பத்து தேய்த்து
பாத்திரங்கள் கழுவி
முகத்தைக் கழுவி
முந்தியால் ஒற்ற
கண்ணில் பட்டது
பழக் கூடை
நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்
இன்றைக்குமில்லை
மகனுக்கு
மாம்பழம்
பாத்திரங்கள் கழுவி
முகத்தைக் கழுவி
முந்தியால் ஒற்ற
கண்ணில் பட்டது
பழக் கூடை
நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்
இன்றைக்குமில்லை
மகனுக்கு
மாம்பழம்
எளிமையான வரிகளின் வலி..
ReplyDelete/// மயிலன் said...
ReplyDeleteஎளிமையான வரிகளின் வலி..///
மிக்க நன்றி தோழர்
அருமையாக இருக்கிறது.
ReplyDeleteநாம் என்ன பாடு பட்டாலும் பிள்ளைகளுக்கு கவனித்து விடுகிறோம் அல்லவா?
நன்றி ஐயா.
சில வரிகளுக்குள்
ReplyDeleteபல வலிகள் ...
அருமை தோழர்
மிகவும் அருமை மாம்பழம்! ஏக்கத்துடன் தாய்... அருமை. பாராட்டுவதற்கான கவிதை இல்லை., கோவப்பட வேண்டிய ஒன்று
ReplyDeleteபத்து தேய்த்து
ReplyDeleteபாத்திரங்கள் கழுவி
முகத்தைக் கழுவி
முந்தியால் ஒற்ற
கண்ணில் பட்டது
பழக் கூடை
நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்
இன்றைக்குமில்லை
மகனுக்கு
மாம்பழம்
Posted by இரா.எட்வின்
மாம்பழங்கள் கொஞ்சம் அழுகி இருந்தால்
வேலைக்காரியான அம்மாவுக்கு
கிடைத்து இருக்கும்
அவள் மகன் சாப்பிட வழி
பிறந்து இருக்கும்
///நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்///
பழத்தின் சிறப்பை சொல்லவில்லை
பழம்
தானாமாய் கொடுக்க வேண்டிய
தன்மைக்கு வரவில்லை அதுவும்
இந்த வீட்டிலும் கூட (பலவீடுகளில்
வேலை பார்க்கும் தாய் )என்ற செய்தியும்
தொக்கி நிற்கிறது
கவிதை
செய்திகளை
எளிமையின் ஏக்கத்தை
நிதரிசனம் கண்டு தீர்வு
எடுக்கும் வேகத்தை
வலிமையாய்
எளிய சொற்களில்
சொல்லுகிறது
எனக்கு வருத்தம் எல்லாம்
கவிஞர்கள்
நேர்மறை சிந்தனைகளை
செய்திகளையேன்
கருப்பொருளாக கொள்ள மாட்டேன்
என்கிறார்கள் என்பதுதான்
எனக்கு என் பாட்டி சொன்ன பழுத்த வெற்றிலைக் கதைதான் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஇனிப்பைக் காட்டி கசக்கும் வலிகள். பழுக்காத மனங்கள் இருக்கும் இடத்தில்கூட பழுத்துவிடும் பழங்கள். நுனிகூட அழுகாமல் இருப்பது விதியின் வலிதான்.
ReplyDeleteஎண்ணத்தில் ஏக்கம் பழுக்கிறது. நிச்சயம் அது ஏற்றத்தில் கனிந்து உதிரும்.
பழுத்த வலி.
கல் வைத்து பழுத்த பழமாய் கூட இருக்கலாம். சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லலாம், சொல்லித்தான் ஆகவேண்டும்.
ReplyDelete///Rathnavel Natarajan said...
ReplyDeleteஅருமையாக இருக்கிறது.
நாம் என்ன பாடு பட்டாலும் பிள்ளைகளுக்கு கவனித்து விடுகிறோம் அல்லவா?
நன்றி ஐயா. ///
மிக்க நன்றிங்க அய்யா
/// sk said...
ReplyDeleteசில வரிகளுக்குள்
பல வலிகள் ...
அருமை தோழர் ///
மிக்க நன்றி தோழர்
//// Christopher said...
ReplyDeleteமிகவும் அருமை மாம்பழம்! ஏக்கத்துடன் தாய்... அருமை. பாராட்டுவதற்கான கவிதை இல்லை., கோவப்பட வேண்டிய ஒன்று ///
மிக்க நன்றி தோழர்
/// மீனாட்சி சுந்தரம் சோமையா said...
ReplyDeleteபத்து தேய்த்து
பாத்திரங்கள் கழுவி
முகத்தைக் கழுவி
முந்தியால் ஒற்ற
கண்ணில் பட்டது
பழக் கூடை
நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்
இன்றைக்குமில்லை
மகனுக்கு
மாம்பழம்
Posted by இரா.எட்வின்
மாம்பழங்கள் கொஞ்சம் அழுகி இருந்தால்
வேலைக்காரியான அம்மாவுக்கு
கிடைத்து இருக்கும்
அவள் மகன் சாப்பிட வழி
பிறந்து இருக்கும்
///நுனி கூட அழுகாத
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும்///
பழத்தின் சிறப்பை சொல்லவில்லை
பழம்
தானாமாய் கொடுக்க வேண்டிய
தன்மைக்கு வரவில்லை அதுவும்
இந்த வீட்டிலும் கூட (பலவீடுகளில்
வேலை பார்க்கும் தாய் )என்ற செய்தியும்
தொக்கி நிற்கிறது
கவிதை
செய்திகளை
எளிமையின் ஏக்கத்தை
நிதரிசனம் கண்டு தீர்வு
எடுக்கும் வேகத்தை
வலிமையாய்
எளிய சொற்களில்
சொல்லுகிறது
எனக்கு வருத்தம் எல்லாம்
கவிஞர்கள்
நேர்மறை சிந்தனைகளை
செய்திகளையேன்
கருப்பொருளாக கொள்ள மாட்டேன்
என்கிறார்கள் என்பதுதான் ///
எதிர் மறையில் சொல்லும் போதுதான் நேர் மறைக்கான விதை விதைக்கப் படுகிறது. மிக்க நன்றி தோழர்
///G.M Balasubramaniam said...
ReplyDeleteஎனக்கு என் பாட்டி சொன்ன பழுத்த வெற்றிலைக் கதைதான் நினைவுக்கு வந்தது. //
மிக்க நன்றிங்க அய்யா.
ஆமாம்,
அந்த வெற்றிலைக் கதையை எப்போது சொல்வீர்கள்?
/// ஹ ர ணி said...
ReplyDeleteஇனிப்பைக் காட்டி கசக்கும் வலிகள். பழுக்காத மனங்கள் இருக்கும் இடத்தில்கூட பழுத்துவிடும் பழங்கள். நுனிகூட அழுகாமல் இருப்பது விதியின் வலிதான்.
எண்ணத்தில் ஏக்கம் பழுக்கிறது. நிச்சயம் அது ஏற்றத்தில் கனிந்து உதிரும்.
பழுத்த வலி. ///
மிக்க நன்றி ஹரணி
/// Jayajothy Jayajothy said...
ReplyDeleteகல் வைத்து பழுத்த பழமாய் கூட இருக்கலாம். சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லலாம், சொல்லித்தான் ஆகவேண்டும். ///
ஆஹா இது கூட நல்லா இருக்கே.
மிக்க நன்றி தோழர்
வேலைக்காரிதானே என்று எண்ணாமல் அவளையும் ஒரு மனுஷியாய் மதிக்கும் நிலை இன்னும் நம்மிடையே வரவில்லை. அவளுடைய அன்றாட ஏக்கத்தை மனதில் சுருக்கென்று ஏற்றிய வலி மிக்க வரிகள்.
ReplyDelete/// கீதமஞ்சரி said...
ReplyDeleteவேலைக்காரிதானே என்று எண்ணாமல் அவளையும் ஒரு மனுஷியாய் மதிக்கும் நிலை இன்னும் நம்மிடையே வரவில்லை. அவளுடைய அன்றாட ஏக்கத்தை மனதில் சுருக்கென்று ஏற்றிய வலி மிக்க வரிகள். ///
மிக்க நன்றி தோழர்
கிழிந்த பனியனைப் போலத் தான்
ReplyDeleteஇந்தக் கவிதையும்.
வலித்தது.
எனக்கு கவிதையின் பொருளில் கொஞசம் உடன்பாடு இல்லைதான்.குழந்தைக்கு மாம்பழம் வாங்கித்தரமுடியாத வீட்டுவேலை செய்யும் அம்மாக்கள் இப்போதெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? சொல்லப்போனால் வீட்டு வேலைக்கு பெண்கள் கிடைப்பதே மிக அரிது. பாத்திரம் துலக்கி வீடு துடைக்க (அரைமணி நேர வேலைதான், 3பேர் உள்ள குடும்பம்) தூத்துக்குடியில் மாதம் 1000 ரூபாய் வீதம் 5 வீடுகளில் 5000 சம்பாதிக்கிறார் என் பக்கத்து வீட்டுக்கு வேலை செய்யவரும் பெண்மணி.என் நாத்தனார் பாத்திரம் துலக்க மட்டும் ரூ600 தருகிறேன் என்று வேலைக்கு ஆள் தேடுகிறார் 2 மாதங்களாக... கிடைக்கவில்லை.. வீட்டு வேலை செய்பவர்களை விட மிக பாவப்பட்டவர்கள் மாத சம்பளம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர்.
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்களின் தளத்திற்கு வருகிறேன் !
ReplyDeleteஅழகான வரிகள் !
இனி தொடர்ந்து வருவேன் ! நன்றி சார் !
/// சிவகுமாரன் said...
ReplyDeleteகிழிந்த பனியனைப் போலத் தான்
இந்தக் கவிதையும்.
வலித்தது.///
மிக்க நன்றி தோழர்.
அய்யோ அது கார்த்திக் பாலாஜியின் மனித நேயம் தோழர்.
மிக்க நன்றி தோழர்
//// Uma said...
ReplyDeleteஎனக்கு கவிதையின் பொருளில் கொஞசம் உடன்பாடு இல்லைதான்.குழந்தைக்கு மாம்பழம் வாங்கித்தரமுடியாத வீட்டுவேலை செய்யும் அம்மாக்கள் இப்போதெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? சொல்லப்போனால் வீட்டு வேலைக்கு பெண்கள் கிடைப்பதே மிக அரிது. பாத்திரம் துலக்கி வீடு துடைக்க (அரைமணி நேர வேலைதான், 3பேர் உள்ள குடும்பம்) தூத்துக்குடியில் மாதம் 1000 ரூபாய் வீதம் 5 வீடுகளில் 5000 சம்பாதிக்கிறார் என் பக்கத்து வீட்டுக்கு வேலை செய்யவரும் பெண்மணி.என் நாத்தனார் பாத்திரம் துலக்க மட்டும் ரூ600 தருகிறேன் என்று வேலைக்கு ஆள் தேடுகிறார் 2 மாதங்களாக... கிடைக்கவில்லை.. வீட்டு வேலை செய்பவர்களை விட மிக பாவப்பட்டவர்கள் மாத சம்பளம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர். ///
ரொம்ப நாளைக்குப் பிறகு உமா.
மிக்க நன்றி உமா.
இல்லை உமா அவர்களது எதுவும் நிரந்திரமில்லாதது.
///திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்களின் தளத்திற்கு வருகிறேன் !
அழகான வரிகள் !
இனி தொடர்ந்து வருவேன் ! நன்றி சார் ! ///
மிக்க நன்றி தோழர்.
தங்களது தொடர்ந்த வருகை என்னை செழுமை படுத்தும்
subtle
ReplyDelete//// அப்பாதுரை said...
ReplyDeletesubtle ////
மிக்க நன்றி தோழர்