Thursday, May 24, 2012

ஷெல்லியை ஷெல்லியாக...


ஆத்திகம் எவ்வளவு பழசோ அதற்கு ஒரு நொடியும் குறையாத பழசு நாத்திகம்.

ஏதோ கலி கெட்ட காலத்தில் நாத்திகம் தோன்றியதாகவோ அல்லது நாத்திகம் தோன்றியதன் விளைவாக கலி முற்றியதாகவோ கொள்ள இயலாது.

“கற்றதனாலாய பயனென்கொள்
வாலறிவான்ன்
நற்றாழ் தொழான் எனில்”

என்கிறார் வள்ளுவர். இறைவனின் அடி பணிந்து வணங்காது போனால் நீ படித்த ஆழமான கல்வி உனக்கு எந்த நற்பலனையும் தராது என்பதே இதன் பொருள் எனக் கொள்ளலாம்.

ஆக வள்ளுவர் காலத்திலேயே யாரோ ஒருவன் ,

“ கடவுள் இல்லை. இல்லாத கடவுளை நான் வணங்க மாட்டேன்” என்று வள்ளுவரது முகத்துக்கு நேராக சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்ல அப்படி சொன்னவன் நன்கு கற்று தேர்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவர் “ நீ எவ்வளவுதான் படித்திருந்தாலும், ஞானஸ்த்தனாக இருந்தாலும் இறைவனைப் பணிந்து தொழாவிட்டால் உன்னிடம் இருக்கும் ஞானத்தினால் எந்தப் பயனும் இல்லை”  என்று சொல்லியிருக்கிரார்.

ஆக வள்ளுவர் காலத்திலேயே நாத்திகன் இருந்திருக்க வேண்டும். எனில் வள்ளுவர் காலத்திலேயே நாத்திகமும் இருந்திருக்கிறது என்றும் கொள்ளலாம்.

இது ஏதோ தமிழ் பூமியில் மட்டும் அல்ல, ஏசு நாதருக்கு ஏகத்துக்கும் முன்பே எழுதியதாக கிறிஸ்தவர்களால் நம்பப் படுகிற “ நீதி மொழிகள்” என்ற புத்தகத்தில் (இது பழைய ஏற்பாட்டில் இருக்கிறது) “கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் துவக்கம்” என்று இருக்கிறது. எல்லோருமே கடவுளை விரும்பி ஏற்ருக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் இப்படி ஒன்றை எழுத வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஏசு நாதருக்கு முன்பே நீதி மொழிகள் எழுதப்பட்ட காலத்திலேயே நாத்திகனும் இருந்திருக்க வேண்டும்.

நாத்திகம் பெரிதா, ஆத்திகம் பெரிதா ? இரண்டில் எது சரி? என்பது பற்றியெல்லாம் நமக்கு இந்த இடத்தில் கவலை இல்லை.

எல்லா இடங்களிலும் நாத்திகர்களை ஆத்திகர்கள் என்று ஆத்திகர்கள் நிறுவ முயன்றிருக்கிறார்கள் . தந்தை பெரியாரை ’யாருக்கும் தெரியாமல் பிள்ளையாரை வணங்குவார்’  என்று இங்கு தொடர்ந்து பிரச்சாரம் நடப்பது போல உலகில் எல்லா திக்குகளிலுமே நடந்திருப்பதாகவே படுகிறது.

 ஷெல்லிக்கு படகில் பயணிப்பது பிடித்தமான ஒன்று. அது போன்ற ஒரு சமயத்தில்தான் அவரது படகு அலைகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகி கவிழ்ந்தது.

அவரது மரணச் செய்தி பரவவே கரையில் ஒரு பெரும் கூட்டம் நின்றது. அதில் ஒருவர் ஆத்திகர். ஷெல்லியின் நண்பர். ஷெல்லியிடம் அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவர் நாத்திகராய் இருந்ததுதான்.

ஷெல்லியின் உடல் கரைக்கு கொண்டு வரப் படுகிறது.

அந்த ஆத்திக நண்பர் அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர் ஒருவரிடம் “ஷெல்லியின் கோட்டுப் பையில் ஒரு வேதாகமம் இருந்தது. அவர் ரகசியமாய் பைபிள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்” என்று எழுதுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எரிச்சலடைந்த பைரன் அந்த நண்பரிடம் சொன்னது நமக்கும் ரொம்பப் பொருந்து. பைரன் சொன்னார்,

“ நண்பரே, அருள்கூர்ந்து ஷெல்லியை ஷெல்லியாகப் பாருங்கள்”

ஆமாம் ,

நாமும் கொஞ்சம் பாரதியை பாரதியாகவும், காந்தியை காந்தியாகவும், எந்த ஒருவரானாலும் அவரை அவராகவும் காய்தல் உவத்தல் இன்றி எப்போது பார்க்கத் தொடங்குவோம்?

நன்றி : “காக்கச் சிறகினிலே”

39 comments:

  1. அ.தா.பாலசுப்ரமணியன்May 24, 2012 at 9:42 AM

    அருமை. கேட்பார் உவப்ப கருத்தை வழங்குதல் உங்களுக்கு வரமாய் வாய்த்திருக்கிறது.

    ReplyDelete
  2. ஆத்திகம், நாத்திகம் அவரவர் சொந்த கருத்து. அதை அடுத்தவர்மேல் திணிக்காமல் இருப்பது சிறந்தது. தங்கள் கட்டுரை அருமை.

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை. வெகுவாக ரசித்தேன்.

    ReplyDelete
  4. ilangovan balakirshnanMay 24, 2012 at 11:02 AM

    சுவாரஸ்யமான நல்ல தகவல்கள்.

    பொதுவாக ஆத்திக நாத்திக விவாதத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை நண்பரே. ஆழ் மனதின் அழுத்தமான தொடர் நம்பிக்கைகள் இவ்வுலகில் எதையும் உண்மையாக்கும் வல்லமை பெற்றிருப்பதாய் நான் நம்புவதுண்டு.

    ஆத்திக- நாத்திக வலியுறுத்தல்கள் மோசடிக்கோ அல்லது மனித உரிமை- மற்றும் நேயத்துக்கு புறம்பாகவோ போகும் போது மட்டும்தான் அது பற்றி அறச்சீற்றம் கொள்வது அவசியமாக இருக்கிறது.

    "ஷெல்லி ரகசியமாய் பைபிள் வாசிப்பார்"- என்ற பொய்ப்பிரச்சாரத்தைப் பரப்புவதில் அந்த நண்பருக்கு தொழில் லாபம் இருக்கலாம் அல்லது அவருக்கு நேரிட்ட மூளைச்சலவையின் விளைவாலான மன நோயாக இருக்கலாம்.

    இந்த நோய் புதிது ஒன்றும் இல்லை. நம்மைச்சுற்றி 90% மனிதர்களிடம் இருக்கிறதே.

    இது போன்ற சிந்தனையும் எழுத்தும் ஒருவோளை நோயை முழுக்க குணப்படுத்தாவிட்டாலும், குறைந்த பட்சம் பாவப்பட்டவர்கள் பாதிக்கப்படாவண்ணம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. என்னை பொறுத்த மட்டில் ....
    கடவுள் என்பது மனித ஆழ்மன உருவகமே
    (இயற்கையின் அற்புத ஆற்றலை
    மனித வடிவில் உருவகபடுத்தி வணங்கி.,பயந்து
    மகிழ்கிறான்
    ஒவ்வொரு தனி மனிதனுக்கும்
    ( ஆத்திகர்களாயினும் சரி நாத்திகர்களாயினும் சரி )
    தனிப்பட்ட முறை யில் இறை என்ற CONCEPT....
    SELF INNER INBUILT DEFENCE TOOL
    ஆகவே இருந்துவருகிறது
    தான் தவறுசெய்தால் இறையே என்னை காப்பாற்று
    என்று உள் மனம் இறைஞ்சுகிறது
    தான் வெற்றி பெற்றால் இறையே நன்றி என்று
    காணிக்கை அர்பணிக்க படுகிறது
    (இதுவே பரிணாம வளர்ச்சியில்
    இறை வணிகம் ஆயிற்று )
    .
    இறை என்ற CONCEPT தோன்றியதும்
    இறை இல்லை என்ற வாதமும்
    தோன்றியிருப்பது இயற்கையே .
    ஆனால் இறை இல்லை என்று
    வாதம் புரியும் தனி மனிதனும்
    இறை என்ற CONCEPT ஐ ஆழ்மனதில்
    ஒப்புக்கொண்டு வாழ்வது அவனுக்கு
    வாழ்கையை எளிதாக்கி இருக்கிறது
    என்பது தான் சரி ..

    ReplyDelete
  6. கடவுள் இல்லேன்னு யார் சொன்னா? இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன் ‍‍- ஏதோ ஒரு திரைப்படத்தில் கமல். எல்லாத்துக்கும் மேல ஒருவரோட மறைவுக்குப்பின் அவர ஆத்திகராவோ நாத்திகராவோ மாத்த நினைப்பது, நாம நம்ம கொள்கையிலே நம்பிக்கையோட இல்லேன்னுதன் அர்த்தம்.

    ReplyDelete
  7. சரியா சொன்னீங்க‌
    என் பெயர் கொண்டு என்னால் பலதை சொல்லிவிட முடிவதில்லை, எழுத்துகளை எழுத்தாளர்களோடு சேர்த்தே பார்க்கும் சமூகத்தில் எல்லாம் சிரமமே ...

    ReplyDelete
  8. பாரதியை பாரதியாகவும், காந்தியை காந்தியாகவும் மட்டும் பார்க்க வேண்டியது சரிதான் அனால் அவர்களின் செயல்பட்டை முழுமையாக புரிந்துகொள்ள அவர்கள் வாழ்ந்த காலம் அவர்களின் அரசியல் சமுக பொருளாதார நிலைமையையும் சேர்த்துதான் பார்க்க வேண்டியுள்ளது

    ReplyDelete
  9. தங்கள் கட்டுரை அருமை.

    ReplyDelete
  10. நாத்திகம் மூளையின் பேச்சையும் ஆத்திகம் இதயத்தின் பேச்சையும் கேட்டு செயல்படுபவை.

    நல்ல பதிவு தோழர். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ///அ.தா.பாலசுப்ரமணியன் said...
    அருமை. கேட்பார் உவப்ப கருத்தை வழங்குதல் உங்களுக்கு வரமாய் வாய்த்திருக்கிறது.///

    கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. ///குடந்தை அன்புமணி said...
    ஆத்திகம், நாத்திகம் அவரவர் சொந்த கருத்து. அதை அடுத்தவர்மேல் திணிக்காமல் இருப்பது சிறந்தது. தங்கள் கட்டுரை அருமை///

    aamaam dhoozar.
    mikka nanRi

    ReplyDelete
  13. ///ilangovan balakirshnan said...
    சுவாரஸ்யமான நல்ல தகவல்கள்.

    பொதுவாக ஆத்திக நாத்திக விவாதத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை நண்பரே. ஆழ் மனதின் அழுத்தமான தொடர் நம்பிக்கைகள் இவ்வுலகில் எதையும் உண்மையாக்கும் வல்லமை பெற்றிருப்பதாய் நான் நம்புவதுண்டு.

    ஆத்திக- நாத்திக வலியுறுத்தல்கள் மோசடிக்கோ அல்லது மனித உரிமை- மற்றும் நேயத்துக்கு புறம்பாகவோ போகும் போது மட்டும்தான் அது பற்றி அறச்சீற்றம் கொள்வது அவசியமாக இருக்கிறது.

    "ஷெல்லி ரகசியமாய் பைபிள் வாசிப்பார்"- என்ற பொய்ப்பிரச்சாரத்தைப் பரப்புவதில் அந்த நண்பருக்கு தொழில் லாபம் இருக்கலாம் அல்லது அவருக்கு நேரிட்ட மூளைச்சலவையின் விளைவாலான மன நோயாக இருக்கலாம்.

    இந்த நோய் புதிது ஒன்றும் இல்லை. நம்மைச்சுற்றி 90% மனிதர்களிடம் இருக்கிறதே.

    இது போன்ற சிந்தனையும் எழுத்தும் ஒருவோளை நோயை முழுக்க குணப்படுத்தாவிட்டாலும், குறைந்த பட்சம் பாவப்பட்டவர்கள் பாதிக்கப்படாவண்ணம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    வாழ்த்துக்கள் :)///

    90 என்பதை மட்டும் கொஞ்சம் கூட்டலாம்

    ReplyDelete
  14. //// MEENAKSHISUNDARAM SOMAYA said...
    என்னை பொறுத்த மட்டில் ....
    கடவுள் என்பது மனித ஆழ்மன உருவகமே
    (இயற்கையின் அற்புத ஆற்றலை
    மனித வடிவில் உருவகபடுத்தி வணங்கி.,பயந்து
    மகிழ்கிறான்
    ஒவ்வொரு தனி மனிதனுக்கும்
    ( ஆத்திகர்களாயினும் சரி நாத்திகர்களாயினும் சரி )
    தனிப்பட்ட முறை யில் இறை என்ற CONCEPT....
    SELF INNER INBUILT DEFENCE TOOL
    ஆகவே இருந்துவருகிறது
    தான் தவறுசெய்தால் இறையே என்னை காப்பாற்று
    என்று உள் மனம் இறைஞ்சுகிறது
    தான் வெற்றி பெற்றால் இறையே நன்றி என்று
    காணிக்கை அர்பணிக்க படுகிறது
    (இதுவே பரிணாம வளர்ச்சியில்
    இறை வணிகம் ஆயிற்று )
    .
    இறை என்ற CONCEPT தோன்றியதும்
    இறை இல்லை என்ற வாதமும்
    தோன்றியிருப்பது இயற்கையே .
    ஆனால் இறை இல்லை என்று
    வாதம் புரியும் தனி மனிதனும்
    இறை என்ற CONCEPT ஐ ஆழ்மனதில்
    ஒப்புக்கொண்டு வாழ்வது அவனுக்கு
    வாழ்கையை எளிதாக்கி இருக்கிறது
    என்பது தான் சரி .. ////

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  15. ///Anonymous said...
    கடவுள் இல்லேன்னு யார் சொன்னா? இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன் ‍‍- ஏதோ ஒரு திரைப்படத்தில் கமல். எல்லாத்துக்கும் மேல ஒருவரோட மறைவுக்குப்பின் அவர ஆத்திகராவோ நாத்திகராவோ மாத்த நினைப்பது, நாம நம்ம கொள்கையிலே நம்பிக்கையோட இல்லேன்னுதன் அர்த்தம். ///

    மிகச் சரியான வாதம்
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  16. /// நட்புடன் ஜமால் said...
    சரியா சொன்னீங்க‌
    என் பெயர் கொண்டு என்னால் பலதை சொல்லிவிட முடிவதில்லை, எழுத்துகளை எழுத்தாளர்களோடு சேர்த்தே பார்க்கும் சமூகத்தில் எல்லாம் சிரமமே ...///

    கொலை படவே நேர்ந்தாலும் சரி என்று படுவதை சொல்லிவிட்டு கொலை படுவோம் தோழர்

    ReplyDelete
  17. ///Christopher said...
    பாரதியை பாரதியாகவும், காந்தியை காந்தியாகவும் மட்டும் பார்க்க வேண்டியது சரிதான் அனால் அவர்களின் செயல்பட்டை முழுமையாக புரிந்துகொள்ள அவர்கள் வாழ்ந்த காலம் அவர்களின் அரசியல் சமுக பொருளாதார நிலைமையையும் சேர்த்துதான் பார்க்க வேண்டியுள்ளது ///

    ஆமாம்தான் தோழர். ஆனால் சாதியையும் மதத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டாம் என்பதுதான் சாரம்.

    பொருளாதார நிலையை என்று வந்துவிட்டால் கிரிமி லேயர் சேர்த்தே வந்துவிடுமே தோழர்

    ReplyDelete
  18. ///எஸ்.ராஜாபாபு said...
    தங்கள் கட்டுரை அருமை.///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. /// நா சாத்தப்பன் said...
    நாத்திகம் மூளையின் பேச்சையும் ஆத்திகம் இதயத்தின் பேச்சையும் கேட்டு செயல்படுபவை.

    நல்ல பதிவு தோழர். வாழ்த்துக்கள் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  20. பிடித்த ஆடை அணிந்துக் கொள்வதை போல, பிடித்த உணவை சாப்பிடுவது போல ஆத்திகமோ, நாத்திகமோ பிறரை எவ்விதத்திலும் பாதிக்காமல் அனுசரிப்பது உத்தமம். அப்போதே காய்தல், உவத்தல் இன்றி பிறரை பார்க்க முடியும்.. நல்ல படைப்பு.

    ReplyDelete
  21. மிக சரி ஐயா...
    மற்றவர்களை விடுங்கள் இன்னமும் என் அம்மா நான் நல்லா சாமி கும்பிடுவேன் என்று எல்லோரிடமும் சொல்லுவார்..
    நாத்திகம் என்பது இழிநிலை என்பது அவரது கருத்து...

    ReplyDelete
  22. இவ்விரு கட்சிகளில் நான் எந்த கட்சியென்று, எனக்கு இன்று வரை விளங்கவில்லை..! காரணம் எனக்கு கடவுள் (என்ற வார்த்தையில்) நம்பிக்கையுண்டு..! ஆனால், அக்கடவுள், நம் ஆத்தீகர்களின் கடவுள் பட்டியலில் இல்லையே..!! ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மனித குணங்களில் கடவுளைக் காண்டுகொண்டுதான் இருக்கிறேன்..! (ஆனாலும், என் பள்ளிச் சான்றிதழின் படி நான் இந்துவாம்..!!)

    ReplyDelete
  23. /// Jayajothy Jayajothy said...
    பிடித்த ஆடை அணிந்துக் கொள்வதை போல, பிடித்த உணவை சாப்பிடுவது போல ஆத்திகமோ, நாத்திகமோ பிறரை எவ்விதத்திலும் பாதிக்காமல் அனுசரிப்பது உத்தமம். அப்போதே காய்தல், உவத்தல் இன்றி பிறரை பார்க்க முடியும்.. நல்ல படைப்பு ./ / /

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  24. ///மயிலன் said...
    மிக சரி ஐயா...
    மற்றவர்களை விடுங்கள் இன்னமும் என் அம்மா நான் நல்லா சாமி கும்பிடுவேன் என்று எல்லோரிடமும் சொல்லுவார்..
    நாத்திகம் என்பது இழிநிலை என்பது அவரது கருத்து...////

    இருக்கட்டும் மயிலன். அது அவர்களது நிலை.

    அது பிரச்சினையும் இல்லை தோழர்.

    சாமி கும்பிடாத என்னை ,” ஆமாம் யாருக்கும் தெரியாம கும்பிடுவான்” என்று சொல்வது இருக்கு பாருங்கள். அதுதான் கொடுமையே

    ReplyDelete
  25. ///திவ்யா @ தேன்மொழி said...
    இவ்விரு கட்சிகளில் நான் எந்த கட்சியென்று, எனக்கு இன்று வரை விளங்கவில்லை..! காரணம் எனக்கு கடவுள் (என்ற வார்த்தையில்) நம்பிக்கையுண்டு..! ஆனால், அக்கடவுள், நம் ஆத்தீகர்களின் கடவுள் பட்டியலில் இல்லையே..!! ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மனித குணங்களில் கடவுளைக் காண்டுகொண்டுதான் இருக்கிறேன்..! (ஆனாலும், என் பள்ளிச் சான்றிதழின் படி நான் இந்துவாம்..!!)///

    அதில் எந்தப் பிழையும் இல்லை பெண்ணே.

    சாமியே கும்பிடலாம். அது நம்பிக்கை சார்ந்த விஷயம்தானே

    ReplyDelete
  26. //அப்படி சொன்னவன் நன்கு கற்று தேர்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவர் “ நீ எவ்வளவுதான் படித்திருந்தாலும், ஞானஸ்த்தனாக இருந்தாலும் இறைவனைப் பணிந்து தொழாவிட்டால் உன்னிடம் இருக்கும் ஞானத்தினால் எந்தப் பயனும் இல்லை” என்று சொல்லியிருக்கிரார்.//

    //ஆத்திகம் எவ்வளவு பழசோ அதற்கு ஒரு நொடியும் குறையாத பழசு நாத்திகம்.//

    நான் கட்டுரையில் மிகவும் ரசித்த வரிகள் தோழர்.. உங்கள் தளத்தில் நான் ஏற்கனவே உறுப்பினராகி பின் தொடர்பவனாக உள்ளேன்.. ஆனாலும் இதுவரை வந்து இப்படியான நல்ல கட்டுரைகளை சரிவர படிக்காதது குறித்து வருத்தப்படுகிறேன்..

    ReplyDelete
  27. /// sathish prabu said...
    //அப்படி சொன்னவன் நன்கு கற்று தேர்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவர் “ நீ எவ்வளவுதான் படித்திருந்தாலும், ஞானஸ்த்தனாக இருந்தாலும் இறைவனைப் பணிந்து தொழாவிட்டால் உன்னிடம் இருக்கும் ஞானத்தினால் எந்தப் பயனும் இல்லை” என்று சொல்லியிருக்கிரார்.//

    //ஆத்திகம் எவ்வளவு பழசோ அதற்கு ஒரு நொடியும் குறையாத பழசு நாத்திகம்.//

    நான் கட்டுரையில் மிகவும் ரசித்த வரிகள் தோழர்.. உங்கள் தளத்தில் நான் ஏற்கனவே உறுப்பினராகி பின் தொடர்பவனாக உள்ளேன்.. ஆனாலும் இதுவரை வந்து இப்படியான நல்ல கட்டுரைகளை சரிவர படிக்காதது குறித்து வருத்தப்படுகிறேன்../////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  28. இந்த சதீஷ் பிரபு தான் நான் அன்று தங்களுக்கு போன் மூலமாக அறிமுகபடுத்த நினைத்த தோழர். பீச்சன்கையின் படைப்பாளி

    ReplyDelete
  29. இன்று பேசுகிறேன் தோழர்

    ReplyDelete
  30. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம்போல் வாழ்வியலுக்கு ஆத்திகமும் , நாத்திகமும்.

    ReplyDelete
  31. ///G.M Balasubramaniam said...
    ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம்போல் வாழ்வியலுக்கு ஆத்திகமும் , நாத்திகமும். ////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  32. கட்டுரை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்துவிட்டது. ஆத்திகமும் நாத்திகமும் சேர்ந்தே என்றும் இருந்து வந்திருக்கின்றன. என்று தொடங்கி அதற்குச்சான்றாக திருக்குறளும் விவிலியமும் காட்டப்படுகின்றன. பின்னர் ஏன் ஷெல்லி வந்தார் என்று தெரியவில்லை. அதை வைத்து கவிஞரைக் கவிஞராகப்பாருங்கள் என்று முடிகிறது.

    ஓகே. வள்ளுவர் ஆத்திகர்தான். வள்ளுவர் காலத்திலும் நாத்திகம் மட்டுமன்று, நாத்திகத்தைப்பரப்ப எழுத்துக்களும் இருந்திருக்கலாம். ஆனால் அவை இருட்டட்டிக்கப்பட்டிருக்கலாம். காரணம் என்றுமே ஆத்திர்கர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே அவர்கள் நினைத்ததைச்செய்யலாம். இன்றும் ராமசாமி, பிள்ளையாரைக்கும்பிட்டார் இரகசியமாக எனப்பரப்புவர்கள் இந்த ஆத்திகர்கள்தானே!

    ஓகே. விவிலிய வரியை வைத்து நாத்திகர்களிடமிருந்து மக்களை மீட்க எழுந்தது எனச்சொல்கிறீர்கள். இருக்கலாம். ஆயினும் இங்கொன்றைக்கவனிக்க வேண்டும். மதங்கள் - அஃதெம்மதாமாயினும் சரி - ஒரு பவர் சென்டர். அது சக்திவாய்ந்தது. அச்சக்தி அதை எல்லாச்செயல்களும் செய்யத்தூண்டுகிறது. அஃதிலொன்றே மக்களைப்பயமுறுத்தி கடவுள் பிரச்சாரத்தை செய்து வெற்றி காணல். கடவுளுக்குப்பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பமென்பது ஒரு கோழைத்தனமான பயமுறுத்தல். எழுதியவர் கடவுளைப்பேயாக நினைத்துவிட்டார். அதே விவிலியம் உள்ளே கடவுள் தந்தை என்றும் நாம் அவரின் குழந்தைகள் எனவும் அவர் அன்பே வடிவாமானவர் என்றும் அவர் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு நம்மை மன்னிப்பாரென்றும் குட்டிக்கரணம் போடுகிறது. எப்படியாகினும் பயத்தின் மூலம்தான் கடவுள் நம்பிக்கையை வளர்க்கவேண்டுமென்பது இழிவான செயல்.

    .அவ்வரி நாத்திர்களை மனதில் வைத்து எழுதப்பட்டது என்கிறீர்கள். இல்லை...மக்களைப்பயமுறுத்தினால் மட்டுமே என்பது நல்ல தந்திரம்..

    ஆத்திகமும் நாத்திகமும் அரசியல்கள். இஃதில் ஆத்திகம் நடாத்துவது கேடுகெட்ட அரசியலும் மட்டுமன்று; பயங்கரமானதும் கூட. எ.கா குருசேட் போர்கள். மக்கள் விலங்குகளைப்போல கொத்துகொத்தாகக்கொள்ளப்பட்டார்கள். நாத்திகர்களை மட்டும் கொல்லவில்லை ஆத்திகர்கள். பிறம்தத்தினர்களையும் கொன்றார்கள். மதுரைச்சமணர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை இன்று திருத்தி அவர்களே கழுமரமேறி தற்கொலை செய்தார்கள் என்கிறார்கள் ஆத்திகர்கள். பத்தாயிரம் பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்வதை மன்னன் அங்கீகரித்து வேடிக்கைப்பார்த்தான் என்கிறார்கள். கொலை, பொய், சொல்லமுடியா அநியாயங்கள் என்று மதங்கள் தம்மை வாழவைத்துக்கொண்டு வருகின்றன.

    விவிலியத்தின் முதல் வரி ஒரு அரசியல் வசனம். அரசியலும் அரசியல் சார்ப்புமே ஆத்திகத்தை வாழவைக்கின்றன. நாத்திகம் தானே வாழும் தன்மை. ஆத்திகம் தானே வாழாது.

    ReplyDelete
  33. மிக்க நன்றி காவ்யா.

    இது ஆத்திகம் பற்ரியோ நாத்திகம் பற்ரியோ பேசாத பத்தி.

    இவர்கள் ரகசியமாக சாமி கும்பிடுபவர்கள் என்று நாத்திகர்களைக் கொச்சைப் படுத்தும் ஆத்திகர்களின் அசட்டுத்தனம் அல்லது அயோக்கியத் தனம் பற்ரி மட்டுமே ஒரு சின்ன சம்பவத்தோடு சொல்லும் ஒரு சிரிய பதிவு.

    எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக் கொள்ளலாம்.

    இன்னொன்று நாத்திகம் என்பது புதிய விஷயம் மாதிரி சொல்லப்படுவதும்.

    ஆத்திகம் எவ்வளவு பழசோ அவ்வளவு பழசு நாத்திகமும்.

    மதம் என்பதே நிறுவனம்தான்.

    அதனால்தான் நாம் சொல்கிறோம்,

    “ நமக்கு எந்த மதத்தோடும் சம்மதம் இல்லை”

    ReplyDelete
  34. பெரிய தத்துவத்தை மிக எளிமையான கேள்வியைத் தொடுத்து நீங்களே விடை த்ந்திருக்கிறீர்கள்.......இல்லை என்று இருந்ததிலிருந்து வந்தது தான் நாத்தீகம்...என்பது என் கருத்து ...வள்ளுவனின் , பைபிளின் மேற்கோள்கள் உங்கள் அறிவுச் சொறிவை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்... மொத்தத்தில் அருமை

    ReplyDelete
  35. கமல்ராஜ் ருவியேMay 27, 2012 at 4:39 PM

    பெரிய தத்துவத்தை மிக எளிமையான கேள்வியைத் தொடுத்து நீங்களே விடை த்ந்திருக்கிறீர்கள்.......இல்லை என்று இருந்ததிலிருந்து வந்தது தான் நாத்தீகம்...என்பது என் கருத்து ...வள்ளுவனின் , பைபிளின் மேற்கோள்கள் உங்கள் அறிவுச் சொறிவை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்... மொத்தத்தில் அருமை

    ReplyDelete
  36. /// கமல்ராஜ் ருவியே said...
    பெரிய தத்துவத்தை மிக எளிமையான கேள்வியைத் தொடுத்து நீங்களே விடை த்ந்திருக்கிறீர்கள்.......இல்லை என்று இருந்ததிலிருந்து வந்தது தான் நாத்தீகம்...என்பது என் கருத்து ...வள்ளுவனின் , பைபிளின் மேற்கோள்கள் உங்கள் அறிவுச் சொறிவை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்... மொத்தத்தில் அருமை ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  37. காய்தல் உவத்தல் இன்றி பார்க்கவேண்டிய அவ்சியம் உணர்த்திய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  38. /// இராஜராஜேஸ்வரி said...
    காய்தல் உவத்தல் இன்றி பார்க்கவேண்டிய அவ்சியம் உணர்த்திய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. .///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...