மயானம் வரைக்கும் பிணங்களைக் கொண்டு செல்வதற்குத்தான் பாடை என்பது பொதுப் புத்தி. எவ்வளவுதான் வசதியானவர்களாக இருந்தாலும் இதுதான் நடக்கும். வசதிக்கு ஏற்ப அலங்காரங்களும் ஆடம்பரங்களும் வேண்டுமானால் கூடவோ குறையவோ செய்யும். ஆனால் ஒரு வீட்டில் ஒரு பிணம் விழுந்தால் ஒரு பாடைதான் கட்டுவார்கள்.
இப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் 1987 வரை.
அந்த ஆண்டுதான் அது நடந்தது.
ராஜஸ்தான் மாநிலம், தியாரோலே கிராமம்.
ஒரு இழவு வீடு.
வாசலில் இரண்டு பாடைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணின் கணவர் நோய் வாய் பட்டு இறந்து போகிறார். ஏகத்துக்கும் கூட்டம்.
எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். ரூப் கன்வர், இறந்து போன அவரது கணவரின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.
பொதுவாகவே ஒரு மரணம் நிகழுமானால் அவரது உறவினர்களும் அவரைச் சார்ந்தவர்களும் இறந்து போனவரின் இழப்பின் சுமை அழுத்த அழுவார்கள்.
ஆனால் ரூப் கன்வர் அன்று தனது கணவரது பிணத்தின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது அதற்காக மட்டுமல்ல.
அந்தி சாய்ந்த போது எரியூட்டுவதற்காக இறந்து போன மனிதனின் பிணத்தை ஒரு பாடையில் ஏற்றுகிறார்கள். இன்னொரு பாடையில் ரூப் கன்வரை ஏற்றுகிறார்கள். ஊர்வலம் தொடங்குகிறது. கன்னங்கறைய அழுதபடியே அந்தச் சின்ன மகள் இரு புறமும் இருப்பவர்களைப் பார்த்து கை கூப்பி தொழுதபடியே போகிறாள்.
போகும் வழியெங்கும் திரண்டிருந்த கூட்டம் ரூப் கன்வரை பதிலுக்கு தொழுத படியே உரத்த குரலில் கூச்சலிடுகிறது
“சதி மாதாக்கி ஜே”
அவரது கணவருக்கு கொள்ளி வைக்கப் பட்டு தீ கொழுந்து விட்டு எரிகிறது.
ஒரு மருத்துவர் வருகிறார். கதறக் கதற, திமிறத் திமிற அந்த பேதைக்கு மயக்க ஊசி போடப் படுகிறது.
மயங்கிய நிலையில் இருந்த ரூப் கன்வரை அவரது சகோதரர்களும் உரிமை கொண்ட உறவினர்களும் எரியும் சிதையில் வீசுகிறார்கள்.
தொழுத படியும் ,அழுத படியும் திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பறிக்கிறது,
“சதி மாதாக்கி ஜே”
இதே மாதிரி ஒரு பின்னந்தியில் இதே மாதிரி எரியும் ஒரு சிதையில் வீசி எறியப்பட்டு எரிந்து சாம்பலாகிறாள் ஒரு யுவதி. பார்த்துக் கொதித்துப் போன நெருடா எழுதினான்,
“ இந்தியா எனும் தேசத்தில்
ஒரு அந்தி வேலை நேரத்தில்
ஒரு நதியின்
பசுங்கரை தன்னில்
நான் கண்ட நெருப்புதான்
பெண்ணா
பெரு நெருப்பா?
சிதையா
சிதறும் சாம்பலா?
ஏதென்று
தெரியா வண்ணம்
எல்லாமே
எரிந்து தணிந்தது
அந்த
இறப்பில்
அந்தத்
துர் மரணத்தில்
அங்கே
எதுவும்
உயிரோடு இல்லை”
எப்படியோ ரூப் கன்வரின் கொலை வழக்காகிறது. மயக்க ஊசி போட்ட மருத்துவர் உட்பட முப்பத்தி இரண்டு பேர் கைது செய்யப் படுகிறார்கள். வழக்கு நடக்கிறது. கொடுமை என்னவெனில், கதறக் கதற , திமிறத் திமிற எரிந்த தீயில் அந்த இளைய மகள் வீசப் பட்டதற்கு சாட்சியே இல்லை என்று அந்த வழக்கு தள்ளுபடியானது.
அதைவிடக் கொடுமை என்னவெனில் தியாரோலா இன்றைக்கு ஒரு பரபரப்பான சுற்றுலாத் தளம்.
அங்கு ரூப் கன்வருக்கு ஒரு சதி மாதா ஆலயம் உண்டு. நுழைவுக் கட்டணமும் உண்டு. நல்ல வசூலும் குவிவதாய் தகவல்கள் சொல்கின்றன.
போதுமன அளவிற்கு எதிர்ப்பியக்கங்கள் இல்லாது போனது.
விளைவாக,
1999 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் காச நோயினால் இறந்துபோன கணவரின் சிதையில் தள்ளப்பட்டு சரண்ஷா என்ற பெண் சாம்பலகிறாள்.
அப்போதும் திரண்டிருந்த கூட்டம் ,
“சதி மாதாக்கி ஜே” சொன்னதோடு கடமையைக் கத்தறித்துக் கொண்டது.
நெருடா எழுதினான்
அசையவில்லை தேசம்.
ரூப் கன்வர் எரிந்து போனாள்.
ரூப் கன்வர் எரிந்த போதும் அசையவில்லை தேசம்,
சரண்ஷா எரிந்தாள்.
இதற்கும் தேசம் தேவையான அளவு அசையவில்லை.
விளைவாக,
பீஹாரிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில், நம் தமிழ் மண்ணில் ஒரு ஆண் இறந்து போகிறான். அவனது சிதையில் தள்ள அவளது மனைவியை நெருங்குகிறார்கள் . உசிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்து குழந்தைகளோடு ஓடுகிறாள். விரட்டுகிறார்கள். இறுதியாக ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து விடுகிறாள்.
பஞ்சாயத்து செய்து காவலர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள்.
இது தமிழ் நாட்டுக் காவல் நிலையம். அவள் காப்பாற்றப் பட்டு விட்டாள். இதுவே அவர்களது மாநிலமாக இருந்திருந்தால் சதி மாதாவின் எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கக் கூடும்.
இரண்டு மாதங்கள் கூட இருக்காது இது நடந்து.
நம் கவனத்திற்கு வராமல் எண்ணற்ற பெண்கள் சதி மாதாக்களாக மாறிக்கொண்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு.
நாம் அசைவற்று இருந்தால்
“சதி மாதாக்கி ஜே” சொல்லிக் கொண்டே
பாடைகளில் உசிரோடு மனுஷிகளை கொண்டுபோகவே செய்வார்கள்.
நன்றி : “குறி” இதழ்

ஆண் ஆதிக்கம்
ReplyDeleteகண்ணீரால் நிரம்புகின்றன என் கண்கள்...
ReplyDeleteஇன்னும் திருந்தவில்லையா இவர்கள் மனைவி இறந்தால் ஆண்களை உடன் தீயில் ஏற்ற ஏற்க்குமா அவர்கள் சமூகம் ...
ரூப் கன்வர், சரண்ஷா நிலை எவருக்கும் வரக்கூடாது கொடுமையிலும் கொடுமை
//இரண்டு மாதங்களுக்கு முன்னால்// அய்யா தாங்கள் சொல்வது 2012 அல்லவா? மனம் கனக்கிறது இந்த மாதர்களின் நிலையை நினைத்து.
ReplyDeleteஎல்லோரும் எடுக்கிறார்கள் என்பதற்காக எடுத்துக் கொள்வதற்கென்ன உயிர் இனாப் பொருளா. என்று எல்லோரும் கேட்டுக் கொண்டே இருந்தால் எதுவுமே கிடைத்துவிடாது. எடத்தே ஆகவேண்டும் அப்பொதுதான் எமக்கானது கிடைக்கும். பெண்களுககு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைககும் அதிகமாகக் கேட்கிறார்கள். ஆனால் எடுத்துக்கொள்ள யாரும் தயார் இல்லை. எடுக்கிறோம் என்பதற்காக மிதமிஞ்சி எடுத்தக் கொள்வதல்ல. விளங்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் எழுதியிருப்பது இன்னும் பலருக்கும் தெரியப்படுத்தப்படுவதாயிருக்கட்டும்.
ReplyDeleteநல்ல படைப்பு இவ்வாற தொடர்ந்தும் படையுங்கள்.
- அதிரன்
மூடர்கள்...
ReplyDelete\\\\ balasankar said...
ReplyDeleteஆண் ஆதிக்கம் //////
ஆணாதிக்கமல்ல தோழர். ஆணாதிக்கத்தின் உச்சம்.
\\\\ தினேஷ்குமார் said...
ReplyDeleteகண்ணீரால் நிரம்புகின்றன என் கண்கள்...
இன்னும் திருந்தவில்லையா இவர்கள் மனைவி இறந்தால் ஆண்களை உடன் தீயில் ஏற்ற ஏற்க்குமா அவர்கள் சமூகம் ...
ரூப் கன்வர், சரண்ஷா நிலை எவருக்கும் வரக்கூடாது கொடுமையிலும் கொடுமை ///
அந்த இடத்தில் நம் வீட்டுப் பிள்ளைகள் என்று பொருத்திப் பார்த்தால் வலியின் அழுத்தம் புரியும் தோழர்.
ஏதாவது செய்ய வேண்டாமா?
ஆமாம் சுகன்.
ReplyDeleteவவுறு பத்திக்கிச்சு சுகன்
மிக்க நன்றி ஆதிரன்
ReplyDeleteமூடர்கள் அல்ல தோழர்கள். கொடியவர்கள்
ReplyDeleteநாம்அசைவற்று இருந்தால்
ReplyDelete“சதி மாதாக்கி ஜே” சொல்லிக் கொண்டே
பாடையில் உசிரோடு மனுஷியை கொண்டுபோகவே செய்வார்கள்.
ஆமாம் ஆமாம் ஆமாம் ,
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
This comment has been removed by the author.
ReplyDeleteகொடுமை கொடுமை கொடுமை .தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துகொள்ளத்தான் கொலையை கூட செய்வார்கள்,எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு உயிரை எடுப்பதென்பது கொலையை விட கொடியது,இதை கொலை என்று கூட சொல்ல முடியாது.மனிதன் அடுத்த கிரகத்தில் குடியேறும் முதல் முயற்ச்சியில் இறங்கிவிட்டாலும்,பூமியில் ஆதி மனித வாழ்க்கை இன்னும் அற்று போக வில்லை என்பதை இதுபோன்ற கொடுமைகள் நமக்கு உரக்க சொல்கின்றது அனைத்து தரப்பிலும் உள்ள இதுபோன்ற அவலங்கள் என்று ஒழிகிறதோ அன்றுதான் மனித இனம் வெற்றியடைந்த நாளாகும்.. நெஞ்சசை சுடும் பதிவு நண்பரே !!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசதி மாதாகி ஜே!
ReplyDeleteமனதார வரவேற்க்கின்றேன்....!
கரம் பிடிக்க இயலாததால்...
மரணம் பிடிக்கும் மனிதர்களின்...
காதலர் தினத்தை கலாச்சார சீர்கேடு எனச் சொல்லும்....
மத மாமேதைகளே....
மனம் பிடிக்காவிட்டாலும் மரணத்தில்
தள்ளிவிடுவத எந்த சீர்கேடு?
மதம் பிடித்த யானைகளே... மனிதம் பிடியுங்கள்!
கொடுமை கொடுமை கொடுமை .தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துகொள்ளத்தான் கொலையை கூட செய்வார்கள்,எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு உயிரை எடுப்பதென்பது கொலையை விட கொடியது,இதை கொலை என்று கூட சொல்ல முடியாது.மனிதன் அடுத்த கிரகத்தில் குடியேறும் முதல் முயற்ச்சியில் இறங்கிவிட்டாலும்,பூமியில் ஆதி மனித வாழ்க்கை இன்னும் அற்று போக வில்லை என்பதை இதுபோன்ற கொடுமைகள் நமக்கு உரக்க சொல்கின்றது அனைத்து தரப்பிலும் உள்ள இதுபோன்ற அவலங்கள் என்று ஒழிகிறதோ அன்றுதான் மனித இனம் வெற்றியடைந்த நாளாகும்.. நெஞ்சசை சுடும் பதிவு நண்பரே !!pakkir kani
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete\\\\ Kaarti Keyan R said...
ReplyDeleteசதி மாதாகி ஜே!
மனதார வரவேற்க்கின்றேன்....!
கரம் பிடிக்க இயலாததால்...
மரணம் பிடிக்கும் மனிதர்களின்...
காதலர் தினத்தை கலாச்சார சீர்கேடு எனச் சொல்லும்....
மத மாமேதைகளே....
மனம் பிடிக்காவிட்டாலும் மரணத்தில்
தள்ளிவிடுவத எந்த சீர்கேடு?
மதம் பிடித்த யானைகளே... மனிதம் பிடியுங்கள்!////
மிக்க நன்றி தோழர்
மிக்க நன்றி தோழர் பக்கிர் கனி
ReplyDeleteஎன்ன கொடுமை இது? வேதனையாக இருக்கிறது.
ReplyDeleteகீழ்வெண்மணியில் 40 பேர்களை குடிசையில் அடைத்து தீயிட்டு கொலை செய்தனர். போதிய சாட்சிகள் இல்லை என கோர்ட்டு குற்றவாழிகளை விடுதலை செய்தது.
ReplyDeleteதமிழ் நாட்டில் கெளவர கொலைகள்
அதிகம் நடக்கிறது. கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டும்.
இது உடன்கட்டையைவிட கொடுமை.
\\\\ Rathnavel Natarajan said...
ReplyDeleteஎன்ன கொடுமை இது? வேதனையாக இருக்கிறது. ////
மிக்க நன்றிங்க அய்யா. நமக்கான வேலை நிறைய இருப்பதையே இது காட்டுகிறது
\\\\\ Radha Krishnan said...
ReplyDeleteகீழ்வெண்மணியில் 40 பேர்களை குடிசையில் அடைத்து தீயிட்டு கொலை செய்தனர். போதிய சாட்சிகள் இல்லை என கோர்ட்டு குற்றவாழிகளை விடுதலை செய்தது.
தமிழ் நாட்டில் கெளவர கொலைகள்
அதிகம் நடக்கிறது. கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டும்.
இது உடன்கட்டையைவிட கொடுமை.///
உடன் கட்டையேடெஹான் தோழர்.
மிக்க நன்றி தோழர்
ஒரு சாமானியனாக என்னளவில் வருந்த மட்டுமே இன்று முடிகிறது
ReplyDeleteஇதில் எனது கோபம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தான் :(
\\\ Mrstupid said...
ReplyDeleteஒரு சாமானியனாக என்னளவில் வருந்த மட்டுமே இன்று முடிகிறது
இதில் எனது கோபம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தான் :( ///
மிக்க நன்றி தோழர்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி. இன்றைய தேவை இன்னொரு ராஜாராம் மோகன்ராய்....
ReplyDelete\\\\ sajan baraj said...
ReplyDeleteவிழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி. இன்றைய தேவை இன்னொரு ராஜாராம் மோகன்ராய்.... ///
மிக்க நன்றி தோழர்
இது இந்தியாவின் ஒரு அபத்தனான நிலை.
ReplyDeleteசட்டத்தின் பிரகாரமுமே, தண்டிக்கப்படவேண்டிய செயல்.
ஆதிகால, காட்டுமிராண்டித்தனத்துக்கு ஒப்பானதுதான்.உற்று நோக்குவீர்களானால், இது மிகப்பெரிய வர்க்க வேறுபாட்டிலிருந்து தோன்றியதைக் காணலாம், இன்றும் இந்த முரண்பாடு, அதிகரித்திருக்கும் இடங்களிலேயே இது காணப்படுகிறது. இது மதம் என்ற போர்வைமூலம், வந்ததாக இல்லாவிடினும், பின்னர் மதவடிவம் எடுத்திருக்கு. உரிமைகள் மறுக்கப்பட்ட இடங்களிலிருந்து உருவாகியிருக்கு என்பது தெளிவாகிறது. சட்டத்தின் மூலமே மட்டுமின்றி சமுதாய சீர்திருத்த வழிகளின் மூலமே நிவர்த்தி செய்யப்படலாம் என்பது என் அபிப்பிராயம். அதற்கு அடிப்படை கல்வியும், விழிப்புணர்வுமே சரியான மருந்தாக அமையும். அதுவரை இது தொடர வாய்ப்புண்டு. இதை யார் கொண்டுசெல்கிறார்கள்? அந்த நிலை மாறவேண்டும். விதவைகள் ஒதுக்கப்படவேண்டியவர்கள் என்ற நிலையை அங்கிருந்து மாற்றவேண்டும்.----- Roger sinna
மிக்க நன்றி ரோஜர் சின்னா. மிகச் சரியாய் சொன்னீர்கள்
ReplyDeleteஇது இளைஞர்களின் காலம்... இளைஞர்கள் மனது வைத்தால் நிச்சயம் இதை மாற்ற முடியும்...
ReplyDeleteநிச்சயம் முடியும் அன்புமணி. எங்கே ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஎந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு உயிரை எடுப்பதென்பது கொலையை விட கொடியது.கொடுமை கொடுமை கொடுமை ..
ReplyDeleteஆமாம் சௌந்தர். மிக்க நன்றி
ReplyDeleteகொடுமை மிகக்கொடுமை..!
ReplyDelete@Readers Spot said...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
மிகமிகக் கொடூரம்... இதைகண்டும் அசைவற்றிருந்தால் நாமும் பிணங்கள்!
ReplyDelete@Jesuraj said...
ReplyDeleteஆமாம் ஆமாம்
மிக்க நன்றி தோழர்
எத்தனை சிதைகளைத் தாண்டி வாழ்கிறோம் பெண்களே...
ReplyDeleteஎரிக்கச் சிலர் இருந்தால்,ஆதரிக்கவும் சிலர் பிறந்தனர்.
அந்த முன்னோடிகளைவணங்குவோம்,
பாராட்டவேண்டிய பதிவு
@சக்தி said...
ReplyDeleteசிதைகள் இன்றைக்கும் இருப்பதுதான் வேதனையே
இதயம் வலிக்கிறது. எமது தேசத்தில் இன்னும் இதுபோன்ற கொடுமைகளா? இன்னொரு இராஜாராம் மோகன்ராயா....? பெண்ணை எரிப்பவர்கள் வீட்டில் பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.. இதைவிட பெரிய கவலை இறந்து, இறக்கச் செய்யும் தம்பதியர்களின் வாரிசுகளின் நிலைமை என்ன? இப்படி கேள்விகள் கேட்டுக் கொண்டேதான் இருக்க முடிகிறதே தவிர முடிவு தெரியவில்லை... மானங்கெட்ட அரசு என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது? (எனது வார்த்தைகள் தடித்திருந்தால் மன்னிக்கவும். மனம் கொதிக்கிறது)...:-((
ReplyDelete///SANTHOSHI said...
ReplyDeleteஇதயம் வலிக்கிறது. எமது தேசத்தில் இன்னும் இதுபோன்ற கொடுமைகளா? இன்னொரு இராஜாராம் மோகன்ராயா....? பெண்ணை எரிப்பவர்கள் வீட்டில் பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.. இதைவிட பெரிய கவலை இறந்து, இறக்கச் செய்யும் தம்பதியர்களின் வாரிசுகளின் நிலைமை என்ன? இப்படி கேள்விகள் கேட்டுக் கொண்டேதான் இருக்க முடிகிறதே தவிர முடிவு தெரியவில்லை... மானங்கெட்ட அரசு என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது? (எனது வார்த்தைகள் தடித்திருந்தால் மன்னிக்கவும். மனம் கொதிக்கிறது)...:-(( ///
உங்கள் கோபம் நியாயமானது தோழர். கெட்ட வார்த்தை கொண்டே வையலாம்.
உடன் கட்டைக்கு எதிராக போராடினார் என்பது தவிர மோஹன்ராயிடம் இருந்த ஆணாதிக்கமும் அலாதியானதே
//இரண்டு மாதங்கள் கூட இருக்காது இது நடந்து.//
ReplyDeleteஅடப்பாவிகளா...! இவனுங்க எல்லாம் பதி பிதாவுக்கு ஜே சொன்னாதான் அடங்குவானுங்க என நினைக்கிறேன்..
/// sathish prabu said...
ReplyDelete//இரண்டு மாதங்கள் கூட இருக்காது இது நடந்து.//
அடப்பாவிகளா...! இவனுங்க எல்லாம் பதி பிதாவுக்கு ஜே சொன்னாதான் அடங்குவானுங்க என நினைக்கிறேன்.. ///
மிக்க நன்றி தோழர்
மனது வலிகிறது ......மிகவும் கனமான உணர்வு ....
ReplyDeleteமிக்க நன்றி சசி
Delete