Tuesday, April 19, 2011

இத்தோடு சேர்க்க

இயற்பியல்
வேதியியல்
உயிரியல், கணிதம்
முதல் பிரிவில்

இயற்பியல்
வேதியியல்
கணிதம், கணினி
இரண்டாம் பிரிவில்

வரலாறு
பொருளியல்
வணிகவியல், கணிதவியல்
மூன்றாம் பிரிவில்

கணினி
தட்டச்சு
தையல் என நீளும்
தொழிற் பிரிவுகள்

இவற்றோடு
எல்லாப் பிரிவிற்கும்
சேர்க்க

தமிழ் அல்லது விருப்ப மொழி
ஆங்கிலம்
மற்றும்
நன்கொடை

38 comments:

 1. மொழியின் கட்டாய தேவையினையும், மொழியின் முக்கியத்துவத்தினையும் கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. @நிரூபன்
  அன்பின் நிரூபன்,
  வணக்கம். மிக்க நன்றி. நீங்கள் வைத்துக் கொடுத்த இன்னொரு திரட்டி காணாமல் போய்விட்டதே. எப்படி மீட்பது?

  ReplyDelete
 3. தமிழ்10 இப்போது தங்கள் திரையில் தெரிகிறதே...

  ReplyDelete
 4. தமிழையும் முக்கிய பாடங்களில் சேர்த்து தமிழின் மதிப்பெண்ணையும் cut off மதிப்பெண்ணில் சேர்க்கட்டும். தமிழ் படிக்கிறார்களா இல்லையா என்று பார்க்கலாம். நாம் தமிழுக்காக முழு முயற்சி செய்வதில்லை. தமிழ் தமிழ் என மேடையில் பேசி பேசி பிழைப்பை நடத்துகிறோம்.
  நன்றி.

  ReplyDelete
 5. @Rathnavel
  ஆமாம் சரியான முயற்சி இல்லை. பேச்சு வேறு வாழ்க்கை வேறாக உள்ளது அய்யா,
  நான் ஆம்க்கில ஆசிரியன். எனது பிள்ளைகளை தமிழ் வழியில்தான் படிக்க வைக்கிறேன்

  ReplyDelete
 6. The Last but the MUST and never be the least.

  ReplyDelete
 7. @vasan
  மிக்க நன்றி அய்யா

  ReplyDelete
 8. உதவி தலைமை ஆசிரியர்னு நிரூபிக்கிறீங்களே.!!!

  ReplyDelete
 9. என்ன செய்ய என்ன பண்ண புரியலையே.!!இது நிரூபன் சொல்ற மாதிரி மொழியின் மகத்துவத்தை சொல்கிறதா.. இல்லை கடைசியில் கொஞ்சம் நன்கொடைன்னு சொல்லியிருப்பதன் காரணம் என்ன.? நிரூபா குழப்பிட்டயா.!!

  ReplyDelete
 10. ஏற்கனவே ஒரு முறை இங்கே வந்திருக்கிறேன்..

  ஆனா அதுக்கு பிறகு வந்ததே இல்ல.. திரும்ப நிரூபன் அழைத்தார்.. வந்தேன்.. இனிமே தொடர்ந்து வர்றேன்..

  ReplyDelete
 11. @தம்பி கூர்மதியன்
  முதலில் வருகைகும் பகிர்வுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் சொல்கிறேன். உதவித் தலைமை ஆசிரியர் ஆவதற்கு என்று எந்தத் தனித் தகுதியும் இல்லை. பணி மூப்பு ஒன்றே தகுதி.
  மொழியும், நன்கொடையும் சேர்த்துதான் தோழர்.

  ReplyDelete
 12. // உதவித் தலைமை ஆசிரியர் ஆவதற்கு என்று எந்தத் தனித் தகுதியும் இல்லை.//

  இங்கே நான் தனித்தகுதி பற்றி பேசவே இல்லையே.!! ஜஸ்ட் ஜாலியா பாருங்க பாஸ்.. உதவி ஆசிரியர் என்பதால் கல்வியை பற்றி எழுதுனீங்களானு அப்படியே ஜாலியா கேட்டது தான் அது..

  ReplyDelete
 13. @தம்பி கூர்மதியன்
  அய்யோ கூர்மதியான் நானும் மிகுந்த நக்கலோடுதான் இதைப் பதிந்தேன்.பொதுவாகவே இது பகடிக்கு உரிய விஷயம்தான்.

  ReplyDelete
 14. //அய்யோ கூர்மதியான் நானும் மிகுந்த நக்கலோடுதான் இதைப் பதிந்தேன்.பொதுவாகவே இது பகடிக்கு உரிய விஷயம்தான். //

  ஹா ஹா.. ஆசிரியர் என்றதும் ஒரு கெடு கெடு நடு நடுக்கம் வந்திடுச்சு போல.. உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.. தொடர்ந்து வருகிறேன்.. நம் நட்பு தொடரட்டும் நன்றிகள்..

  இரா.எட்வின்-சொல்லும்போதே ஒரு புரட்சியாளன் பெயர் போல இருக்கு.. சூப்பருங்க..

  ReplyDelete
 15. @தம்பி கூர்மதியன்
  உங்கள் வலையைப் பார்த்து அப்படியே ’‘பாலோ’’ போட்டுவிட்டு அவசரமாக ஓடி வந்துவிட்டேன்.ஒரு கட்டுரை முடிக்க வேண்டும். முடித்ததும் முதலில் உங்கள் வலைதான். நட்பு கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. //ஒரு கட்டுரை முடிக்க வேண்டும். //

  அதிகமாக இடையூறு செய்திருக்கமாட்டேன் என்னும் நம்பிக்கையில் ஒரு ஸ்மைலி போட்டுகிட்டு கிளம்புறேன். :))))))))

  நன்றி வணக்கம்.. இதுக்கு ரிப்ளை பண்ண வேண்டாம்.. கட்டுரை கன்டினியு பண்ணுங்க..

  ReplyDelete
 17. தமிழின் தேவை குறித்தும் தமிழின் தேய்வு குறித்தும் ஆதங்கமான வரிகள் !

  ReplyDelete
 18. @தம்பி கூர்மதியன்
  இடையூரா?
  எவ்வளவு அழகான வலை. எனக்கு யாராச்சும் அப்படி செய்து தர மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் அழகு

  ReplyDelete
 19. @ஹேமா
  அன்பின் ஹேமா,
  வணக்கமும் நன்றியும்

  ReplyDelete
 20. கடந்த இருபது ஆண்டுகளாகவே நாம் நீர்நிலைகளை ,ஆதாரங்களை மாசுபடுத்தி வருகிறோம்,இன்று நம் கண் முன்னே, வைகை ஆறு, சிறு சாக்கடையாய் முடங்கி முடை நாற்றம் எடுப்பது அளப்பரிய வேதனை.

  ReplyDelete
 21. உப்பு காரம் பாக்க சொன்னீங்க, நம்ம கிட்ட உப்பு கம்மியாஇருக்கிறதால உங்க பதிவுல காரம் நெறைய இருக்கு.. எதாவது செய்யணும் சார்!!

  Lavi

  ReplyDelete
 22. எந்த பிரிவாக இருந்தால் என்ன பணம் தான் முக்கியம். தாய் மொழி பற்றி யாருக்கு அக்கறை! உப்பு காரம் அளவாகவே உள்ளது

  ReplyDelete
 23. /// Lavi said...
  உப்பு காரம் பாக்க சொன்னீங்க, நம்ம கிட்ட உப்பு கம்மியாஇருக்கிறதால உங்க பதிவுல காரம் நெறைய இருக்கு.. எதாவது செய்யணும் சார்!!
  ///

  நிச்சயமா தோழர்.
  முயற்சிப்போம்.

  ReplyDelete
 24. ///Christopher said...
  எந்த பிரிவாக இருந்தால் என்ன பணம் தான் முக்கியம். தாய் மொழி பற்றி யாருக்கு அக்கறை! உப்பு காரம் அளவாகவே உள்ளது ///

  நமக்கேனும் வந்துவிட்டால் போதும் தோழர்

  ReplyDelete
 25. எனக்கென்னவோ அது சரிதான் எனத் தோன்றுகின்றது...! தாய் மொழி என்பதை பள்ளிக்கூடத்தில் கற்றல் என்பது முக்கியம் இல்லை... வீட்டில் தெருவில் நாட்டில் தாய் தந்தையிடத்தில் சகோதர சகோதரிகளிடத்தில், பாட்டி தாத்தாக்களிடம் கற்க்க வேண்டிய ஒன்று! தாய் மொழி என்பது வேகவைத்த சோற்றைப் போன்றது... சாப்பிட(வாழ்க்கை நடத்த) குழம்பு, பொரியல், துவையல் எல்லாம் வேண்டாமா? குறைந்த பட்சம் தண்ணி(ஆர்ட்ஸ் குரூப்)யாவது வேண்டுமே கஞ்சி குடிக்க.

  ஆனால் சோறு இல்லாமல் ஏனையவை இருந்து என்ன பயன்? தாய் மொழி என்பது பள்ளிக்கூடத்தில் கற்றால் அது வெறும் பாடமாகத்தான் இருக்குமே தவிற உணர்வாய் இருக்காது.

  ReplyDelete
 26. நம் கடந்த காலத்தை கொஞ்சம் அசைபோட்டால் விளங்கும்... நாம் தமிழை பள்ளி பாடங்களில் கற்று இருக்க மாட்டோம்... தமிழ் உணர்வுள்ள ஒருவரிடம் கற்று இருப்போம்(அவர் தமிழ் வாத்தியாராக கூட இருந்திருப்பார்) அவர்களிடம் இருந்த தமிழ் பற்று தான் நம்மையும் தமிழின் மேல் பற்று கொள்ள வைத்து இருக்கும்...!

  ReplyDelete
 27. வாழ்க கல்வி வள்ளல்கள்(வணிகர்கள்)
  இவ்வாறு போர்டு அங்கே
  போட்டிருக்கிறார்களா என்று பார்க்கவும்

  "இங்கே இரண்டு ஆண்டுகள் மாணவர்
  இயல்பியல் ஒழித்து மதிபெண் வாங்கும்
  இயந்திரங்கள் ஆக்கி
  பல்கலைகழக தொழிற்சாலைக்கு தகுந்த
  FINISHED PRODUCTS ஆக மாற்றி தரப்படும்
  நன்கொடை மிகுந்தால் மாநில முதல்மாணவராகும்
  வண்ணம் கூடுதல் CHEMICAL கள் சேர்த்து
  ஆசிரியர் / நிர்வாக படையுடன்
  திறம்பட ஒத்துழைப்பு தரப்படும் ";;

  ReplyDelete
 28. தன் பண்பாட்டு அடையாளமான தாய்மொழியை புறக்கணிக்கும் கொடுமையையும் படிப்பதற்கே கையூட்டுக் கொடுக்கும் அவலத்தையும் குத்திக்காட்டும் எள்ளல்!

  ReplyDelete
 29. ///Kaarti Keyan R said...
  எனக்கென்னவோ அது சரிதான் எனத் தோன்றுகின்றது...! தாய் மொழி என்பதை பள்ளிக்கூடத்தில் கற்றல் என்பது முக்கியம் இல்லை... வீட்டில் தெருவில் நாட்டில் தாய் தந்தையிடத்தில் சகோதர சகோதரிகளிடத்தில், பாட்டி தாத்தாக்களிடம் கற்க்க வேண்டிய ஒன்று! தாய் மொழி என்பது வேகவைத்த சோற்றைப் போன்றது... சாப்பிட(வாழ்க்கை நடத்த) குழம்பு, பொரியல், துவையல் எல்லாம் வேண்டாமா? குறைந்த பட்சம் தண்ணி(ஆர்ட்ஸ் குரூப்)யாவது வேண்டுமே கஞ்சி குடிக்க.

  ஆனால் சோறு இல்லாமல் ஏனையவை இருந்து என்ன பயன்? தாய் மொழி என்பது பள்ளிக்கூடத்தில் கற்றால் அது வெறும் பாடமாகத்தான் இருக்குமே தவிற உணர்வாய் இருக்காது. ///

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 30. ////மீனாட்சிசுந்தரம் சோமையா said...
  வாழ்க கல்வி வள்ளல்கள்(வணிகர்கள்)
  இவ்வாறு போர்டு அங்கே
  போட்டிருக்கிறார்களா என்று பார்க்கவும்

  "இங்கே இரண்டு ஆண்டுகள் மாணவர்
  இயல்பியல் ஒழித்து மதிபெண் வாங்கும்
  இயந்திரங்கள் ஆக்கி
  பல்கலைகழக தொழிற்சாலைக்கு தகுந்த
  FINISHED PRODUCTS ஆக மாற்றி தரப்படும்
  நன்கொடை மிகுந்தால் மாநில முதல்மாணவராகும்
  வண்ணம் கூடுதல் CHEMICAL கள் சேர்த்து
  ஆசிரியர் / நிர்வாக படையுடன்
  திறம்பட ஒத்துழைப்பு தரப்படும் ";; ///

  அருமை தோழர்

  ReplyDelete
 31. /// balasankar said...
  உண்மை //./

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 32. ///யரலவழள said...
  தன் பண்பாட்டு அடையாளமான தாய்மொழியை புறக்கணிக்கும் கொடுமையையும் படிப்பதற்கே கையூட்டுக் கொடுக்கும் அவலத்தையும் குத்திக்காட்டும் எள்ளல்! ///

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 33. ///Rathnavel Natarajan said...
  அருமை.
  நன்றி. ///

  மிக்க நன்றிங்க அய்யா

  ReplyDelete
 34. தமிழ் இனி மெல்ல சாகும் என்பவன் மடமையைக் கொளுத்துவோம்..பாரதியார்

  ReplyDelete
 35. ///Radha Krishnan said...
  தமிழ் இனி மெல்ல சாகும் என்பவன் மடமையைக் கொளுத்துவோம்..பாரதியார்///

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...