Sunday, April 3, 2011

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?


என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு  தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார். 

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார். 

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன். 

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "  


4 comments:

  1. உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார். //


    ஆஹா.. ஆஹா.., இதனைத் தான் சொல்லுவதோ சமயோசிதமான நையாண்டிப் பதில் என்று.

    எங்கள் வாழ்வின் அன்றாட விடயங்களினூடாக இடம் பெறும் நகைச்சுவையினை முன்னிறுத்தி, நாட்டின் நாற்காலியினை வைத்தும் ஒரு நகைச்சுவைப் பதிவு.. ரசித்தேன்.

    ReplyDelete
  2. அன்பின் நிரூபன்,
    வணக்கம். பார்வை இட்டமைக்கும், கருத்தினைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றி..
    ஆமாம் தோழர்,இப்போதைக்கு கொஞ்சம் சிரித்தாவது வைப்போம்.

    ReplyDelete
  3. எரிக்காம‌ல் விட்டால் எல்லார்க்கும்
    இறுதியில் உறுத்தான‌து ஆற‌டிதானே!
    அதுவும் ஊர் பொதுவிட‌த்தில்.

    'மண்ணின் மீது ம‌னித‌னுக்காசை,
    ம‌னித‌ன் மீது ம‌ண்ணுக்காசை...
    ம‌ண் தான்...' வைர‌முத்துவில் ஒரு நல்முத்து

    ReplyDelete
  4. இதுக்கு பேர் ஆசை அல்ல வாசன் சார். பல நகரங்களில் இடங்களைப் பதிவு செய்ய சில பெரிய மனிதர்களின் அனுமதித் தேவைப் படுகிறது. தங்கள் அன்புக்கு நன்றி சார்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...