Saturday, August 24, 2013

நிலைத்தகவல்...14


இரா எட்வின்
August 4
காலை ரெங்கராஜ் சார் அலைபேசியில் அழைத்தார்.

1977-78 இல் எனக்கு பத்தாம் வகுப்பு கணக்கெடுத்தவர். என் மீது அன்பைப் பொழிபவர்களில் அவர் யாருக்கும் இரண்டாமவர் இல்லை.

திடீரென பள்ளிக்கு வருவார். பேசிக் கொண்டிருப்பார். போய்விடுவார்.

திடீரென சத்திரம் வாடா என்பார். ஓடுவேன். “சும்மாதான் , பார்க்கனும்னுதான் கூப்பிட்டேன்” என்பார்.

கையைக் கட்டிக் கொண்டு நிற்பேன். “ சரி கிழம்பு. புள்ளைகள பத்திரமா பார்த்துக்க “ என்பார். திரும்பி விடுவேன்.

அப்பாவின் மரணத்திற்கு வந்தவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதார். தேற்றினேன்.

இன்று காலை அழைத்தார்.

“ வணக்கம் சார். சொல்லுங்க.”

“ எங்கடா இருக்க.”

“ வீட்ல”

“ வீட்லன்னா. கடவூரா? பெரம்பலூரா?”

” பெரம்பலூர்”

” சரி, வரேன். வந்ததும் போன் செய்றேன். வந்து கூட்டிட்டுப் போ”

“ சரிங்க சார்”

“ வந்தார்.

” வாங்க சார் போகலாம்”

“ வேண்டாம் இங்கேயே பேசலாம்”

பேசிக் கொண்டிருந்தோம்.

“ சரி. புறப்படவா.”

“ என்னங்க சார் வீட்டுக்கு வராம”

” பார்க்கனும்னு தோணுச்சு. வந்தேன். பார்த்துட்டேன். கிழம்பறேன்”

“ என்ன சார் இது. அப்பாவும் போயிட்டாங்க. நீங்களும் வீட்டுக்கு வராம போறீங்க”

“ அப்பா போயிட்டாரா. இருக்கேனேடா”

இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.

51 comments:

  1. அருமை வாழும் தெய்வம்.

    ReplyDelete
  2. வாழும் தெய்வங்கள் இவர்கள். இப்படியான மஹாபுருஷர்களின் அணுக்கமும், அன்பும் ஆயிரத்திலொருவருக்குத்தான் வாய்க்கின்றன. அவரைக்கவனமாகப் பேணுங்கள்.நீங்கள் கொடுத்துவைத்தவர் எட்வின்.

    ReplyDelete
  3. இவர்கள் வாழுந்தெய்வங்கள், இப்படியானவர்களின் தரிசனமும், அணுக்கமும் வாழ்க்கையில் சிலருக்குத்தான் வாய்க்கிறது, அம்மஹாபுருஷனை கவனமாக பேணுங்கள். நீங்கள் கொடுத்துவைத்தவர் எட்வின்.

    ReplyDelete
  4. திருமிகு முத்து நிலவன் அவர்களால் தங்களின் வலைப் பக்கம் வந்தேன். இனி தொடர்வேன்

    ReplyDelete
  5. #1977-78 இல் எனக்கு பத்தாம் வகுப்பு கணக்கெடுத்தவர்.#
    அன்று கணக்கெடுத்தவருடன் இன்றும் அன்பு கெடாமல் தொடர்வதற்கு நல்லபுரிதல்தான் காரணமாய் இருக்கும் ,வாழ்த்துகள் இருவருக்கும் !

    ReplyDelete
  6. இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.

    அருமையான கோர்வைகள் சார் எங்கோ போய் எப்படியோ முடித்து விட்டீர் ஒரு அழகிய காட்சி பார்த்து போல இருந்தது :)

    ReplyDelete
  7. அருமையான நினைவுப்பதிவு

    ReplyDelete
  8. உன் பேச்சைக் கேட்பவர்களைத்தான் உன் இஷ்டத்துக்கு அழவும் சிரிக்கவும் வைப்பாய்... இப்போது எழுத்திலும். வாழ்த்துகள் தோழா. எனக்கு இந்த ரெண்டு அனுபவமும் உண்டு. ஆசிரிய அப்பாவாக இப்போதும், மாணவப் பிள்ளையாய் சில காலம் முன்பும் உண்மையில் இதெல்லாம்தான் வாழ்வின் அர்த்தமுள்ள கணங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா,
      எல்லா பின்னூட்டங்களும் என்னை உற்சாகம் கொள்ளவே செய்கின்றன.

      ஆனால் உங்களது பின்னூட்டம் என்னை நெகிழ்ந்து சிலிர்க்க வைக்கிறது. காரணம் எனது எழுத்தாயினும், பேச்சாயினும் இரண்டிலுமே நிச்சயம் நீங்கள் உண்டு.

      Delete
  9. நெஞ்சை தொடும் பதிவு சார்.. மனிதம் இன்னும் உயிரோடு இருகின்றது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு.. தங்களின் ரெங்கராஜ் சார் அவர்கள்..

    ReplyDelete
  10. வெ.ரங்கநாதன் ,உடுமலை.August 24, 2013 at 10:40 PM

    வாழ்க்கையில் நாம் மனிதர்களோடும் பழகினோம் என்பதில் உள்ள சந்தோசம் வேறேதிலும் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்வு.பெருமிதம் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. நெகிழச் செய்த பின்னூட்டம் தோழர். மிக்க நன்றி

      Delete
  11. உண்மையான அன்பு இருக்கும்
    இதயம்
    பதவியை பார்ப்பது இல்லை
    தேவை என்னவோ
    அதுவாக ஆகிறது
    நட்பு எதை இழந்து
    தவிக்கிறதோ
    அதை கலைவதற்காய்
    நிற்கிறது
    புல்லரிப்பில்
    கண் கலங்குகிறது நட்பு

    ReplyDelete
  12. தோழரே..உங்கள் பதிவு எனது தலைமை ஆசிரியர் அப்பா அருணாச்சலம் அவர்களை நினைவு கூறியது...1970-71 இலிருந்து தொடரும் உறவு...
    தற்போது சென்னையில் இருக்கிறார்..அடிக்கடி அலைபேசியில் உரையாடுவார்..நிகழ கால ரசியல் குறித்து மிக ஆழமாக பகிர்ந்து கொள்வோம்..சென்னை வரும்போது தவறாமல் சந்திப்பேன்...அவரும் சொந்த ஊர் (பெரியகுளம்) வந்தால் தவறாது சந்தித்து செல்வார்..என் அப்பாவின் மீது மிகுந்த பற்று கொண்டவர்..கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக தொடரும் உறவு..தங்கள் பதிவு மனதை நெகிழ செய்து விட்டது..அவருக்கு நல் வணக்கம்..உங்களின் ஆசிரியருக்கும் என் வணக்கம்...

    ReplyDelete
    Replies
    1. நானும் நெகிழ்ந்துதான் போனேன் தோழர்.மிக்க நன்றி. ஈரம் எப்போதும் வற்றவே வற்றாது

      Delete
  13. தோழரே..உங்கள் பதிவு எனது தலைமை ஆசிரியர் அப்பா அருணாச்சலம் அவர்களை நினைவு கூறியது...1970-71 இலிருந்து தொடரும் உறவு...
    தற்போது சென்னையில் இருக்கிறார்..அடிக்கடி அலைபேசியில் உரையாடுவார்..நிகழ கால ரசியல் குறித்து மிக ஆழமாக பகிர்ந்து கொள்வோம்..சென்னை வரும்போது தவறாமல் சந்திப்பேன்...அவரும் சொந்த ஊர் (பெரியகுளம்) வந்தால் தவறாது சந்தித்து செல்வார்..என் அப்பாவின் மீது மிகுந்த பற்று கொண்டவர்..கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக தொடரும் உறவு..தங்கள் பதிவு மனதை நெகிழ செய்து விட்டது..அவருக்கு நல் வணக்கம்..உங்களின் ஆசிரியருக்கும் என் வணக்கம்...

    ReplyDelete
  14. arumaiyaana unarvu..guru became father .,

    ReplyDelete
  15. //இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.// நெகிழ்ச்சியான வரிகள் . . . .

    ReplyDelete
  16. //இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.// நெகிழ்ச்சியான வரிகள் . . . . . . .

    ReplyDelete
  17. அதுகாலம் வரை நீங்கள் ஆசிரியராக பார்த்திருந்தவர் உங்களை மகனாக பாவித்திருந்தார் என்பதை அறியாதிருந்திருக்கிறீர்.. அந்த அன்பை தவற விடாதீர்.. தீயாய் பற்றிக் கொள்ளுங்கள் என்னாளும்.. அந்த நல்ல மனம் வாழ்க.. உணர்வுபூர்வமான பதிவு தோழர்... அருமை...

    ReplyDelete
  18. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. தகப்பனான ஆசான் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீங்கள்.... நெகிழ்வாக இருந்தது

    ReplyDelete
  20. Very touching and u r most blessed to get such a wonderful teacher

    ReplyDelete
  21. மனிதர்களுக்குள் மகாபுருசர்கள் இன்னும் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இருக்கவே இருக்காங்க. மிக்க நன்றிங்க அய்யா.

      Delete
  22. ஆசிரியர் - மாணவர் உறவு முறையின், இது முன்மாதிரி..

    ReplyDelete
  23. ஆசிரியர் , மாணவர் உறவுமுறைக்கு , இது முன்மாதிரி...

    ReplyDelete
  24. இப்படி ஒரு ஆசிரியர் நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறென். நெகிழ்ச்சியூட்டும் பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  25. Nanbare, nanum ithe 1977-78 year 10m vaguputu padithen. ungal ezuthu en palliyin nenavivugalai nyabagapadithivittathu. kannil neer varugirath. nandri-karunakaran

    ReplyDelete
  26. பொறாமையாக இருக்கிறது சார் .. கல்வி தந்த ஆசான் இந்த வயதிலும் உங்கள் உற்ற துணையாக இருக்கிறார். " நல்லார் சொல் கேட்பதும் நன்றே" என்பது போல் உங்கள் வார்தைகள் இருக்கிறது

    ReplyDelete
  27. பொறாமையாக இருக்கிறது சார் .. கல்வி தந்த ஆசான் இந்த வயதிலும் உங்கள் உற்ற துணையாக இருக்கிறார். " நல்லார் சொல் கேட்பதும் நன்றே" என்பது போல் உங்கள் வார்தைகள் இருக்கிறது

    ReplyDelete
  28. நெஞ்சை தொட்டது இந்த நேசம் .........

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...