Wednesday, May 16, 2012

வள்ளலாரை விடவும்....


தற்செயலாக ஆர்த்தி வேந்தன் அவர்களது முக நூல் பக்கம் போனேன்.

இவ்வளவு நாள் பார்க்காமல் போனோமே என்ற எண்ணம் வந்தது.

கொஞ்சம் கூடுதலாக ஈர்க்கவே ப்ரொஃபைல் உள்ளே போனேன்.

மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்றிருந்தது. உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஆஹா நம்ம ஜாதி. ஆமாம் , நம்மைப் பொருத்தவரை நமது மதமும் நாத்திகம் தான், ஜாதியும் நாத்திகம்தான்.

பிடித்த மேற்கோள் என்ற இடத்தில்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நீரூற்ரினேன் “ என்றிருந்தது.

அடடா, அடடா ஆர்த்தி. எனக்கு மகள் வயது இருக்குமா?

குறைந்த பட்சம் சித்தப்பா வயது இருக்கும் எனக்கு. நல்ல மகள்.

” வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார்

வாடிய பயிரைக் கண்டு வாட எவ்வளவு பரந்த மனது வேண்டும். அது மனிதம் தாண்டிய மனப் பக்குவம். கொண்டாடினோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காவேரி டெல்டா பகுதியில் வாடிய பயிர் கண்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டான்.

அதிர்ந்து போனேன்.

வள்ளலாரே வாடிய பயிர் கண்டு வாடத்தானே செய்தார். இவன் தற்கொலைக்கே போனானே.  வள்ளலாரை விடவும் இவனது மனது பெரிதா? குழம்பி, வருவோர் போவோரிடமெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தேன். தாங்க மாட்டாமல் ஒரு நாள் கிஷோர் சொன்னான்,

“வள்ளலார் பார்த்த பயிர் அவரோடது அல்ல, அதனால் வாடும் எல்லைவரை போனார். விவசாயி பார்த்த வாடிய பயிர் அவனோடது. செத்தான்”

இது சரியா தவறா தெரியவில்லை. ஆனால் மகனின் கூற்று சிந்திக்க வைத்தது.

“ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நீரூற்றினேன்”
என்பது வள்ளலாரது நிலைபாட்டை விடவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயியைக் காட்டிலும் சரியான நிலையாகப் படுகிறது. கேட்கலாம்,

ஊற்ற நீரின்றித்தானே செத்தான்?

ஆமாம், ஆமாம்.

ஆனால் நீர் கேட்டு போராடும் யோகியமான சக்திகளோடு இணைந்து போராடி ஒருக்கால் அந்தப் போராட்டத்தில் சாவது கூட சரியான நிலையாகும்.

அருமை ஆர்த்தி.

நண்பர்களுக்கு ஆர்த்தி வேந்தனின் முக நூல் பக்கத்தை சிபாரிசு செய்கிறேன்.

போய் உப்பு காரம் பார்த்து சொல்லுங்கள்.

(இப்படியான முக நூல் பக்கங்களைப் பற்றி எழுதினால் என்ன? சொல்லுங்கள்)

18 comments:

  1. தொடர்ந்து ஆர்த்தி போன்ற நம்ம சாதிக்காரங்ககளை (அதான்... நாத்திகர்களை) அறிமுகப்படுத்துங்க தோழர்!

    அரசெழிலன்
    திருச்சி

    ReplyDelete
  2. /// நாளை விடியும் said...
    தொடர்ந்து ஆர்த்தி போன்ற நம்ம சாதிக்காரங்ககளை (அதான்... நாத்திகர்களை) அறிமுகப்படுத்துங்க தோழர்!

    அரசெழிலன்
    திருச்சி / / /

    அவசியம் தோழர்

    ReplyDelete
  3. விவசாயிக்கு அந்த பயிர் பயிரல்ல...அவர் உழைப்பின் முதலீடு...
    வள்ளலாருக்கு அந்த பயிர் பயிரல்ல...ஒரு உயிர் வாடுவதாகதான் தெரிந்திருக்கிறது...
    ஆர்த்திக்கு மட்டும் தான் பயிர் பயிராகவே தெரிந்திருக்கிறது...

    ReplyDelete
  4. /// prabhakaran said...
    விவசாயிக்கு அந்த பயிர் பயிரல்ல...அவர் உழைப்பின் முதலீடு...
    வள்ளலாருக்கு அந்த பயிர் பயிரல்ல...ஒரு உயிர் வாடுவதாகதான் தெரிந்திருக்கிறது...
    ஆர்த்திக்கு மட்டும் தான் பயிர் பயிராகவே தெரிந்திருக்கிறது... //////

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  5. //“ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நீரூற்றினேன்”//
    மிகவும் அருமை...!!சொல்லோடு நில்லாமல் செயலில் நிறைவேற்ற என் வாழ்துக்கள்..

    ReplyDelete
  6. /// S.M.KAVIN said...
    //“ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நீரூற்றினேன்”//
    மிகவும் அருமை...!!சொல்லோடு நில்லாமல் செயலில் நிறைவேற்ற என் வாழ்துக்கள்..///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  7. முகப்புத்தகத்தில் தன் அகப்பக்கம் காட்டிய ஆர்த்திக்கு என் வணக்கம்.

    ஆர்த்தியை அடையாளங்காட்டிய நண்பருக்கு நன்றி.

    வள்ளலாருக்கும் உழவருக்குமுள்ள மனவேதனைகளின் விளைச்சலையும் உளைச்சலையும் வேறுபடுத்திக்காட்டிய கிஷோருக்கு என் அன்பான பாராட்டுகள்.

    ReplyDelete
  8. /// கீதமஞ்சரி said...
    முகப்புத்தகத்தில் தன் அகப்பக்கம் காட்டிய ஆர்த்திக்கு என் வணக்கம்.

    ஆர்த்தியை அடையாளங்காட்டிய நண்பருக்கு நன்றி.

    வள்ளலாருக்கும் உழவருக்குமுள்ள மனவேதனைகளின் விளைச்சலையும் உளைச்சலையும் வேறுபடுத்திக்காட்டிய கிஷோருக்கு என் அன்பான பாராட்டுகள்.////

    மிக்க நன்றி தோழர். ஒன்று தெரியுமா நான் மிகவும் நேசிக்கிற வலைகளில் உங்களுடையதும் ஒன்று

    ReplyDelete
  9. ஆர்த்தியை அடையாளங்காட்டிய நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  10. ///mannai muthukumar said...
    ஆர்த்தியை அடையாளங்காட்டிய நண்பருக்கு நன்றி.///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  11. \\\ Kaarti Keyan R said...
    நல்ல பதிவு. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. இப்பொழுதுதான் ஆர்த்தி வேந்தனின் முக நூல் பக்கத்தை பார்த்தேன் அருமையான கருத்துக்கள்.
    போய் உண்டு பார்த்த பொழுது உப்பு சரியாக இருந்தது ஆனால் காரம் அதிகம்.ஆனாலும் பகிரலாம்.
    பரிந்துரைத்தமைக்கு நன்றி!!!

    கொண்டல்

    ReplyDelete
  13. /// kondal said...
    இப்பொழுதுதான் ஆர்த்தி வேந்தனின் முக நூல் பக்கத்தை பார்த்தேன் அருமையான கருத்துக்கள்.
    போய் உண்டு பார்த்த பொழுது உப்பு சரியாக இருந்தது ஆனால் காரம் அதிகம்.ஆனாலும் பகிரலாம்.
    பரிந்துரைத்தமைக்கு நன்றி!!!

    கொண்டல்///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  14. சிந்தை தூண்டிய‌ ஆர்த்திக்கும் சிந்தை கிள‌ர்த்திய‌ கிஷோருக்கும் அடையாள‌ப்ப‌டுத்திய‌ த‌ங்க‌ளுக்கும் உவ‌ப்பான‌ ந‌ன்றி தோழ‌ர்! ஒன்று தெரியுமா... நேர‌ம் கிடைக்கும் போது த‌ங்க‌ள் வ‌லைப் ப‌க்க‌ம் வ‌ந்தால் ப‌ல‌ன் எம‌க்கே!

    ReplyDelete
  15. அய்யோ நிலா வர வர உங்கள் பெருந்தன்மைக்கு அளவே இல்லாமல் போகிறது

    மிக்க நன்றி நிலா

    ReplyDelete
  16. அட நாதரிகளா......

    வள்ளல் பெருமான் ஏன்டா இழுகிறீங்க???
    உங்கள் இயேசு வ இயுங்கடா...

    கர்த்தர் வரார் ,தரார் என்று சொல்லும் கும்பல் கண்களுக்கு இந்த செய்தி தெரியாத?

    கர்த்தர கூப்பிட்டு அந்த இடத்த மாதுங்கடா.......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      தங்கள் வருகைக்கு நன்றி தோழர்.

      முதலில் உங்கள் பெயரோடு தைரியமாக வெளியே வாருங்கள். பிறகு நிதானமாக பேசலாம்.

      எது எப்படி இருப்பினும் வருகைக்கு நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...