Monday, April 11, 2011

ஏமாற்றம்

பத்து தேய்த்து 
பாத்திரங்கள் அடுக்கி 
முகத்தைக் கழுவி 
முந்தியால் ஒற்ற
கண்ணில் பட்டது பழக் கூடை 

நுனி கூட அழுகாத 
மாம்பழங்கள்
இந்த வீட்டிலும் 

இன்றைக்குமில்லை 
மகனுக்கு 
மாம்பழம்

7 comments:

  1. எப்போதும் ஏமாற்றங்களையும் இயலாமைகளையுமே பாடுகிறது உங்கள் பேனா எட்வின்.

    கவிதைக் கண்களுக்குக் காண்பதெல்லாம் அதுவாகத் தான் இருக்கிறதா?

    இதுவும் அதற்கொரு உரைக்கல்.அருமையாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  2. அன்புள்ள...

    கசிவான கவிதை. ஆனால் இன்றைக்கு நிறைய மாற்றங்கள். மாம்பழம் விற்பவரும் கீரை விற்பவரும் என சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கும் விதமும் அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் விதமும் நம்மால் நிச்சயம் முடியாது.அவர்கள்தான் வாழ்கிறார்கள் வாழ்வை.

    ReplyDelete
  3. அன்பின் ஹரணி.
    பையன் எப்படி இருக்கான்?
    இல்லை ஹரணி. பத்து பாத்திரம் தேய்த்துப் பிழைக்கும் ஜனத்திரளின் வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படித்தானே இருக்கு.

    ஹரணியின் பின்னூட்டம் என்னை கௌரவப் படுத்துது

    நன்றி ஹரணி

    ReplyDelete
  4. வணக்கம் தோழர்,
    அப்படியெல்லாம் இல்லை என்றும் உறுதியாய் சொல்லிவிட முடியாது தோழர்.
    அவர்களின் பிரதினிதியாகவே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

    மிக்க நன்றி. தேர்தல் பணி முடிந்ததும் பேசுகிறேன்

    ReplyDelete
  5. @மணிமேகலா
    வணக்கம் தோழர்,
    அப்படியெல்லாம் இல்லை என்றும் உறுதியாய் சொல்லிவிட முடியாது தோழர்.
    அவர்களின் பிரதினிதியாகவே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

    மிக்க நன்றி. தேர்தல் பணி முடிந்ததும் பேசுகிறேன்

    ReplyDelete
  6. வறுமை சொல்கிறது உணர்வுள்ள கவிதை !

    ReplyDelete
  7. @ஹேமா

    வணக்கம் ஹேமா. உங்களது வருகையும் கருத்தும் என்னை பெருமை கொள்ளச் செய்கின்றன. மிக்க நன்றி

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...