“சிரபுஞ்சியில் மழையே சரியாப் பெய்றது இல்லையாமேப்பா?”
படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது கீர்த்தி கேட்டாள்.
“ஆமாண்டா”
“அப்புறம் ஏன், இன்னமும் உலகத்துலேயே அதிகமா மழை அங்கதான் பெய்யுதுன்னு பொய் பொய்யா நடத்துறீங்க”
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் சொல்லித் தருகிற பொய் இது ஒன்று மட்டும்தானா மகளே என்று கேட்கத் தோன்றியது.
ஏன் ஒன்றைச் சொல்லி ஒரு நூறை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி மௌனத்தைவிரித்துக் கொண்டிருந்தேன். அவளாகவே அடுத்ததைக் கேட்டாள்,
" நம்ம ஊரப் போலவே அங்கையும் மழை இல்லன்னா நம்ம ஊரைப் போலவே அங்கையும் பூமி வறண்டு வெடித்துடான் கிடக்குமா?”
எனக்கு வேலை வைக்காமல் இடை மறித்த விக்டோரியா,
“ நம்ம ஜனங்க மாதிரி எல்லா ஊர் ஜனக்களுக்கும் மனசு வறண்டுதானே கிடக்குது. மனசு வறண்டுக் கிடந்தா பூமியும் வறண்டுதானே கிடக்கும்.
மனசு ஈரப் பட்டாதானே பூமியும் ஈரப்படும்”
“அதானே”
ஏதோ பெரிதாய் புரிந்ததுபோல் கீர்த்தி சொல்லி வைத்தாள்.
ஆமாம்,ஜனங்களின் மனதில் ஈரமே இல்லையா?
கோடைக் கரிசலாய் மனித மனங்கள் வறண்டு வெடித்துதான் கிடக்கின்றனவா?
இல்லை என்று முகத்தில் அறைந்து சொல்லின போனமுறை சென்னை வந்து திரும்பிய போது நிகழ்ந்த இரு சம்பவங்கள்.
பொதுவாகவே “தாய்மை” என்பதை புனிதம் என்று சொல்வது கூட பெண்களை இன்னும் கொஞ்சம் கசக்கி வேலை வாங்கத்தானோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டுதான்.
தாய்மைக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதன் மூலம் தகப்பனது பொறுப்பை, வேலைப் பகிர்வை தள்ளுபடி செய்து பெண்ணின் உழைப்பை இந்தச் சமூகம் சுரண்டுவதாகவே படும்.
ஆனால் எல்லாம் கடந்து தாய்மை ஈரமானது என்பது மீண்டும் இன்னொரு முறை நிரூபனமானது அன்று காலை.
அன்று காலை பயணச்சீட்டு வாங்குவதற்காக சைதாப்பேட்டை ரயிலடியில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.கொஞ்சம் நீண்ட வரிசை. வெளியே சைக்கிள் ஸ்டாண்ட் வரைக்கும் நீண்டிருந்தது.
சன்னமாகத் தூறத் தொடங்கியது.
உள்ளே ஓடிவிடலாம் என்றால் எனக்கும் கட்டிடத்திற்கும் இடையில் நான்கைந்து பேர்களே இருந்தனர். எனக்குப் பின்னே ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது பேர் நின்றிருந்தனர். கொஞ்சம் நனைவதற்குப் பயந்து உள்ளே போனால் பிறகு கடைசி ஆளாய் நின்று பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் கூடுதலாக செலவளிக்க நேரிடும். எனவே சன்னமாக நனைந்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.
ஓரத்தில் சாக்கு விரித்து அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அம்மா சொன்னார்,
“இந்த ரயிலு இல்லேன்னா அடுத்த ரயிலு. ஓடியா போகப் போகுது. நனையாமக் கொஞ்சம் ஒதுங்குப்பா. ஏற்கனவே தும்முற. காச்ச கீச்ச வந்துறப் போகுது.”
ஒரு தாய் எந்த நிலையில் இருந்தாலும் பொங்கிப் பிரவாகிக்கவே செய்யும் ஈரம்.
ஒருவழியாய் ரயில் பிடித்து தாம்பரம் இறங்கி அங்கிருந்து பெரம்பலூருக்கு பேருந்து ஏறினேன்.
நல்ல பசி.
எங்கேனும் சாப்பிட நிறுத்த மாட்டார்களா என்று வயிறு கிடந்து அலைந்தது.
இன்னும் கொஞ்சம் விட்டால் பெருங்குடல் சிறுகுடலைத் தின்றுவிடும் என்கிற ஒரு உச்சத்திற்கு பசி போன நிலையில் ஒரு வழியாய் பேருந்து ஒரு மோட்டலுக்குள் நுழைந்தது.
நடத்துநருக்கும் ஓட்டுநருக்கும் நன்றி சொல்லச் சொன்னது வயிறு.
இறங்கியதும் இளநீர் விற்குமிடத்தைத் தேடினேன்.
இரண்டு காரணங்களுக்காக நான் மோட்டல்களுக்குள் நுழைவதில்லை.
ஒன்று,
அங்கு கிடைக்கும் உணவின் தரம்.
மற்றொன்று,
மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து மோட்டலில் சாப்பிடும் காசை வைத்து சின்னதாய் ஒரு சாப்பாட்டுக் கடை வைத்து விடலாம். அப்படியொரு கொள்ளை விலை.
நமக்கென்றுதான் ஒரு ராசி உண்டே. மோட்டலைச் சுற்றி சுற்றி வந்தும் இளநீர் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லை. உள்ளே போய் விட வேண்டியதுதான் என்று எட்டிப் பார்த்தேன்.
குழம்பின் நிறமே வயிற்றுக்கு எரிச்சலைக் கொண்டு வந்தது.
சரி என்று சொல்லி தேநீர் ஸ்டாலுக்குப் போனேன். கடும் வெய்யிலாக இருந்ததால் கூட்டமே இல்லை. ஒரு சம்சாவை எடுத்தேன். முடித்ததும்
“ஒரு காபி கொடுங்க”
இன்னொரு சம்சாவை எடுக்கப் போனேன்.
“சார், வேணாம் சார். வெய்யில். வயித்துக்கு ஒத்துக்காது. பன்னோ பிஸ்கட்டோ சாப்பிடுங்க சார்”
யாரும் பார்க்கிறார்களா என்ற பயத்தோடு சன்னமான குரலில் சொன்னார் டீ மாஸ்டர்.
“ஏண்டா ராஸ்கோலு இப்படி வடை சம்சாவ வாங்கிட்டு வர. கண்ட கண்ட எண்ணெயில சுத்தமில்லாத மாவுல செஞ்சு தொலச்சிருப்பானுங்க. புள்ளைங்களுக்கு ஒத்துக்காதுன்னு எத்தன முறை சொல்றது” என்று பிள்ளைகளுக்கு வடை அல்லது சம்சா வாங்கி வரும்போதெல்லாம் அம்மாயி திட்டுவது நினைவுக்கு வந்தது.
மீண்டும் டீ மாஸ்டரைப் பார்த்தேன்.
அங்கே வேட்டி கட்டிய எங்க அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருப்பதாகவே பட்டது.

எல்லாம் கடந்து தாய்மை ஈரமானது
ReplyDeleteஎன்றென்றும் அன்னையர் தின வாழ்த்துகள் !
மிக்க நன்றி தோழர் ராஜேஸ்வரி
ReplyDeleteஅருமை ஐயா.
ReplyDeleteமனிதம் இருக்கிறது. இன்னும் தொலையவில்லை.
மிக்க நன்றி.
மிக்க நன்றிங்க அய்யா.
ReplyDeleteஏராளமாய் இருக்கிறது ஈரம்
ஒரு தாய் எந்த நிலையில் இருந்தாலும் பொங்கிப் பிரவாகிக்கவே செய்யும் ஈரம்.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே , எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது
மிக்க நன்றி தோழர் ராஜ்பாபு
ReplyDeleteதாய்மை என்பது பால் கடந்த உணர்வு என்பதை அந்த வேட்டிகட்டிய அம்மாயி உணர்த்தியிருக்கிறார். கவனியுங்கள்! தம் தேவையை நிறைவு செய்ய உழைக்கும் மக்கள் எப்பொழுதும் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உபரி வருவாய்க்கு ஆலாய்ப் பறப்பவர்கள் மற்றவர்களைச் சுரண்டுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.
ReplyDeleteஈரம் வற்றும் தாய்மை வற்றாது...
ReplyDelete//// யரலவழள said...
ReplyDeleteதாய்மை என்பது பால் கடந்த உணர்வு என்பதை அந்த வேட்டிகட்டிய அம்மாயி உணர்த்தியிருக்கிறார். கவனியுங்கள்! தம் தேவையை நிறைவு செய்ய உழைக்கும் மக்கள் எப்பொழுதும் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உபரி வருவாய்க்கு ஆலாய்ப் பறப்பவர்கள் மற்றவர்களைச் சுரண்டுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். ////
உபரிதான் பிரச்சினையே தோழர்
//// Panneer Selvam said...
ReplyDeleteஈரம் வற்றும் தாய்மை வற்றாது... ///
தாய்மையின் ஈரம் உலகின் கடைசி மனிதனுக்கு பந்தி வைத்த பின்பும் மிச்சம் இருக்கவே செய்யும் தோழர்.
மிக்க நன்றி
எதார்த்தமான நிகழ்வு .. இன்றைய காலத்தில் அதிசயமாக தெரிகிறது .. அண்ணை என்னும் அக்கறையின் சிந்தனை என்றுமே மாறுபடும் ...
ReplyDelete/// அருள்மொழி பொள்ளாச்சியிலிருந்து said...
ReplyDeleteஎதார்த்தமான நிகழ்வு .. இன்றைய காலத்தில் அதிசயமாக தெரிகிறது .. அண்ணை என்னும் அக்கறையின் சிந்தனை என்றுமே மாறுபடும் ...////
மிக்க நன்றி தோழர்
ஈரமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி தோழர்...
ReplyDelete/// அன்பரசன் said...
ReplyDeleteஈரமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி தோழர்...///
மிக்க நன்றி தோழர்
your v.keen observation is appreciable.vetti kattana ammayekku irukkira unarvu kooda tasmac nadathara ammayekku illaiye!this is my anguish for those lakhs &lakhs of youths who are getting spoiled.nice.
ReplyDelete/// Mangai A said...
ReplyDeleteyour v.keen observation is appreciable.vetti kattana ammayekku irukkira unarvu kooda tasmac nadathara ammayekku illaiye!this is my anguish for those lakhs &lakhs of youths who are getting spoiled.nice. ///
மிக்க நன்றி தோழர்
அருமை
ReplyDelete///// balasankar said...
ReplyDeleteஅருமை ////
மிக்க நன்றி தோழர்
அற்புதம் . நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி தோழர்.
ReplyDeleteஅருமையான நடை.... எளிமையான சொற்பதங்க|ள்..... சிரபுஞ்சியையும் வறண்ட மனங்கலளையும் இனைத்த விதம்..... என் பக்கத்து நிகழ்வுகளை எடுத்து வைத்தது....... தாய்மை ... முத்தாய்ப்பு....................... அருமை
ReplyDeleteபிரியம் பிரவகிக்கும் போது புலப்படும் எல்லோருமே பிரியமானவர்களாய் தான் தெரிவார்கள் . தாய்மையின் ஈரத்தில் நனைதல் சுகமே.
ReplyDelete//// mannai muthukumar said...
ReplyDeleteஅற்புதம் . நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி தோழர்.////\\\
மிக்க நன்றி தோழர் மன்னை முத்துக்குமார்
///// Kamaltraj said...
ReplyDeleteஅருமையான நடை.... எளிமையான சொற்பதங்க|ள்..... சிரபுஞ்சியையும் வறண்ட மனங்கலளையும் இனைத்த விதம்..... என் பக்கத்து நிகழ்வுகளை எடுத்து வைத்தது....... தாய்மை ... முத்தாய்ப்பு....................... அருமை / / / /
மிக்க நன்றி தோழர்
//// Jayajothy Jayajothy said...
ReplyDeleteபிரியம் பிரவகிக்கும் போது புலப்படும் எல்லோருமே பிரியமானவர்களாய் தான் தெரிவார்கள் . தாய்மையின் ஈரத்தில் நனைதல் சுகமே./ / /
மிக்க நன்றி தோழர்.
தாய்மையின் ஈரத்தில் நனைவது பெரும் சுகம்
அன்றாட பயணத்தின் அனுபவங்களை இந்திய தேசத்தின் சமூக பொருளாதார எதார்த்தத்துடன் தாய்மை உணர்வையும் கலந்து வரைந்திருப்பது சிறப்பு...சோஷலிச எதார்த்தவாத படைப்புகளை முன்னெடுத்து செல்வோம் வாழ்த்துக்கள்...
ReplyDelete/// விழுப்புரம் DYFI said...
ReplyDeleteஅன்றாட பயணத்தின் அனுபவங்களை இந்திய தேசத்தின் சமூக பொருளாதார எதார்த்தத்துடன் தாய்மை உணர்வையும் கலந்து வரைந்திருப்பது சிறப்பு...சோஷலிச எதார்த்தவாத படைப்புகளை முன்னெடுத்து செல்வோம் வாழ்த்துக்கள்.../ / /
மிக்க நன்றி தோழர்
>>>>பொதுவாகவே “தாய்மை” என்பதை புனிதம் என்று சொல்வது கூட பெண்களை இன்னும் கொஞ்சம் கசக்கி வேலை வாங்கத்தானோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே >>>>உண்டுதான்.
ReplyDeleteஇந்த கட்டுரை படித்த பின்னும் மேற் சொன்ன கருத்தை நம்புபவன் நான் . அன்புக்கு அடைக்கும் தாழும் இல்லை தாய்மை தந்தைமை(!!!!) என்ற பேதமும் இல்லை
யாசகம் கேட்பவராக இருந்தாலும் அவரிடத்திலும் தாயுணர்வு பிரதிபளிக்குமென்ற உண்மையை சக மனித பார்வையோடும் மோட்டல்களில் அநியாயத்துக்கு விற்கப்படும் உணவுகளையும் ஒரு பயனக்குறிப்பாக வெளிபடுத்திருக்கும் உங்களின் எழுத்து தொடர்ந்து நடுத்தர/அடித்தட்டு மக்களின் வாழ் நிலைகளை படைப்பாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்...
ReplyDelete///>>>>பொதுவாகவே “தாய்மை” என்பதை புனிதம் என்று சொல்வது கூட பெண்களை இன்னும் கொஞ்சம் கசக்கி வேலை வாங்கத்தானோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே >>>>உண்டுதான்.
ReplyDeleteஇந்த கட்டுரை படித்த பின்னும் மேற் சொன்ன கருத்தை நம்புபவன் நான் . அன்புக்கு அடைக்கும் தாழும் இல்லை தாய்மை தந்தைமை(!!!!) என்ற பேதமும் இல்லை // /
அப்படி இருக்க வேண்டும்தான் பாட்ஷா.மிக்க நன்றி
///Madusudan C said...
ReplyDeleteயாசகம் கேட்பவராக இருந்தாலும் அவரிடத்திலும் தாயுணர்வு பிரதிபளிக்குமென்ற உண்மையை சக மனித பார்வையோடும் மோட்டல்களில் அநியாயத்துக்கு விற்கப்படும் உணவுகளையும் ஒரு பயனக்குறிப்பாக வெளிபடுத்திருக்கும் உங்களின் எழுத்து தொடர்ந்து நடுத்தர/அடித்தட்டு மக்களின் வாழ் நிலைகளை படைப்பாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.../ / /
வணக்கம் தோழர்,
பொதுவாகவே முக நூலாயினும் வலை ஆயினும் கொஞ்சம் பொருப்போடு நல்லதைத் தரவேண்டுமென செயல் பட்டுக் கொண்டிருப்பவன்.
நல்லதைத் தொடர்ந்து தர முயலும் போது கவனமும் நம் மீது விழவே செய்கிறது என்பதும் அனுபவம் தந்த உண்மை.
உங்களது தொடர் கவனிப்பு இந்த 50 வயது மனிதனை உற்சாகப் படுத்துகிறது.
இந்தத் தளத்தை யாரும் அவ்வளவாக கவனிக்காத போது நமக்கான கடமையாக அது மாறுகிறது. மிக்க நன்றி தோழர்
பாதைகள் கடுமையானாலும் தொடர்ந்து பயணிப்போம்...
ReplyDelete///Madusudan C said...
ReplyDeleteபாதைகள் கடுமையானாலும் தொடர்ந்து பயணிப்போம்... ///
இந்த அளவு கடுமையான பாதைகளை சமைக்கவே எத்தனைத் தோழர்கள் வெறுங்கால்களோடு பயணித்திருப்பார்கள்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு ...
ReplyDeleteம்ம்ம், மிகவும் நல்ல பதிவு!!!
மிக்க நன்றி தோழர்
ReplyDeleteநீங்க புத்தகங்களே போடலாம். உன்னிப்பாக கவனிக்கிரீங்க, லாவகமாக மொழிய கையாளுறீங்க. அதைவிட, நீங்க வாழ்கையில நடந்ததை சுவாரசியமாகவும், அன்போடையும் பாக்கிறீங்க. உங்ககிட்ட படிக்கிற பசங்க குடுத்து வைச்சவங்க.
ReplyDelete///Gnana Bharathy said...
ReplyDeleteநீங்க புத்தகங்களே போடலாம். உன்னிப்பாக கவனிக்கிரீங்க, லாவகமாக மொழிய கையாளுறீங்க. அதைவிட, நீங்க வாழ்கையில நடந்ததை சுவாரசியமாகவும், அன்போடையும் பாக்கிறீங்க. உங்ககிட்ட படிக்கிற பசங்க குடுத்து வைச்சவங்க./ / /
மிக்க நன்றி தோழர்
தாய்மை சுமக்கும் மனங்களுக்கு ஆண்பெண் பேதமில்லை, ஏழை பாழையென்ற தாழ்வில்லை, எண்ணத்திலும் செய்கையிலும் என்றென்றும் அது நிறைத்திருக்கும். மனங்கள் இன்னும் வரண்டுபோகவில்லை. அதனுள் சுரக்கும் அன்பினைத் தூர்வாரும் தருணங்கள் மட்டுமே குறைந்துவிட்டிருக்கின்றன. மனம் நெகிழ்த்திய, மனிதர்களை அடையாளம் காட்டிய பதிவு. பாராட்டுகள்.
ReplyDelete//// கீதமஞ்சரி said...
ReplyDeleteதாய்மை சுமக்கும் மனங்களுக்கு ஆண்பெண் பேதமில்லை, ஏழை பாழையென்ற தாழ்வில்லை, எண்ணத்திலும் செய்கையிலும் என்றென்றும் அது நிறைத்திருக்கும். மனங்கள் இன்னும் வரண்டுபோகவில்லை. அதனுள் சுரக்கும் அன்பினைத் தூர்வாரும் தருணங்கள் மட்டுமே குறைந்துவிட்டிருக்கின்றன. மனம் நெகிழ்த்திய, மனிதர்களை அடையாளம் காட்டிய பதிவு. பாராட்டுகள். /////
நாம் அந்த வேலையை மட்டுமே செய்து செத்தால் போதும் என்றிருக்கிறது தோழர்.
மிக்க நன்றி
//யாரும் பார்க்கிறார்களா என்ற பயத்தோடு சன்னமான குரலில் சொன்னார் டீ மாஸ்டர்.//
ReplyDeleteஇப்படியும் நடந்துவிடும் சில சம்பவங்கள்தான் வாழ்கையை இன்னும் கொஞ்சம் நகர்த்தலாம் என்ற நம்பிக்கை யை நமக்கு தருகின்றன..
நெருக்கடி சமயங்களிலும் நமக்கு நெருங்கிய சொந்தங்களாக பல மனிதர்களை பார்க்கும் போது மனித நேயம் இன்னும் மாய்ந்து போகவில்லை என்பது புரிகிறது. உங்கள் பதிவு நெருடி செல்கின்றது இதயத்தை...!
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்
Deleteமனதின் ஈரம் அழக்காக சொல்ல உங்களுக்கு மட்டுமே வரும் தோழர்
ReplyDeleteஉங்கள் கட்டுரை உங்களுடன் எங்களையும் பயணிக்க வைத்தது.
ReplyDelete