Wednesday, May 30, 2012

முக நூல் ஒன்று

ஒரு முக நூல் பதிவு ஒரு நாள் தூக்கத்தைக் களவாண்டு விடுமா?

களவாண்டது.

ஒரு நாள் தூக்கத்தை மட்டுமல்ல இரண்டு வேளை சாப்பிட விடாமல் என்னை சோகத்திலும் கோபத்திலும் முடக்கிப் போட்டது.

ஒரு முன்னிரவுப் பொழுதில் முக நூலினை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த நைந்து கிழிந்த அழுக்கு பனியன் ஒன்று என் கவனத்தை ஈர்க்கவே அந்தப் பதிவை முழுமையாக்கி வாசிக்கத் தொடங்கினேன்.

ஒரு தேர்ந்த எழுத்தாளரால் எழுதப் பட்ட பதிவுகூட அல்ல அது. புது தில்லியில் புகழ் பெற்ற AIMS மருத்துவ மனையின் இளைய மருத்துவர் ஒருவரால் எழுதப் பட்டப் பதிவு அது.

மொழி நடை, செறிவு, வடிவ நேர்த்தி போன்ற எழுத்தாளுமைத் துகள்களில் எதுவுமே இல்லை. உடைந்த, ஒழுங்கற்ற, இன்னும் சொல்லப்போனால் பிழைகளே போகிற போக்கில் தென்படுகிற எழுத்துதான்.

எத்தனைப் பெரிய எழுத்தாளர்களின், ஜாம்பவான்களின் எழுத்துக்களையெல்லாம்கூட சில பக்க குறிப்புகளோடு கடந்து போக முடிந்ததே. அவ்வளவாய் எழுதத் தெரியாத ஒரு மருத்துவரின் எழுத்துக்கு இவ்வளவு வலிமை எப்படி?

அந்த இளைய மருத்துவனின் எழுத்துக்களில் இருந்த சத்தியமும், அதை வீசியதில் அவனிடமிருந்து வெளிப்பட்ட ஆவேசமும்தான் இதற்கான காரணம்.

பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத ஒருவனால்தான் இப்படி எழுத முடியும்.

காலையில் சொந்த கிளினிக் போய் சக்கையாய் களைத்துப் போகும்வரை கடமையாற்றிவிட்டு, நோயாளிகளை விடவும் சோர்ந்துபோனவர்களாய் அரசு மருத்துவ மனைகளில் தங்கள் இருக்கைகளில் விழுந்து மீண்டும் மாலை சொந்த கிளினிக்கில் களைத்து எவ்வளவு சம்பாரிக்கிறோம் என்பதே தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் மருத்துவர்களே பெருன்பான்மை நம் கண்களில் படும் வேலையில் ஏழைகளைப் பற்றியும், இந்த சமூகம் குறித்தும் கொந்தளித்துக் குமுறும் இளைஞனாகவே அவன் படுகிறான்.

மகப்பேறுவிற்காக அவரிடம் ஒரு பெண் வருகிறாள். அவளது கணவரிடம் பிறந்த புத்தம் புதுக் குழந்தையை போர்த்தி வாங்க ஒரு புதுத் துணியைக் கேட்கிறார். அப்போடும் ஒரு புதுக் குழந்தைக்கு தகப்பனான அந்த மனிதன் கொடுத்த கிழிந்த பனியன் துணியைத்தான் படம் பிடித்துப் போட்டிருந்தார்.

அதற்குமேல் எவ்வளவோ முயன்றும் உடனடியாகத் தொடர முடியவில்லை. கண்கள் உடைக்க சாரை சாரையாய் கன்னங்களில் கண்ணீர்.

என்னடா பூமி இது?

அந்தக் குழந்தை நாளை ஒரு பகத்தாக, பாரதியாக, பாரதிதாசனாக, ஒரு சேகுவாராவாகக் கூடவரக்கூடும்.

பிறந்த தனது குழந்தையை கிழிந்த பனியன் துணியால்தான் போர்த்திப் பெற முடியும் என்றால் இந்த மண்ணில் என்ன இழவுக்கு உயிரோடு இருக்கிறோம்?

ராஜ முருகு பாண்டிய முப்பது வருடங்களுக்கு முன்னால் எழுதினான்,

“முதலாளியம்மாவின்
கிழிந்த சேலை
என் அக்காவின்
புதுத் தாவணி

என் அக்காவின்
கிழிந்த தாவணி
என் தங்கையின்
புதுப் பாவாடை

என் தங்கையின்
கிழிந்த தாவணி
என் தம்பியின்
புதுக் கோவணம்”

என்று. அதை விட எதார்த்தம் மோசமாக இருப்பது அப்படியே பிசைந்தது மனதை.

இந்த நொடி பிறந்த குழந்தைக்கு புதுத் துணி இல்லாத ஒரு மண்ணில் பொக்ரான் என்ன பலனைத் தரும் என்ற அவரது கேள்வியும், பொக்ரான் பெருமை பேசும் சான்றோர்களில் எத்தனைபேர் அரசு பொது மருத்துவ மனைகளில் மருத்துவம் பார்த்திருக்கிறீர்கள் என்ற கேள்வியும், அணு, பொக்ரான் ஏவுகணை இவை யாவற்றையும் விட ஏழைகளுக்கான மருந்துகளின் அவசியம் முக்கியமானது என்கிறார்.

5000 கிலோமீட்டர் வரை சென்று எதிரிகளைத் தாக்கும் ஏவுகணையால் எத்தனை உயிர்களைக் காக்க முடியும் என்ற அவரது கேள்வியும், 2010 இல் மட்டும் ஏறத்தாழ 1,30,000 இந்தியக் குழந்தைகள் ஏதேதோ காரணங்களால் மாண்டு போயிருக்கிறார்கள் என்பதை அழுதுகொண்டே பதியும் அவரது மனிதமுமே எந்தப் பெரிய ஜாம்பவானின் எழுத்துக்கும் வணங்கிப் பழகாத நம்மை அவரது எழுத்தின் முன் கை கட்ட வைக்கிறது.

நிறைய நோய்களை வருமுன் தடுப்பது எப்படி? நோய்களுக்கான எழிய மருத்துவ முறைகள்  போன்றவற்றிற்கான பயனுள்ள இணைப்புகளை அவரது பக்கத்தில் ஏராளமாய் வைத்திருக்கிறார்.

“ சிகரெட்டுத் துண்டுகளை
கீழே போடாதீர்கள்
கரப்பான் பூச்சிகளுக்கு
புற்று வந்து விடும்”

என்று ஒரு பக்கம் வைத்திருக்கிறார். ஒரு சமூகம் சார்ந்த கோசத்தை எவ்வளவு லாவகமாக இலக்கியப் படுத்தியிருக்கிறார்.

இனம் சார்ந்தும் நிறைய யோசிக்கிறார். தெளிவாகவும் யோசிக்கிறார்.

18 மைல் தூரத்திலிருந்து வந்தால் அவனுக்கு அகதி முகாம் 4000 மைல் தொலைவான இத்தாலியில் இருந்து வந்தால்...? என்று அவர் கேட்கும் போது புன்னகைத்துக் கொண்டே கொந்தளிக்கும் வித்தையை இந்த இளைஞன் எங்கிருந்து கற்றான் என்று கேட்கத் தோன்றுகிறது.

கணவனை இழந்த கண்ணகிக்கு சிலை வைக்கும் இந்தச் சமூகம் நல்ல நிகழ்ச்சிகளில் விதவைகளை கேவலப் படுத்துவதை சாடும் பதிவுகள் இவரிடம் உள்ளன.

அகதிகளுக்கு வாக்குரிமை வந்துவிட்டால் இந்த அரசியல் வாதிகள் ஈழ மக்களை என்னமாய் கவனிப்பார்கள் என்கிற இவரது கூற்றினை  நக்கல் என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாது.

காலையில் good morning என்று முகநூலில் போட்ட பெண்ணுக்கு மாலையில் கூட like போடுபவர்களையும், இன்று புதன் கிழமை என்று ஒரு பெண் போட்ட பதிவிற்கு நூற்ருக் கணக்கான like குகள் விழுவதையும் இவர் சாடும் எள்ளல் இருக்கிறதே... அப்பப்பா.

மம்தாவிற்கு இடது பிடிக்காது என்பதால்தான் ஷாருக்கான் கங்குலியை கழற்றி விட்டார் என்று துணிச்சலோடு சொல்லும் தைரியம் இவருக்கு இருக்கிறது. வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் கேவலமான அரசியலைக் கூட புரிந்து கொள்வதிலும் வெளிப் படுத்துவதிலும் வல்லவராயிருக்கிறார்.

மன்மோகனுக்கு ஏறத்தாழ பத்து டாக்டர் பட்டங்கள் ஏன் என்று நியாயமாய்க் கேட்கிறார்.

இளைஞனுக்கே உரிய தெறிப்புகளும் இருக்கவே செய்கின்றன.

மிக நல்ல முக நூல் பக்கம்.

அவசியம் போய்ப் பாருங்கள். பிடிக்கும். பிடித்தால் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

அவரது முக நூல் இணைப்பு,

 http://www.facebook.com/KarthikBalajeeLaksham




36 comments:

  1. ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழர் ., எனக்கு பிடித்தது சாதாரண மனிதன் என்ன பண்ண முடியும்., சாதாரண மனிதன் சாதாரணமான விசியத்தை செய்தல் போதும் என்பதற்கு அவருடைய சொந்த அனுபவம் ஒரு நல்ல எடுத்துகாட்டு

    ReplyDelete
  2. அருமை ஐயா.
    அந்த பதிவை தொடர்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. ///Christopher said...
    ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழர் ., எனக்கு பிடித்தது சாதாரண மனிதன் என்ன பண்ண முடியும்., சாதாரண மனிதன் சாதாரணமான விசியத்தை செய்தல் போதும் என்பதற்கு அவருடைய சொந்த அனுபவம் ஒரு நல்ல எடுத்துகாட்டு///

    மிக்க நன்றி தோழர்.

    நல்லவர்களைக் கொண்டாடுவதும் நல்லவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதும் இந்த நொடியின் தேவையாய் இருக்கிறது தோழர்

    ReplyDelete
  4. ////Rathnavel Natarajan said...
    அருமை ஐயா.
    அந்த பதிவை தொடர்கிறேன்.
    நன்றி ஐயா.///

    மிக்க நன்றிங்க அய்யா.

    அவர் பக்கத்திற்கு போய் பாருங்களேன்.

    கொண்டாடுவீர்கள்.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகத்திற்கு நன்றி

    “சிகரெட்டுத் துண்டுகளை
    கீழே போடாதீர்கள்
    கரப்பான் பூச்சிகளுக்கு
    புற்று வந்து விடும்”]]

    மிக அருமைங்க.

    ReplyDelete
  6. /// நட்புடன் ஜமால் said...
    நல்ல அறிமுகத்திற்கு நன்றி

    “சிகரெட்டுத் துண்டுகளை
    கீழே போடாதீர்கள்
    கரப்பான் பூச்சிகளுக்கு
    புற்று வந்து விடும்”]]

    மிக அருமைங்க.///

    தொடர்ந்து கொண்ட்டாடினால்தான் இது மாதிரி நெருப்புகளாஇத் தக்க வைக்க முடியும்.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  7. அருமை.சொன்னது போல் முகநூல் பக்கம் சென்று நல்ல பதிவாளர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள்... வாழ்த்துகள்.... உங்கள் மூலம் நாங்களும் இது போன்ற நல்ல ஆத்மாக்களை அறிந்து கொள்கின்றோம். தொடர்கின்றோம் அவருடைய பதிவை.....

    ReplyDelete
  8. /// SANTHOSHI said...
    அருமை.சொன்னது போல் முகநூல் பக்கம் சென்று நல்ல பதிவாளர்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள்... வாழ்த்துகள்.... உங்கள் மூலம் நாங்களும் இது போன்ற நல்ல ஆத்மாக்களை அறிந்து கொள்கின்றோம். தொடர்கின்றோம் அவருடைய பதிவை.....///

    மிக்க நன்றி தோழர்.
    நல்லவர்களாஇக் கொண்டாடுவதும் அறிமுகப் படுத்தி வைப்பதும் கூட இன்றையத் தேவைதான்

    ReplyDelete
  9. தோழர் எட்வின் அவர்களே!கார்த்திக் பாலாஜி அவர்களைப் ப்ற்றி வலைசரம் இந்தவார ஆசிரியர் "மூன்ரம் சுழி" அப்பாத்துரை அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளேன்.---காஸ்யபன்..

    ReplyDelete
  10. @ kashyapan

    மிக்க நன்றிங்க தோழர்

    ReplyDelete
  11. கமல்ராஜ் ருவியேMay 30, 2012 at 9:03 PM

    இந்த பதிவை படித்தவுடன் .... அதில் குறிப்பிட்ட விடயங்களை விட... மற்றவர்களின் பதிவுகளை மதிக்கும் உங்களுடைய பாஙு என்னை வியக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்...

    அருமையான ......ஒரு சிபாரிசு...

    ReplyDelete
  12. ///கமல்ராஜ் ருவியே said...
    இந்த பதிவை படித்தவுடன் .... அதில் குறிப்பிட்ட விடயங்களை விட... மற்றவர்களின் பதிவுகளை மதிக்கும் உங்களுடைய பாஙு என்னை வியக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள்...

    அருமையான ......ஒரு சிபாரிசு...///

    இதில் என்ன தோழர் பெரிதாய் இருக்கிறது?

    நல்லவர்களைக் கொண்டாட முயற்சிப்பதும், அறிமுகம் செய்வதும் மனசுக்குப் பிடித்த செயல்தானே.

    தொடரலாமா?

    ReplyDelete
  13. ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழரே ... மிக அருமையான தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. ///பாலாசி (ஜி) தமிழன் குவைத் said...
    ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழரே ... மிக அருமையான தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் .///

    மிக்க நன்றி தோழர் பாலாஜி

    ReplyDelete
  15. முகநூல் எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு ஊடகம். பதர்களிலிருந்து நெல்லைப் பிரித்தெடுக்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தங்களிடம் அத்திறன் இருப்பது குறித்து பிரமிப்புடன் பாராட்டுகிறேன். மேலும் மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் அறிமுகப்படுத்தபட வேண்டும். நண்பரின் எண்ணமும் எழுத்தாக்கமும் போற்றுதற்குரியது. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  16. /// கீதமஞ்சரி said...
    முகநூல் எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு ஊடகம். பதர்களிலிருந்து நெல்லைப் பிரித்தெடுக்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தங்களிடம் அத்திறன் இருப்பது குறித்து பிரமிப்புடன் பாராட்டுகிறேன். மேலும் மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் அறிமுகப்படுத்தபட வேண்டும். நண்பரின் எண்ணமும் எழுத்தாக்கமும் போற்றுதற்குரியது. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.////

    மிக்க நன்றி தோழர்,
    வணக்கம்.
    அவரையும் தொடர்பு கொள்ளுங்கள்

    ReplyDelete
  17. என்றும் சமுதாய அக்கறை என்றால் தோழர் எட்வின். அவர் ஒரு பதிவரை அறிமுகப்படுத்துகிறார் என்றால்......

    ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழர் .

    ReplyDelete
  18. /// ஆதிரா said...
    என்றும் சமுதாய அக்கறை என்றால் தோழர் எட்வின். அவர் ஒரு பதிவரை அறிமுகப்படுத்துகிறார் என்றால்......

    ஒரு நல்ல மனிதரை அறிமுகபடித்தியதர்க்கு நன்றி தோழர் .////

    மிக்க நன்றி ஆதிரா.
    அவரது பதிவுகளைப் பாருங்கள்

    ReplyDelete
  19. உலக வரலாறுகள் அனைத்தும் இளைஞர்களின் ரத்தத்தால் ஆனது என்று "யதீந்தரநாத் தாஸ்" சொன்னது போல இச்சமூகத்தில் நாளும் நடந்தேறும் இழிநிலைகளை கண்டு கோவப்படும் துடிப்பு மிக்க இளைஞனின் கோவக்குரல்.... இதை எழுதியவர் இளம் மருத்துவர் என்பதால் எனக்கு சே குவேராவின் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete
  20. ///Madusudan C said...
    உலக வரலாறுகள் அனைத்தும் இளைஞர்களின் ரத்தத்தால் ஆனது என்று "யதீந்தரநாத் தாஸ்" சொன்னது போல இச்சமூகத்தில் நாளும் நடந்தேறும் இழிநிலைகளை கண்டு கோவப்படும் துடிப்பு மிக்க இளைஞனின் கோவக்குரல்.... இதை எழுதியவர் இளம் மருத்துவர் என்பதால் எனக்கு சே குவேராவின் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது... ///

    மிக்க நன்றி தோழர்.

    ஏறத்தாழ அப்படித்தான். தொடர்பு கொள்ளுங்கள்

    ReplyDelete
  21. தோழர்..

    கசிய வைக்கிறது. நம்மைப் போன்றோர்தான் இத்தகைய கசிவில் கசிய முடியும்.

    இது மனதின் அவஸ்தை.

    ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பு.

    உங்களுக்கு நன்றி இத்தகைய அறிமுகத்திற்காக.

    அவசியம் அவரது முகநுர்லைத் தேடிப்போகிறேன்.

    நன்றிகள்.

    ReplyDelete
  22. /// ஹ ர ணி said...
    தோழர்..

    கசிய வைக்கிறது. நம்மைப் போன்றோர்தான் இத்தகைய கசிவில் கசிய முடியும்.

    இது மனதின் அவஸ்தை.

    ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பு.

    உங்களுக்கு நன்றி இத்தகைய அறிமுகத்திற்காக.

    அவசியம் அவரது முகநுர்லைத் தேடிப்போகிறேன்.

    நன்றிகள்.///

    மிக்க நன்றி ஹரணி.
    அவசியம் அவரோடு தொடர்பு கொள்ளுங்கள்

    ReplyDelete
  23. எத்தனைப் பேரைக் கடந்து போகிறோம், எப்போதுமே யோசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்... நான் கூட இந்த மருத்துவ உலகத்தில் தான் இருக்கிறேன், பல சமயங்களில் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து.... தவறு நம்முடையது இல்லை என்றாலும், தவறுக்கு சாட்சியாய் இருப்பதே தவறு தானே.! அந்த நைந்து போன துணியைக் கொண்டிருப்பவனிடமும் கையூட்டு வாங்கும் நபர்களை என்ன செய்ய...?

    ReplyDelete
  24. /// கிருஷ்ணப்ரியா said...
    எத்தனைப் பேரைக் கடந்து போகிறோம், எப்போதுமே யோசிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்... நான் கூட இந்த மருத்துவ உலகத்தில் தான் இருக்கிறேன், பல சமயங்களில் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து.... தவறு நம்முடையது இல்லை என்றாலும், தவறுக்கு சாட்சியாய் இருப்பதே தவறு தானே.! அந்த நைந்து போன துணியைக் கொண்டிருப்பவனிடமும் கையூட்டு வாங்கும் நபர்களை என்ன செய்ய...?////

    மிக்க நன்றி ப்ரியா. எழுதுப்பா

    ReplyDelete
  25. காலுக்குச் செருப்புமில்லை
    கால் வயிற்றுக் கூழுமில்லை
    பாழுக்கு உழைத்தோமடா
    தோழனே பசையற்றுப் போனோமடா.
    -என்ற ஜீவாவின் வரிகள் நினைவுக்கு வந்தன.

    25 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹைக்கூ எழுதினேன்.

    சேலை கிழிந்தது
    மகளுக்கு மகிழ்ச்சி
    தாவணி.

    ReplyDelete
  26. தேர்ந்த அறிமுகம் நேர்த்தியான நடை ................கற்றுகொல்கிறேன் எழுத்தின் புதிய நடையை ...........மகிழ்ச்சி

    ReplyDelete
  27. நன்றி எட்வின்! ஒரு ’மனிதரை’ அறிமுகபடுத்தியமைக்கு

    ReplyDelete
  28. /// சிவகுமாரன் said...
    காலுக்குச் செருப்புமில்லை
    கால் வயிற்றுக் கூழுமில்லை
    பாழுக்கு உழைத்தோமடா
    தோழனே பசையற்றுப் போனோமடா.
    -என்ற ஜீவாவின் வரிகள் நினைவுக்கு வந்தன.

    25 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹைக்கூ எழுதினேன்.

    சேலை கிழிந்தது
    மகளுக்கு மகிழ்ச்சி
    தாவணி.///

    மிக்க நன்றி தோழர்.

    தொடர்ந்து சந்திப்போம் தோழர்

    ReplyDelete
  29. /// கோவை மு.சரளா said...
    தேர்ந்த அறிமுகம் நேர்த்தியான நடை ................கற்றுகொல்கிறேன் எழுத்தின் புதிய நடையை ...........மகிழ்ச்சி ///

    இது உங்களாது பெருந்தன்மை சரளா.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  30. /// Uma said...
    நன்றி எட்வின்! ஒரு ’மனிதரை’ அறிமுகபடுத்தியமைக்கு ///

    அந்த மற்றுமது மாதிரி இளைஞர்களை உற்சாகப் படுத்துவோம் உமா.

    மிக்க நன்றி

    ReplyDelete
  31. தங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  32. தங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  33. /// புன்னியாமீன்... said...
    தங்கள் பதிவு அருமையானது.நல்ல அறிமுகத்திற்கு நன்றி ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  34. வணக்கம் தோழர். தங்களின் பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த போது தங்களின் முகன்நூல் ஒன்று என்னை ஈர்த்தது. உள்ளே நுழைந்தால், அது கார்த்திக் பாலாஜி பற்றிய தங்களின் மதிபீடு. பாராட்டுக்கள் தோழர். அடுத்தவரை மதிக்கும் பாங்குக்கு. கண்களில் நீர் உருள இந்தபின்னூட்டம் எழுதப்படுகிறது. மிக்க நன்றி எட்வின் தோழர், இப்படி ஒரு நல்ல மனிதரை தங்கள் வலைப்பூ மூலம் அறிமுகப்படுத்தியதற்கு. Really you are great. தங்களின் வலைப்பூவில் தங்கள் பதிவு மட்டும்தான் போடுவார்கள். நீங்கள் சமூகத்தின் காவலர் தோழர். அதனால்தான் தங்கள் பக்கங்களில் மற்றவர்களின் அற்புத மான பதிவுகள் விதைக்க்ப்படுகின்றன். தங்களின் சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தோழர். கார்த்திக் பாலாஜி பக்கம் சென்றும் பார்த்தேன். மக்களுக்காக வாழும் மருத்துவர். கார்த்திக் பக்கம் போனால், அங்கே அவர் எனக்கு நட்புக்கு அழைப்பு கொடுத்த் நீண்டநாட்களாக காத்திருக்கிறார். இன்றுதான் இணைப்பு தந்தேன்.வாழ்வில் ஓராயிரம் பேரைக் கடந்து போகிறோம், சில்ர் மட்டுமே நெஞ்சில் நிற்கின்றனர். அவர்க்ளில் தாஙக்ளும் ஒருவர் தொழர் . வாழ்த்துகளும்,நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மோகனா தோழர். மிக மிக அருமையான மனிதர் கார்த்திக்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...