லேபில்கள்

Friday, May 4, 2012

குடிமகன் திப்பு

“ஏழை மக்கள் தங்கள் வயிற்றுக்காக இரவும், பகலும் உழைக்கிறனர்.உழைத்துக் கொண்டே இறந்தும் போகின்றனர். ஓடும் ஆறுகளின் அழகைக் காணவோ, மேகத் திரள்களைக் கண்டு மகிழவோ, வனங்களையும், சோலைகளையும் ரசிக்கவோ சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை.”

இப்படி ஏழைகளின் இயலாமையை மிகுந்த பரிவோடும், மிகுந்த அக்கறையோடும் பதிந்திருப்பவன் ஒரு பொது உடைமை வாதியாகவோ, ஒரு தொழிற்சங்க வாதியாகவோ, அல்லது இத்தனை இன்னல்களையும் அனுபவிக்கும் ஒரு ஒடுக்கப் பட்ட ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவனாகவோ இருந்தால் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

ஆனால் உழைக்கும் மக்கள் இயற்கையை, வாழ்க்கையை ரசிக்க இயலாமல், அனுபவிக்க இயலாமல் உழைத்து உழைத்தே சாவது கண்டு ரத்தம் கசியக் கசிய ஆதங்கப் பட்டவன் ஒரு மன்னன் என்றால் உறைந்தே போய்விடுவோம். ஆனால் அதுதான் உண்மை.சாகும் வரைக்கும் “ குடிமகன் திப்பு” என்றே தன்னை அழைத்துக் கொண்ட திப்புவின் வார்த்தைகளே மேலே சொல்லப் பட்டவை.

அதிகமாய் திரிக்கப் பட்ட, அளவுக்கதிகமான பொய்களால் எழுதப் பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரன் திப்பு. திப்புவின் தந்தை ஹைதர் அலிக்கும் இது முற்றிலும் பொருந்தும்.

மைசூர் ராஜ்யத்தின் மன்னன் சிக்கத் தேவராயரின் மகனுக்கு காதும் கேட்காது, பேச்சும் வராது. அவன் மன்னனானதும் அவனை ஒரு பொம்மை போலாக்கி ராஜ்யத்தைத் தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் அவனது அமைச்சர்கள் நஞ்சராஜும், தேவராஜும்.

அப்போது ராஜ்யத்தின் தளபதியாக இருந்த ஹைதர் அந்த அமைச்சர்களிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றினார். இந்துக்களிடமிருந்து ஹைதரை அந்நியப் படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் ஆட்சியை உடையார்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதாய் கதைகட்டி விட்டனர்.  திப்புவைப் பற்றி எழுதும் போது கூட அவன் இந்துக் கோயில்களை அழித்தவன்,    கோவில் சொத்துக்களாஇ சூறையாடியவன், போரில் வென்ற பூமியின் மக்களை வாள் முனையில் மதம் மாற்றிய மத வெறியன் என்றே திரித்து வரலாறு எழுதினர் பரங்கியர்.

திப்பு ஒரு ஆழமான இஸ்லாமியன். தீவிரமான மதப் பற்றாளன். இன்னும் சொல்லப் போனால் ஜோசியம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டிருந்தவன் என்பதையெல்லாம் மறுக்கத் தேவையில்லை. அவரது தோல்வி உறுதியான நிலையிலும் முல்லாக்களையும் , பிராமணர்களையும் வரவழைத்து கணிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அவர்களின் ஆலோசனைப்படி அவர்களுக்கு நிறைய தானமாக வழங்கி தோஷம் போக்கியிருக்கிறார். இந்த அளவிற்கு மூட நம்பிக்கையோடுதான் இருந்திருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் மத வெறியனாக இருந்ததில்லை. மாறாக மாற்று மதத்தை மதிக்கிறவராக மாற்று மதங்களுக்கு குறிப்பாக இந்து மதத்திற்கு நிறைய செய்தவராக இருந்திருக்கிறார் என்பதையே சான்றுகள் சொல்கின்றன.

முனைவர் மு. அகமது உசேன் தரும் திப்புவின் நன்கொடைப் பட்டியலைப் பார்ப்போம்.

1) இந்து அறநிலையங்கள் மற்றும் அக்ரஹாரங்கள்.........1,93,959 வராகன்கள்
2) பிராமண மடங்கள்........................................................................20,000 வராகன்கள்
3) இஸ்லாமிய மத நிறுவனங்கள்...............................................20,000 வராகன்கள்
ஆக கூடுதல்.........................................................................................2,33,959 வராகன்கள்.

ஆக 2,33,959 வராகன்கள் நன்கொடையில் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு வெறும் 20,000 வராகன்களை மட்டுமே வழங்கிய திப்புவை, சீரங்கப் பட்டிணம், குருவாயூர் மற்றும் சிருங்கேரி மடங்களுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்த திப்புவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உண்மை பேசுபவனால்கூட மதவெறியன் என்று கூற முடியாது.

உலகமயமாக்கல் வளரும் நாடுகள் ஒவ்வொன்றையும் காவு கொண்டுவரும் வேளையில் கணினி முதல் கண்மை வரை இந்தியச் சந்தையை உலக நாடுகளுக்கு , வெளிப்படையாகச் சொல்வதென்றால் அமெரிக்காவிற்குத் தாரை வார்க்கும் பிரகஸ்பதிகளுக்கு திப்புவின் சந்தை நிர்வாகம் பாடம் தருவதாகவே உள்ளது. உள்ளூர் சந்தையில் அவனது பொருளை விற்பதற்கு மட்டுமல்ல, சுதேசி பொருளை அந்நியன் வாங்குவதற்கும் தடை விதித்திருந்த மன்னன் திப்பு.

அரசு முதலாளித்துவம் என்கிற வடிவத்தை மிக நேர்த்தியாக சமைத்துள்ளான். குறைந்த முதலீடு செய்யும் ஏழைகளுக்கு லாபத்தில் அதிக பங்கும், அதிக முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கு லாபத்தில் குறைந்த பங்கும் வழங்கி பொருளாதார சமனைக் கொண்டுவர முயற்சி செய்தவன் அவன். இப்படியாக நிதி அமைச்சர்களுக்குப் பாடம் நடத்தியவன் அவன்.

அதிலிருந்து இன்றைய அமைச்சர் பெருமக்கள் ‘பாஸ் மார்க்’ வாங்குமளவிற்கும் பாடம் படிக்காததற்கு எந்த விதத்திலும் அவனைப் பொறுப்பாளியாக்க முடியாது.

தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிந்து பெருமுதலாளிகளுக்கு சலுகைகளாய் வாரி வழங்கும் இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியில் திப்புவின் வரி வசூலிப்பு முறையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகவே உள்ளது.விள்:ஐச்சல் குறையும் போதும் வறட்சி பூமியை வறுத்தெடுத்தக் காலங்களிலும் யாரும் கேட்காமலேயே வரி வசூலிப்பதை நிறுத்தியவன் என்பதும், இயற்கை பொய்க்கும் காலங்களில் இன்றைய விவசாயி அவஸ்தைகளும் திப்புவின்மேல் உள்ள மரியாதையை அதிகப் படுத்துகின்றன.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவன் என்பது மட்டுமல்ல யாரிடம் நிலம் இருக்க வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தான். அதனால்தான் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றான். கலப்பை வாங்க எளிய கடன், தரிசு நிலத்தை மேம்படுத்த முன்பணம்,தேக்கு மற்றும் சந்தனம் போன்ற ஏற்றுமதிக்குரிய மரம் வளர்ப்போருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் சலுகைகள் என்பன அவனது கூரிய விவசாயப் பார்வையை உணர்த்துகின்றன

1790 ஆம் ஆண்டு காவிரியில் கட்டப் பட்ட அணையில் “ இறைவனின் இந்த அரசு கட்டும் அணையின் நீரால் தரிசு நிலங்களை விளை நிலமாக்குவோருக்கு நிலம் உடமையாகும்,” என அவன் எழுதி வைத்திருப்பதைப் பார்க்கும் போதும், “ 15 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து ஒரே நிலத்தில் குத்தகைக்கு உழுதிருந்து குத்தகைப் பணமும் முறையாக செலுத்தியிருப்பின் அந்த நிலத்திலிருந்து அவனை வெளியேற்றக் கூடாது” என்ற அவனது பிரகடனத்தைப் பார்க்கும் போதும் அவன் காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது.

குற்றம் புரியும்விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவை மூன்று அடி வளரும்வரை அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்ற அவனது தண்டனை முறை அபூர்வமானது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமானதும்கூட.

அருமையான நூல் நிலையம் ஒன்று அவனிடம் இருந்திருக்கிறது.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளி என்ற அவனது திட்டம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம்.

“ஆடுகள் போல 100 ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் புலியைப் போல சில நாட்கள் வாழ்வதே பெருமை தரும்” என்பான். அவனது சிறப்புகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது அவனது மரணம்.


04.05.1799

ஸ்ரீரங்கப் பட்டிணம்.

ஆற்றங்கரையின் அந்தப் பகுதியில் ஆங்கிலப் படைகள்  ஏதோ ஒரு தகவலுக்காக காத்திருக்கின்றன. பரபரப்பும் ஆர்வமும் படையின் முன்னிலிருந்த வீரன் முதல் இறுதியாஇ நின்ற வீரன் வரைக்கும் எல்லோர் முகங்களிலும்.

கோட்டையின் மேற்குப் பகுதியில் திப்புவின் படைகள்.  அங்கு வருகிறான் திப்புவின் நிதி அமைச்சர் மீர் சாதிக்.

“ எல்லோரும் அங்கு சென்று ஊதியம் பெற்று ஓய்வெடுங்கள்”

அவன் காட்டிய திசை நோக்கி தங்கள் வியர்வைக்கான கூலியைப் பெறும் மகிழ்ச்சியில் வீரர்கள் நகர்கிறார்கள்.

இந்தத் தகவலை காத்திருந்த ஆங்கிலப் படைகளுக்கு அனுப்புகிறான்.

மதிய உணவை எடுத்திக் கொண்டிருந்த திப்புவின் கவனத்திற்கு செய்தி வருகிறது.

பாதியில் கை கழுவி விட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கிழம்புகிறான்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிந்து விடுகிறது.

குவிந்து கிடக்கும் வீரர்களின் பிணங்களை புரட்டி பார்க்கிறார்கள்.

கோட்டையின் வடக்கு மதில் சுவரில் வீரர்களோடு வீரனாய், பிணமாய் திப்பு.

திப்புவின் உடலருகே நின்று வெல்லெஸ்லி கொக்கரித்தான்,

“ மைசூரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சி, இந்தியா இறந்து பிணமாக என் காலடியில் கிடக்கிறது”

எனது இன்றைய சுதந்திர சுயேட்சையான வாழ்விற்கான உன் பங்களிப்பு  மிகவும் உசத்தியானது திப்பு.

சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்.
46 comments:

 1. சில சொட்டு கண்ணீரும், நன்றியும், வீர வணக்கமும்..

  ReplyDelete
 2. மிக்க நன்றி சௌந்தர்

  ReplyDelete
 3. திப்புவின் கோட்டைக்குள் ரங்கநாத சாமி கோவில் இருக்கிறது. அவனை மத வெறியன் என்று இந்துத்துவா ஆட்கள் மட்டுமே சொல்வார்கள். நல்ல பதிவு சார்.

  ReplyDelete
 4. இந்துத்வா ஆட்கள் யாரும் சொல்லவில்லை... பிரிவினையை உண்டு பன்ன ஆங்கிலேயர் சொன்னதை தான் இவர்கள் பிரதிபலித்தார்கள் நா சாத்தப்பன்...!

  ReplyDelete
 5. வரலாறு யாரை பற்றியதாக வேணுமானாலும் இருக்கட்டும்அதில் உள்ள உண்மைகளை இம்மியளவும் பிசகாமல் எழுதுவதுதான் ஒரு எழுத்தாளனின் தார்மீக கடமை,அந்த வகையில் உங்களின் நடுநிலைமைக்கு இந்த ஒரு பதிவே உதாரணம்.
  நன்றி கலந்த வாழ்த்துக்கள்:)

  ReplyDelete
 6. நிதி அமைச்சர்களுக்குப் பாடம் நடத்தியவன் அவன் அதனால் தானோ அவனது திப்புவின் நிதி அமைச்சர் மீர் சாதிக்அவனுக்கு இறுதி யதீரைக்கு ஆனுபீனரோ ? நண்பரீடும் இருந்து கற்கும் பாடங்கள் மரகபெரல்லாம் அஹீனும் எதீரீடம் ஐருந்து கற்கும் படேங்கள்ளே ஈருதீ வரை இருக்கும்

  ReplyDelete
 7. \\\ நா சாத்தப்பன் said...
  திப்புவின் கோட்டைக்குள் ரங்கநாத சாமி கோவில் இருக்கிறது. அவனை மத வெறியன் என்று இந்துத்துவா ஆட்கள் மட்டுமே சொல்வார்கள். நல்ல பதிவு சார்.///

  ஆமாம் தோழர்.

  மிக அற்புதமான மன்னன். திருமணத்திற்கு வருமானத்தில் இருந்து எத்தனை சதவிகிதம் செலவு செய்யலாம் என்று சிந்தித்து சொன்னவன்.

  ReplyDelete
 8. \\\ Kaarti Keyan R said...
  இந்துத்வா ஆட்கள் யாரும் சொல்லவில்லை... பிரிவினையை உண்டு பன்ன ஆங்கிலேயர் சொன்னதை தான் இவர்கள் பிரதிபலித்தார்கள் நா சாத்தப்பன்...!///

  அவர்கள் தொடங்கியதை இவர்கள் தொடர்கிறார்கள் கார்த்தி. இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள்

  ReplyDelete
 9. மிக்க நன்றி பக்கிர் தோழர்.

  ReplyDelete
 10. மிக்க நன்றி தயா

  ReplyDelete
 11. /இந்தத் தகவலை காத்திருந்த ஆங்கிலப் படைகளுக்கு அனுப்புகிறான்./ யார்.? என் கலாச்சாரக் காரணங்கள் எனும் பதிவை படிக்க வேண்டுகிறேன்.பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது கவனத்தில் கொள்ளவும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. மிக்க நன்றிங்க அய்யா

  ReplyDelete
 13. எத்தனை உண்மைகள் மறைக்கப்பட்டள்ளது. அருமையான ஆக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 14. மிக்க நன்றி சுவனப் பிரியன்

  ReplyDelete
 15. G.M Balasubramaniam Sir, Please Give the Link of என் கலாச்சாரக் காரணங்கள் Post.

  ReplyDelete
 16. கார்த்தி கேட்பதை நான் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 17. A good post.. Thanks for sharing...

  ReplyDelete
 18. மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 19. திப்புவைப் பற்றிய அருமையான வரலாற்றுப் பதிவு!பாராட்டுகளும் நன்றியும்!

  ReplyDelete
 20. மிக்க நன்றி ஜேசுராஜ் தோழர்

  ReplyDelete
 21. திரு.கார்த்திகேயன், திரு.எட்வின் விருப்பப்படி என் பதிவு கலாச்சாரக் காறணங்கள் லிங்க் தருகிறேன்.
  gmbat1649.blogspot.in/2011/07/blog-post_18.html
  வேறு பாடுகள் நிறைந்த நம் சமூக சிந்தனைகளை மனதில் வைத்து “சிந்தனைப் பரிணாமங்கள் “என்னும் பதிவும் படிக்க வேண்டுகிறேன்.நன்றி

  ReplyDelete
 22. மிக்க நன்றிங்க அய்யா

  ReplyDelete
 23. அருமையான பதிவு.
  திப்பு சுல்தான் பற்றி புத்தகங்கள் எடுத்து படிக்கிறேன்.
  இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 24. மிக்க நன்றிங்க அய்யா

  ReplyDelete
 25. இந்திரன்May 4, 2012 at 9:25 PM

  மிக அருமையான பதிவு.நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. @இந்திரன் said...

  மிக்க நன்றி தோழர் இந்திரன்

  ReplyDelete
 27. வணக்கம்! அரிய கருத்துகள். வரலாற்றின் மறுபக்கம். ஆவலைத் தூண்டும் நடை. எண்ணத்தைத் தொட்டுச் செல்லும் மாவீரனின் வரலாற்றில் ஒரு துளி.

  நன்றி.

  ReplyDelete
 28. @முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

  மிக்க நன்றி தோழர்.

  நேரம் வாய்க்கும் போது வலைக்கு வாருங்கள்

  ReplyDelete
 29. குற்றம் புரியும்விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவை மூன்று அடி வளரும்வரை அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்ற அவனது தண்டனை முறை அபூர்வமானது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமானதும்கூட./////

  இன்றைய ஆட்சியாளர்கள் இது போன்ற தகவல்களை படித்து எப்படி மக்களுக்கு உதவ வேண்டும் ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளட்டும்

  ReplyDelete
 30. மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 31. You have brought many things to public. Nice :)

  Regarding believing on josiyam, I never heard that Tipu has that belief, Check on this again.

  ReplyDelete
 32. உண்மைதான் தோழர் ஜமால்

  ReplyDelete
 33. வேலூர் கோட்டையில் திப்புவின் சாமாதி இருப்பதாக படித்துள்ளேன். ஆனால் சிரங்கப்பட்டினத்தில் அவன் மாண்டதாக பதிந்து உள்ளீர்கள். மேலும், திப்பு தான் இன்றைய ஏவுகணையின் தந்தை. அப்போதே ஏவுகணை குறித்த தொழில் நுட்பம் அவனிடம் இருந்தது. அதையும் சேர்த்திருந்தால் இன்னும் மெருகு.

  ReplyDelete
 34. @ இளையான்குடி said...

  மிக்க நன்றி தோழர்

  அது வேலூரா என்பதை சரி பார்த்து சரி எனில் சரி செய்து விடுகிரேன்

  ReplyDelete
 35. வராலாற்றின் நிழல் ரகசியமானது. எப்போதுமே வலியவர்களால் வரலாறு புனைந்தே எழுதப்படுகிறது!

  நல்ல பதிவு!

  ReplyDelete
 36. @SHAN Shylesh said...

  மிக்க நன்றி தோழர்.

  ReplyDelete
 37. \\\இளையான்குடி said...
  வேலூர் கோட்டையில் திப்புவின் சாமாதி இருப்பதாக படித்துள்ளேன். ஆனால் சிரங்கப்பட்டினத்தில் அவன் மாண்டதாக பதிந்து உள்ளீர்கள். மேலும், திப்பு தான் இன்றைய ஏவுகணையின் தந்தை. அப்போதே ஏவுகணை குறித்த தொழில் நுட்பம் அவனிடம் இருந்தது. அதையும் சேர்த்திருந்தால் இன்னும் மெருகு.////

  வணக்கம் தோழர்.
  சரி பார்த்துவிட்டேன். திப்பு மரணித்த இடமும் அவனது கல்லறை உள்ள இடமும் சீரங்கப் பட்டிணம்தான்.

  அவனது ஏவுகனைத் தொழில் நுட்பம் குறித்து எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 38. அருமையான பதிவு. பல விஷயங்களை புதிதாக அறிந்துகொண்டேன்...

  ReplyDelete
 39. \\\\\ Thinakaran Rajamani said...
  அருமையான பதிவு. பல விஷயங்களை புதிதாக அறிந்துகொண்டேன்... //////

  மிக்க நன்றி தோழர். வலைக்கு தொடர்ந்து வாருங்கள்

  ReplyDelete
 40. வீர வணக்கம் ....

  ReplyDelete
 41. \\\ Siva's said...
  வீர வணக்கம் .. ///

  மிக்க நன்றி தோழர் சிவா

  ReplyDelete
 42. ஒரு நேர்த்தியான, மிகவும் கவர்ச்சிகரமான பதிவு, சொல்லவந்த விடயங்களைச் சரியாய்ச் சொல்வதால், கட்டுரை சிறப்புப்பெறுகிறது. உசார்துணை நூல்களும் இணைத்திருந்தால், மேலும் சிறப்புப்பெறும். சமுதாய சிந்தனைகளையும், அதன் சிக்கல்களையும் எடுத்துக்காட்டுகிறது. மிக அருமையான பதிவு.
  --Roger Sinna .

  ReplyDelete
 43. \\\\ Anonymous said...
  ஒரு நேர்த்தியான, மிகவும் கவர்ச்சிகரமான பதிவு, சொல்லவந்த விடயங்களைச் சரியாய்ச் சொல்வதால், கட்டுரை சிறப்புப்பெறுகிறது. உசார்துணை நூல்களும் இணைத்திருந்தால், மேலும் சிறப்புப்பெறும். சமுதாய சிந்தனைகளையும், அதன் சிக்கல்களையும் எடுத்துக்காட்டுகிறது. மிக அருமையான பதிவு.
  --Roger Sinna .////

  மிக்க நன்றி தோழர்.
  இது ஒரு சின்ன கட்டுரை. எனவேதான் நூற்பட்டியலை இணைக்கவில்லை. இனி செய்து விடுகிறேன்.

  ReplyDelete
 44. திப்புவைப் பற்றிய நல்ல பதிவு... நன்றி ஐயா பகிர்ந்தமைக்கு.

  ReplyDelete
 45. மிக்க நன்றி தோழர் வெங்கடேசன்

  ReplyDelete
 46. //சீரங்கப் பட்டிணம், குருவாயூர் மற்றும் சிருங்கேரி மடங்களுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்த திப்புவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே உண்மை பேசுபவனால்கூட மதவெறியன் என்று கூற முடியாது//

  வீர வணக்கம் திப்பு...

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels