சுவரோரமாய்
கிடந்தது
ஒரு கரு வண்டு
"எப்பப்பா போகும்
இது அவுங்க வீட்டுக்கு"
இப்படித்தான்
எதையாவது கேட்பாள்
எப்போதும்
"எழுந்ததும் போகும்"
இப்படித்தான்
சமாளிப்பேன் நானும்
விடவில்லை
"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா? "
"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன்
சும்மா "
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும்
போகலாம்
வீட்டுக்கு"
நுண்மையான நகைமுரண்.நல்ல கவிதை
ReplyDeleteமிக்க நன்றி மிருணா
ReplyDelete//எதையாவது கேட்பாள்
ReplyDeleteஎப்போதும்
சமாளிப்பேன் நானும்...
அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும்
போகலாம் வீட்டுக்கு//
குட்டிப் பெண்ணின் புரிதல் சமட்டியாய் இறங்குகிறது நம்முள்.
மிக்க நன்றி நிலா.
ReplyDeleteஅம்மாவைத் தேடிப் போகும் அப்பா வண்டைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteகவிதையின் உள்ளடக்கத்தை வர்ணிக்க நீங்கள் கையாண்ட வண்டின் குறீயீடு கவிதைக்குப் பக்க பலமாக இருக்கிறது.
வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து ஒரு குழந்தையின் புரிதல் எவ்வளவு.ம்...அப்பா வீட்டுக்கு எப்பவும் போகலாம்.பரவாயில்லை !
ReplyDelete@நிரூபன்
ReplyDeleteமிக்க நன்றி நிரூபன்
@ஹேமா
ReplyDeleteமிக்க நன்றி ஹேமா. உங்கள் வலையை நான் பின் தொடர்கிறேன்.
அட்!!!
ReplyDelete@அன்புடன் அருணா
ReplyDeleteமிக்க நன்றி அருணா
ஆமாம் அட் னா என்ன?