ஐஸ்கிரீம் கேட்கும்
மகளிடம் சொல்லலாம்
" வேண்டாம் டான்சில் வரும்"
' பைவ் ஸ்டார் கேட்கும்
மகனிடம் சொல்லலாம்
"வேண்டாம்
பல்லில் சொத்தை விழும்"
இருவரும
கொஞ்சம் இறங்கி வந்து
வெங்காய பஜ்ஜியில் நின்றாலும்
சொல்லலாம்
" வேண்டாம்
கொலஸ்ட்ரால் வரும்"
இப்படி
எப்படியும் சொல்லலாம்
கையில்
காசில்லை என்பதை
எப்படியும் சொல்லலாம் என்பதனை ஒரு வித்தியாசமான சிந்தனையினூடாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்படி
ReplyDeleteஎப்படியும் சொல்லலாம்
கையில்
காசில்லை என்பதை//
முற்பாதி படித்து விட்டர் இறுதியில் பார்க்கையில் மனதைத் தொடக் கூடிய வகையில் ஒரு ஏழையின் உள்ளக் குமுறலை உணர்ச்சிகரமாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
எப்படியும் சொல்லலாம்//
ReplyDeleteகுழந்தைகளிடம் நேரடியாகவே பகிர்ந்து கொள்ள முடியாத பொருளாதாரச் சுமையை இலாவகமாக வெளிப்படுத்தி நிற்கும் ஒரு குடியானவனின் உணர்வலைகள்.
வணக்கமும் நன்றியும் நிரூபன். இது ஒரு சுய அனுபவம்தான்.
ReplyDeleteஹஹா ஹா அருமை!
ReplyDelete@அன்புடன் அருணா
ReplyDeleteநன்றி அருணா