்றாகிவிட்டது. கொட்டிவிட்டேன்.

    முகநூலில் பார்க்க

14 comments:

  1. எளிய மனிதர்களின் வாழ்வில்தான் பெரிய செய்திகள் இருக்கிறது. அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செல்வகுமார்

      Delete
    2. அருமை பதிவு

      Delete
    3. மிக்க நன்றி தோழர் சந்திரா

      Delete
  2. சக்கையாய்ப் பிழியும் முதலாளிகள் மத்தியில் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்ட ஓட்டுநரைப் பாராட்டியே ஆகவேண்டும். நெகிழவைத்தப் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. சக மனிதனின் வலியை ப் புரின்துகொண்டவர்.

    ReplyDelete
    Replies
    1. ஈரத்தோடு இருக்கிறார்.

      Delete
  4. தினமும் இப்படி பல முகங்கள் வாழ்வில் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம்...இப்படிப் பட்ட மனிதர்களைக் காணும் போதுதான் மனதில் மனிதம் இன்னும் சாகவில்லை என்ற எண்ணம் துளிர் விடுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete
  5. கோவப் படாதடா. குடிகாரங்க அலும்புக்கெல்லாம் ப்ரேக் போடுறதில்லையா?. பாவம் உழைக்கிறப் பசங்க உடுடா”
    மனிதம் பேசிய வரிகள் .சிலர் வாழ்க்கையில் பிரேக்போடவேண்டிய இடத்தில போடாமல் நடத்துனர் போல மற்றவரைக்குறைசொல்லி(வாழ்கையை) மனிதத்தை இழக்கிறார்கள் .

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...