சௌத் ஏசியன் பாலாஜி,
புத்தகம் தொடர்ந்து வாசிக்கிற அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெயர்.
ஏராளமான நல்ல நூல்களை மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தவர். யாரும் கொண்டுவரத் தயங்கும் இடது சார்பு நூல்களை எவ்வித லாப நோக்கமும் இன்றி என்று சொல்வதுகூட போகிற போக்கில் போட்டுவிட்டு போகிறமாதிரி ஆகிவிடும்.
ஒரு நூல் சமூகத்திற்கு தேவைப் படுமென்றால் நட்டப் பட்டும் அதைக் கொண்டு வந்தவர்.
நல்ல இடதுசாரி.
தோழர்கள் ஈ.எம்.எஸ் , பி.ராமமூர்த்தி, ஜோதிபாசு, ஜீவா, நல்லக்கண்ணு என்று நீளும் அர்ப்பணிப்பு மிக்க இடதுசாரித் தலைவர்கள் அனைவரும் “ நான் ஏன் இடதுசாரி ஆனேன்” என்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்லியிருக்கிறார்கள்.
எதோ ஒரு மகத்தான போராட்டம், மக்கள் அனுபவித்த கொடுந்துயர், அரசின் மக்கள் விரோத போக்கு, இடது சாரி சார்பு இலக்கியம் அல்லது எழுத்து அல்லது யாரேனும் ஒரு இடதுசாரித் தலைவரின் தொடர்பு என்பது மாதிரி ஏதோ ஒன்றுதான் பெரும்பாலும் அவர்களை இடதுப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும்.
சவுத் ஏசியன் பாலாஜியும் ஒருமுறை தன்னை இடதுபக்கமாய் இழுத்துப் போன சக்தி எது என்று சொல்லியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் சந்திரசேகர் என்ற ஒரு பேராசிரியர் இருந்தார் அதிதீவிர இடது எதிர்ப்பாளர். எடத்தை எதிர்த்து எவ்வளவு வேண்டுமானாலும் பேசியவர், எழுதியவர்.
தான் பேராசிரியர். சந்திரசேகர் எழுதிய “சீனா அன்றும் இன்றும்” என்ற நூலை வாசித்ததனால்தான் இடதுசாரியாய் மாறினேன் என்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சந்திரசேகர் அவர்கள் ஒரு ஆழமான இடதுசாரி எதிர்ப்புக் கண்னோட்டத்துடன் சீனாவின் மீதான தனது விமர்சனமாகத்தான் அவர் அந்த நூலை எழுதியிருந்தார்.
கம்யூனிச எதிர்ப்பாளர் ஒருவர் எழுதிய ஒரு நூல் அதன் வாசகன் ஒருவனை எப்படி இடதுசாரியாய் மாற்றும்?
பாலாஜி தரும் பதில்தான் ஒரு நல்ல நூல் ஆசிரியன் எவ்வளவு யோக்யமாயிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு நல்ல அளவு கோளாக விளங்குகிறது.
அவர் சொல்கிறார்,
சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்
கிழவன் சரியாத்தான் சொல்லியிருக்கிறான்,
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....”
//சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன ////இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்//செளத் ஏசியன் பாலாஜி நவீன அன்னப் பறவை என்பதையும் இடதுசாரி எதிர்ப்பாள்ரின் எழுத்தில் இருந்த நேர்மையையும் அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்...வாழ்த்துகள் தோழர்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர் சூரியதாஸ்
ReplyDeleteதோழர் பாலாஜி எனக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஆனாலும் புது தகவலுடன் அவரை அறிமுகம் செய்தது மகிழ்சி!
ReplyDelete=சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்= இப்படி ஒரு கருத்தை நான் இதுவரை படித்ததில்லை. நடுநிலையான நூல் விமர்சனம் என்பதற்குச் சான்றான இந்தப் பதிவை நான் பாராட்டுகிறேன்.
ReplyDelete\\\Vediappan Discovery Book Palace said...
ReplyDeleteதோழர் பாலாஜி எனக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஆனாலும் புது தகவலுடன் அவரை அறிமுகம் செய்தது மகிழ்சி! ////
மிக்க நன்றி வேடியப்பன்
அவரிடம் இதைத் தெரிவிக்க முடியுமா?
அவரது எண்ணை sms செய்ய இயலுமா?
@முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
நல்லதொரு பகிர்வு. நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர் இளங்கோ
ReplyDeleteசுவாரஸ்யம்...
ReplyDelete