- ”நீரோடும் வைகையிலே
நின்றாடும் மீனே”
அப்பாவிற்கு மிகவும் பிடித்தமான பாடல்.
இப்பல்லாம் யாருடா இப்படி ஆபாசம் இல்லாம இலக்கியத் தரத்தோடு எழுதறாங்க என்பார்.
”இதிலாப்பா ஆபாசம் இல்ல?”
”ஆமாண்டா. இருந்தா காட்டு”
“நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே...
அந்தக் கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே”
”இதுல ஆபாசம் இல்லையாப்பா?
“ ? ”
”தாம்பத்தியத்தை ஆண் கவிதையாகவும் பெண் அதை ஆணின் கருணையாகவும் பார்ப்பது பெண்ணடிமைத் தனமில்லையா அப்பா? இது ஆபாசமில்லையா?”
“ஆமாந்தாண்டா.”
தட்டிக் கொடுத்தார்.
அவர் பழைய பாடல்களின் காதலர். கவிஞர்களின் வரிக்காகவே குறிப்பாக கண்ணதாசன் வரிகளுக்காகத்தான் பாடல்களைக் கேட்கிறோமே தவிர பாடகர்களும் இசையும் இரண்டாம் பட்சம்தான் என்றார் ஒருநாள்.
“மோசமான வரிகளைக்கூட இசைக்காகவும் பாடிய விதத்திற்காகவும் கேட்டிருக்கோம்.”
”ஒன்னு சொல்லு”
“ எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”
“ கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே”
“ஆமாண்டா”
சூப்பர் சிங்கர் T20 யில் ஒரு பாடல்
ஆண்
“உன் சமையலறியில்
நான் உப்பா சர்க்கரையா”
பெண்
“உன் படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா?”
கீர்த்தி , விட்டு, நான்சி எல்லோரும் குதிக்கிறார்கள் எவ்வளவு அழகான மெலோடியசான பாடல் என்று.
”ஏய் வெள்ள அசிங்கமான பாட்டுடீ இது”
“ இது அசிங்கமா. எப்புடி?”
ஆம்பளைனா புத்தக அறை, கண்கள், புத்தகம். பெண் என்றால் சமயலறை, உப்பு, சர்க்கரை. இது அசிங்கமில்லையாடி வெள்ளப் பண்ணி?”
“சரியாந்திர லூசுப்பா நீ”
Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன் முருகனின் ஐந்தாம் படை வீட...
-
அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானது அவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள் அத்வானிக்கே...
Superb ...! மிகச்சிறப்பாக உள்வாங்கியிருக்கின்றீர்கள் ...!
ReplyDeleteyou are a man..
ReplyDeleteமிக்க நன்றி மது. தொடர்ந்து சந்திப்போம்
Deleteநான் காதலென்னும்
ReplyDeleteகவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே...
அந்தக் கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே”
இது பெண் தன்னையே ஏமாற்றிக் கொள்வது....இப்படி இருந்தால் என்ன?
நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே...
அந்தக் கவிதைக்கு நான்
அர்த்தம் தந்தேன்
தொட்டிலின் மேலே”...
ஏதோ எனக்குத் தெரிந்த அளவு...
---
ப்ரியமுடன் பிரேமலதா