சந்திர பாபுவின் சேட்டை கலந்த நகைச்சுவை எவ்வளவு ஆழமானவை என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ளும் நிலை இல்லை. அவரது நடிப்பின் உசரத்திற்கு ஒரு மில்லி மீட்டரும் குறைவானது அல்ல அவரது பாடல்கள்.
அத்தனை ரசத்திலும் பாடியிருக்கிறார்.எத்தகையப் பாடல்களுக்கும் ஏற்ப வளைந்து நெளிந்து கச்சிதமாகப் பொருந்தும் அவரது குரல்.
“ குங்குமப் பூவே
கொஞ்சும் புறாவே”
என்று கொஞ்சிக் குழையும் அவரது குரல்
“ நானொரு...
முட்டாளுங்க”
எனும் போது அவரது எள்ளலுக்கு ஏற்றபடி இசையும்.
“பிறக்கும் போதும்
அழுகின்றான்
இறக்கும் போதும்
அழுகின்றான்
ஒரு நாளேனும்
கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே”
என்ற பாடலில் பாடலின் வரிகளுக்கு அவரது குரலும் உச்சரிப்பும் என்னை வெகுவாய் ஈர்த்தன.
ஆனாலும் அத்தனையையும் மீறி என்னைப் பிசைந்தது அவரது கனமான குரலில் வந்து விழுந்த வரிகள்தான்.
ஆமாம் மனிதன் எதற்குத்தான் அழவில்லை.
மட்டுமல்ல ஒரே சோகத்திற்காக எத்தனை முறை தவனையில் அழுகிறான்.
ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறக்கும் நம்மை நினைத்து உளைந்து கொண்டிருந்த போது ஹெட்ஸி அனுப்பியிருந்த ஒரு விசயம் இதோடு வெகுவாகப் பொருந்திப் போகிறது.
ஒருவர் ஒரு நகைச்சுவைத் துணுக்கை சொல்கிறார். கூடியிருந்த கூட்டம் ஆரவாரிக்கிறது.
இரண்டாவது முறை அதை சொல்கிறார். இப்போது எழுபது சதம் பேர் ஆரவாரிக்கிறார்கள்.
மூன்றாவது முறை ஐம்பது சதமான ஆரவாரம், நான்காவது முறை சுத்தமாக நின்று போனது.
அப்போது அவர் சொன்னார்,
ஒரே நகைச்சுவைத் துணுக்கை நான்காவதுமுறை ரசிக்க மறுக்கும் நாம் ஏன் ஒரே கவலையை ஆயுசு முழுக்க சுமந்து தவணை முறையில் அழுகிறோம்.
அதானே.

முகநூலில் வாசிக்க
arumayaana karutthu . Naam ellorum ninavil vaikka vendiyathu. Nandri.
ReplyDeleteமிக்க நன்றி ரமேஷ்
DeleteMiga nalla karuthukkal. Nandri
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteகவலைகளின் இன்ஸ்டால்மெண்ட் கட்டி தீர்ப்பாரில்லை...!
ReplyDeleteமிக்க நன்றி செல்வகுமார்
Deleteஎன்.எஸ். கிருஷ்ணன் சொன்ன மாதிரியான நன்மை செய்யும் மை தொட்டு எப்பவும் எழுதுகின்றீர்கள்.
ReplyDeleteமிகுதியான பெருந்தன்மையோடு தாங்கள் சொல்வது புரிந்தாலும் மகிழ்வாய்த்தானிருக்கிறது. மிக்க நன்றி சரவணன்
Deleteஇன்பமும் துன்பமும் கலந்தது தான்வாவாழ்க்கைஆனால் துன்பத்தை மட்டும் நினைத்து நினைத்து எதிர்வரும் இன்பங்களையும் இழந்து விடுகிறான்...நல்ல பதிவு ஐயா :)
ReplyDeleteநல்ல செய்தி... நறுக்
ReplyDeleteநன்றிகள்