Saturday, May 5, 2012

பத்தொன்பது முடிகிறது


எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னால் தோழர் ஆ.குமரேசன் அவரது திருமண நாளன்று சொன்னதுதான்

வம்புக்கு இழுத்து விளையாடும் போதெல்லாம் கீர்த்தி சொல்வாள்,

“ஏம்மா இந்த லூசு அப்பாவ டைவர்ஸ் பண்ணி வீட்ட விட்டு விறட்டேன்மா. ஒரே இம்சையா இருக்கு”

கிஷோர் அந்த நேரங்களில் இருந்தால் இடைமறித்து சொல்வான்,

“வீட்ட விட்டுகூட விறட்ட வேணாம். நாம வேணாலும் வாடக வீட்டுக்கு போய்க்கலாம். வக்கீலுக்கு காசு வேணும்னா முத்தண்ணன்கிட்ட வாங்கிகலாம்”

இப்படி சொல்லும் பிள்ளைகள் நேரா நேரத்துக்கு தவறாமல் கேட்பார்கள்,

“அப்பா, சாப்ட்டியாப்பா?, மாத்திரைய ஒழுங்கா போட்டியாப்பா?,”

குடும்பத்தில் இருக்கிறது தோழர்.

இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எதையும் சாதிக்க வில்லை.

எங்கள் குடும்பத்து மதச் சாயல் இல்லாத பெயர்களாக குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன்.

தமிழ்ப் பெயராக இல்லை என்பதில் வருத்தமே. ஆனாலும் பகத்தோடு சிறை பட்ட அவனது தோழனான கிஷோரிலால் என்பவனின் நினைவாக பையனுக்கு கிஷோர் என்றும், இசை , புகழ் என்று பொருள்படும் கீர்த்தி என மகளுக்கும் பெயர் வைத்தேன்.

ஊர் ஊருக்கு போய் தமிழ் வழிக் கல்வி குறித்து பேசுவது போலவே பிள்ளைகள் இருவரையும் தமிழ் வழியில் படிக்க வைக்கிறேன்.

பிள்ளைகளிடம் தோழனாகவே பழகுகிறேன்.

என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை தோழர்களே சொல்லிக் கொள்வதற்கு.

எனக்கும் சந்தேகமே, இவ்வளவு காலம் என்னை விவாகரத்து செய்யாமல் எப்படி விட்டுவால் என்னோடு குடும்பம் நடத்த முடிகிறது என்று.

19 ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் சன்னமாக வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி விக்டோரியாவை கை குவித்து வணங்கிக் கொள்கிறேன்.

17 comments:

 1. ‎‎//இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எதையும் சாதிக்க வில்லை//...

  ஒன்றைப்பெற ஒன்றை இழக்க வேண்டியிருக்கும் அன்பின் எண்(ன்) எழுத்தாளரே...

  மற்றவர்களுக்கு கிடைக்கும் சிறு சிறு சந்தோச தருணங்கள் கீர்த்திக்கும் கிஷோருக்கும் ’விட்டு’விற்கும் (உங்களின் அன்பான விக்டோரியாதான் ‘விட்டு’வானது என்று புரிய கொஞ்ச நேரம் ஆனது) கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சில சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறியவாறு வம்புக்கு இழுத்திருப்பார்கள்...

  மகனையும் மகளையும் பெற்று அவர்கள் நல்ல கல்வியையும் ஒழுக்கத்தினையும் பெற இதுவரை பாடுபட்டு இருப்பீர்கள் அல்லவா...அதுதான் சாதனை...

  குடும்பத்திற்கு வெளியே நீங்கள் சாதித்தது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் உங்களை நன்கு அறிந்துள்ள உங்கள் உண்மை தோழர்களுக்கும் உங்களோடு பழக வாய்ப்பு கிடைத்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்...

  அன்பின் அடையாளம் கண்ணீர்....
  அது என்றும்
  ஆனந்தமாகவே இருக்கட்டும்....

  தங்களுக்கும் தங்கள் அன்பின் தோழி விக்டோரியா அவர்களுக்கும் மனமார்ந்த மண நாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.
  கூடுதல் பாசம் தான் பிரச்னைகள் மாதிரி தெரியும். எங்கள் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பது போல் தான் தெரியும், அப்படி இல்லை. எங்கள் அப்பா பசி வந்தால் தூங்கி விடுவார்கள். எங்கள் அம்மா, கொஞ்சம் சத்தமாக - சாப்பிடுங்கள் சீக்கிரமாக, உங்களால் பசி தாங்க முடியாது. நாங்கள் நினைப்போம் இதை - மெதுவாக, அன்பாக சொன்னால் என்ன என்று. அவர்கள் அப்படித்தான் கடைசி வரை.
  எங்கள் அம்மா ஊருக்கு சென்றால் அந்த நேரம் திரும்பவில்லை என்றால் எங்கள் அப்பா வீட்டுக்கும், பஸ் நிலையத்திற்கும் சென்று கொண்டேயிருப்பார்கள். எங்கள் அம்மா வந்த பிறகு தான் சாப்பிடுவார்கள். இது ஒரு விதமான பாசம்.
  உங்கள் பதிவு எங்களை நெகிழ வைத்தது. வாழ்த்துகள் கோடி.

  ReplyDelete
 3. 19 ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் சன்னமாக வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி விக்டோரியாவை கை குவித்து வணங்கிக் கொள்கிறேன்.

  கண்ணீரே சாட்சி அன்புக்கு !

  ReplyDelete
 4. நெடுஞ்சாலைகள் மட்டுமே பிரதானப்படுத்தப்படும் வாழ்வில் சில கரடுமுரடு பாதைகளும், காட்டுவழிகளும், ஒற்றையடிப் பாதைகளும், குறுகிய சந்துகளும் பெரிதாய் மதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பாதைகள் தம் கடமையைச் செய்துகொண்டேதான் இருக்கின்றன, பயணிகளைத் தத்தம் இருப்பிடம் சேர்த்து. இந்தப் பாதைகளில் பயணிக்கும் போது உண்டாகும் பல இனிய அனுபவங்களை நெடுஞ்சாலை பயணங்கள் தருவதில்லை என்பதும் உண்மை. இனிய குடும்பத்தைத் தாங்கி நிற்கும் இறுமாப்பும் இருதுளி கண்ணீரும் போதுமே, வாழ்க்கையின் சாதனை சொல்ல. தங்களுக்கும் துணைவியாருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. @anbudan PONNIvalavan said...

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 6. @Rathnavel Natarajan said...

  மிக்க நன்றிங்க அய்யா.

  ReplyDelete
 7. @இராஜராஜேஸ்வரி said...

  ஆமாம் தோழர்
  அதைவிட பெரிதாய் எதைத் தர முடியும்

  ReplyDelete
 8. @கீதமஞ்சரி said...

  மிக்க நன்றி தோழர்
  பாதை பாதைதான். அது எதுவானால் என்ன?

  ஆலமரமா?
  அருகம் புல்லா?
  என்பதல்ல. அவற்றுள் இருக்கும் ஜீவன் ஒன்றுதான் என்பதே விஷயம்.

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 9. நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !!!

  ReplyDelete
 10. மிக்க நன்றி தோழர் சிவா

  ReplyDelete
 11. இனிய திருமண நாள் வாழ்த்துகள் தோழர்! இதே மகிழ்ச்சி பல்லாண்டுகள் தொடர என் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. @Christopher said...

  மிக்க நன்ரி தோழர்

  ReplyDelete
 13. ilangovan balakrishnanMay 5, 2012 at 3:20 PM

  கனிவான வாழ்த்துக்கள் தோழர்.

  வாழ்வின் வெற்றி முடிவில் இல்லை. பயணத்திலேயே ஒழிந்து கிடக்கிறது.


  We can do no great things only small things with great love- என்ற மதர் தெரசாவின் வரிகளை நினைவுபடுத்துகிறது உங்கள் எழுத்து.

  வாழ்க வளமுடன்.:)

  ReplyDelete
 14. மிக்க நன்றி இளங்கோவன்

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள். என் அலைபேசி எண் 9751793306

  ReplyDelete
 16. மிக்க நன்றி மணிச்சுடர்

  ReplyDelete
 17. வாழ்த்துக்கும் வயதுக்கும் சம்மந்தமில்லை என்றால்.. என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும்..

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...