கணினி வாங்குவதற்கா அல்லது வேறு ஏதேனும் கடன் வாங்குவதற்கா என்று சரியாக ஞாபகமில்லை. நண்பர் சிவக்குமார் பத்து காசோலைகளையும் விக்டோரியாவின் புகைப் படத்தையும் எடுத்துக்கொண்டு சத்திரம் பேருந்து நிலையம் வரச் சொல்லியிருந்தார். சரியாக நான்கு மணிக்கெல்லாம் வருவதாக சொல்லியிருந்தவர் ஐந்தரை வரைக்கும் வரவே இல்லை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேர காத்திருப்பு தந்த அயர்வு என்னை ஒரு தேநீர்க் கடை நோக்கித் தள்ளியது. சூடான வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து தாளில் வைத்து நசுக்கி எண்ணெயயை எடுத்துக் கொண்டிருந்தபோது சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. தான் வேறொரு வேலையாக கரூர் சென்றுள்ளதாகவும் போன வேலை முடிய இரவு எட்டு மணிக்குமேல் ஆகிவிடுமென்பதால் அடுத்த நாள் சென்று மேலாளரைப் பார்க்கலாமென்றும், ஆகவே இன்று வீட்டிற்கு திரும்பி விடுமாறும் கேட்டுக் கொண்டார். வேறு வழி, பஜ்ஜிக்கும் தேநீருக்குமான காசைக் கொடுத்து விட்டு பேருந்தை நோக்கி நகர்ந்தேன்.
வரிசையில் முதலில் நின்ற பேருந்திலேயே உட்கார இடம் கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. முன்னேயும் இல்லாமல் பின்னேயும் இல்லாமல் நடுப் பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் இடம். அறச்செல்வனுடைய பாப்பாவிற்கு பள்ளியில் இடம் கிடைத்ததற்கு அவர் அடைந்த சந்தோசத்தை இந்த இருக்கை எனக்கு வழங்கியது. அப்பாடா என்று அமர்ந்தால் சுசிலா அம்மாவின் " நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா/ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா"/ பாடல், அப்படியே கரைந்து போய்க் கிடந்தேன். அதைத் தொடர்ந்து "நினைக்கத் தெரிந்த மனமே/ உனக்கு/ மறக்கத்
தெரியாதா?/ அடுத்ததாக "கண்கள் இரண்டும்/ என்று/உன்னைக் கண்டு பேசுமோ/ காலம் இனிமேல் / நம்மை ஒன்றைக் கொண்டு சேர்க்குமோ" என்று சுசிலா அம்மாவின் தேன் கலந்த அற்புதங்களாகத் தொடரவே வேறு எதிலும் மனது நகராமால் பரவசித்துக் கிடந்தது. அப்படியே கொஞ்சம் கண்களை மூடி லயித்துக் கிடந்த நமது மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போட்டார்கள் நான்கைந்து கல்லூரி மாணவர்கள்.
அவர்களது நச்சரிப்பு தாங்காத ஓட்டுனர் குத்துப் பாடல்களைப் போட்டார். சரி, இனி வேறு வழியில்லை . கொண்டு வந்திருக்கும் புத்தகத்தை வாசிக்கலாம் என்று புத்தகத்தைத் தேடியபோதுதான் அதை தேநீர்க் கடையிலேயே வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. தோழர்.மதிவண்ணனின் "உல் ஒதுக்கீடு சில பார்வைகள்" என்ற புத்தகம். கறுப்புப் பிரதிகள் வெளியீடு. அநேகமாக ஐம்பது ரூபாய் என்று நினைவு. ஒரு தொலை பேசினால் அனுப்பிவிடுவார்கள். அனால் அதற்குள் வைத்திருந்த வெற்றுக் காசோலை ரொம்பவும் பயப் படுத்தியது. எனவே அடுத்த இறக்கத்திலேயே இறங்கி சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போய் அடுத்தப் பேருந்தேறி சத்திரம் வந்து அரக்கப் பறக்க தநீர்க் கடைக்கு வந்தால் நல்ல வேளை புத்தகம் எடுத்து வைக்கப் பட்டிருந்தது.
ஆனால் அதை தர மறுத்தார் கடைக்காரர்.
"வெறும் புத்தகமா இருந்தா கொடுத்துடலாம் சார். காசோலை இருக்கு". (ஒரு ஆழமான புத்தகத்தை விட ஒரு வெற்றுக் காசோலைக்கு அவ்வளவு மரியாதை. அது சரி, வெறும் புத்தகமா இருந்திருந்தா நாம் மட்டும் இவ்வளவு வேர்க்க விறு விறுக்க வந்தா இருக்கப் போறோம். நேரே வீடு போய் கறுப்புப் பிரதிகளுக்கோ வைகறை அய்யாவுக்கோ தொலை பேசியிருந்தால் புத்தகம் வந்திருக்காதா? நம்மை இழுத்து வந்ததும் அந்த வெற்றுக் காசோலைதானே )
"சார். அது என்னுதுதான் சார். வேணா காசோலைலப் பாருங்க எட்வின்னு இருக்கும்"
"அதெல்லாம் சரிங்க சார். ஆனா நீங்கதான் எட்வின்னு எப்படி முடிவு பன்றது?" என்று சொல்லிக் கொண்டே வந்தவர் புத்தகத்திற்குள்ளிருந்த விக்டோரியாவின் புகைப் படத்தை எடுத்து "இது யாருங்க சார்?" என்றார்.
"அவங்க என் மனைவி"
"அப்ப சிரமத்தைப் பாக்காம அவங்களக் கொஞ்சம் வரச்சொல்லுங்க. கோவிச்சுக்காதீங்க இது காசோலை விஷயம். உரியவங்ககிட்ட சேக்கனுங்கிறதுக்காகத்தான் இவ்வளவும்"
அவரது அக்கறையும் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அக்கறையும் அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. சரி, இனி வேறு வழி இல்லை விக்டோரியாவை வரசக் சொல்லலாம் என்று அலை பேசியை எடுப்பதற்கும் சிவா அழைப்பதற்கும் சரியாக இருந்தது.
"சார், கோவிச்சுக்காதீங்க சார். இப்பத்தான் வேலை முடிஞ்சுது.இப்பப் புறப்பட்டாலும் அங்க வந்து சேர இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் அதுதான் நாளைக்குப் பாத்துக்கலாம்னு சொன்னேன். வீட்டுக்குப் போய்ட்டீங்களா சார்?"
நடந்தவைகளை அவரிடம் பொறுமையாக சொல்லி முடித்தேன்.
"எந்தக் கடை சார்?"
சொன்னேன்.
"செல்லக் கொஞ்சம் மொதலாளிக் கிட்டக் கொடுங்க சார்"
கொடுத்தேன்.பேசிவிட்டு அலைபேசியை என்னிடம் கொடுத்தவர்," சிவாவோட கூட்டாளியா சார். தப்பா நெனச்சுக்காதீங்க சார். உரியவங்க கிட்ட பொருள் போகணுங்கிற பயம்தான் சார்"
நன்றி சொல்லிப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
ஒரு வெற்றுக் காசோலை. தவறவிட்டு விட்டோம். அதைப் பெறுவதற்குள் நாம் இவ்வளவு சிரமப் பட வேண்டி உள்ளது. தவற விட்ட ஒரு வெற்றுக் காசோலையை என்ன சிரமப் பட்டேனும் திரும்பப் பெறவே விழைகிறோம். இதில் வயதில் மூத்த நாம் மட்டுமல்ல, சிறிய குழந்தைகளும் தவற விட்டத் தங்கள் பொருட்களை மீட்க எத்துணை சிரமத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வர். பல நேரங்களில் பள்ளிக் கூடத்தில் கூட்டு வழிபாட்டினை நடத்தித் தரவேண்டிய இடத்தில் இருப்பதனால் இதை நன்கு உணர முடிகிறது.
ஒவ்வொரு மாலையும் பள்ளியை மூடும் முன் குழந்தைகள் தவறி விட்டுச் செல்லும் பேனா, பென்சில், ஜாமென்டெரி பெட்டிகள் மற்றும் டிபன் பாக்ஸ் போன்றவை எடுத்துக் கொண்டு வந்து தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப் படும் . அடுத்த நாள் கூட்டு வழிபாட்டில் உள்ள பொருட்களின் பட்டியல் வாசிக்கப் பட்டு உரியவர்கள் தக்க அடையாளத்தை சொல்லி பெற்றுக் கொள்ளச் சொல்வோம். குழந்தைகளின் மனப் பக்குவத்தை நன்கு அறிந்தவரும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுபவருமான ஆசிரியர் சேவியர் அவர்கள் அந்தப் பணியினை சரியாக செய்து முடிப்பார்கள். பல நேரங்களில் ஒரே பொருளுக்கு இரண்டு மூன்று
பிள்ளைகள் உரிமை கொண்டாடுவார்கள். அதை மிகச் சாமர்த்தியமாய் சமாளித்து உரிய குழந்தையிடம் பொருளை அவர் சேர்த்துவிடுவார்.
அதை விடுங்கள் தெருவில் எதையேனும் கீழே இருந்து எடுத்து " இது யாருடையது?" என்று கேட்டுப் பாருங்களேன். நான்கைந்து பேராவது திரும்பிப் பார்த்து, உரிமை கோராது போயினும் அது தன்னுடையதாக இருக்குமோ என்றேனும் தடுமாறிப் போவர். இது இயல்பு.
அனால் இரண்டு நாட்களாக ஒரு பேருந்து ஓடாமல் அதன் உரிமையாளர் வீட்டில் நிற்கிறது. ஓட்டுனர் வரவில்லை என்று காரணம் சொல்லப் படுகிறது. அந்த ஜாமத்திற்கு கொஞ்சம் பிந்தி அந்தப் பேருந்து நிற்கும் இடம் குறித்த தகவலோடு அந்தப் பேருந்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக ஒரு தொலை பேசி தகவல் வருகிறது.செய்தியைப் பெற்ற அதிகாரி முப்பதுக்கும் ஒன்றிரண்டு குறைவான ஒரு சின்னப் பெண்.
அந்தப் பின்னிரவிலும் தனியே ஒரே ஒரு ஊழியரின் துணையோடு போகிறார். பேருந்து கூரையில் விரிக்கப்பட்டிருந்த தார்ப் பாய்க்கு அடியில் ஆறேழு பைகளில் சற்றேரக் குறைய ஐந்தே கால் கோடி சிக்குகிறது.

"இவ்வளவு பணத்தை ஏன் சார் பேருந்து கூரை மேல வச்சிருக்கீங்க?"
" மேடம், இது என் பணமில்ல" பேருந்து உரிமையாளர் பதறுகிறார்.
"அப்புறம் இது எப்படி உங்க பஸ்ல வந்தது?"
" சத்தியமா தெரியலங்க மேடம்?"
" இது உங்க பஸ்தானே?"
" ஆமாங்க மேடம்."
எவ்வளவு நாளா உங்க வீட்டு வாசல்ல இந்த பஸ் நிக்குது?"
"ரெண்டு நாளாங்க மேடம்"
"ரெண்டு நாளா உங்க பஸ் உங்க வீட்டு வாசல்ல நிக்குது. அது கூரைல இவளவு பணத்த உங்களுக்குத் தெரியாம யாரு வச்சிருக்க முடியும்?"
" எங்க அம்மா மேல சத்தியமா இது என் பணம் இல்லீங்க மேடம். இது எப்படி வந்துச்சுன்னும் சாமி சத்தியமா எனக்குத் தெரியாதுங்க"
பிடிபட்ட ஐந்தே கால் கோடியும் அவருடையது இல்லை என்று நிறுவித் தப்பிக்க ஒன்றிரண்டு கோடிகளை செலவழித்தும் ஒன்றும் கதை ஆகாமல் இன்றளவும் அவர் பதட்டோத்தோடே இருப்பதாகத் தகவல்.
அடுத்து இன்னொரு இடம்.
அது ஒரு தேநீர்க் கடை. ஒரு நாளைக்கு விஷேச காலங்களில் பிச்சுக்கிட்டு போற வியாபாரம்னாகூட ஆயிரத்தைத் தாண்டாத கடை. அந்தக் கடையில் ஒரு பெரிய தொகை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வருகிறது. விரைந்த அதிகாரிகளின் கைகளில் நாற்பது லட்சம் சிக்குகிறது.
" இந்தப் பணம் இங்க எதுக்கு வந்துச்சு?"
" என் புள்ளைங்க மேல சத்தியமா இது என் பணம் இல்லீங்க சாமி"
.
" இது ஒன்னுது இல்லன்னு தெரியும். யாரோடது. எதுக்கு இங்க வந்துச்சு?"
தேநீர்க் கடைக் காரரும் சாமி சத்தியமாய் நாற்பது லட்ச ரூபாய் பண மூட்டை எப்படி தனது வீட்டிற்குள் வந்தது என்று தெரியாது என்று சொல்கிறார்
வழக்கமாக வீட்டிலிருந்துதான் எப்படி போனது என்று தெரியாமல் பொருள்கள் களவு போகும். அவர்களது இடத்திற்குள் அவர்களுக்குத் தெரியாமல் இவ்வளவு அதிக பணம் அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்கிறது என்பது தேர்தல் நகைச்சுவைகளிலேயே அதி சிறந்த நகைச் சுவை.
பிடிபட்ட தொகையே லட்சம் கோடிகளைத் தாண்டும் போல இருக்கும் பட்சத்தில் பிடிபடாமல் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டது எவ்வளவு தேறும்?.
இவ்வளவு கீழ்மைகளுக்கும் மத்தியில் தேர்தல் நெருக்கத்தில் வந்து விட்டது. மதுரையில் ஒருவர் தனது வீட்டில் " எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கல்ல" என்று எழுதி வைத்திருக்கிறார். அது என்ன விளைவைத் தரும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அது நிச்சயமாய் வெளிச்சமான நம்பிக்கையைத் தருகிறது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
எட்வின் அவர்களே,
ReplyDeleteகலக்கிடிங்க. நீங்க சொன்னது அதனையும் அசிங்கமான உண்மைகள். என்னபண்ணுறது, நாடு கெட்டு கிடக்குதுங்கோ. ஆனா, கொஞ்ச கொஞ்சமா திருந்துராங்கனு நெனைக்கிறேன்.... ஆசையா இருக்குதுங்க, நம்ம நாடும் நல்ல நாடா, நல்ல மக்களா,.... ஏக்கம்தான் போங்க. ஒரு சாதாரண குடிமகனா என்னமாதிரி இருக்குறவங்க என்ன பண்ணறதுன்னு சொல்லுங்களேன்....
வணக்கம் கண்ணன் மிக்க நன்றி வந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும். நாடு நிச்சயமாய் உருப்படும். பார்ப்போம்
ReplyDeleteவேறு வழி, பஜ்ஜிக்கும் தேநீருக்குமான காசைக் கொடுத்து விட்டு பேருந்தை நோக்கி நகர்ந்தேன்.//
ReplyDeleteஇப்படியான எதிர்பாராத தருணங்களில் ஏமாற்றங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு சில நேரம் பிரயாணச் செலவும் ஏற்படும். அதே வேளை நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் சந்திக்க முடியாத நிலமை இருக்கிறதே..
அப்பாடா, அதன் பின்னரான உணர்வுகள் கூட மனதைக் கனக்கச் செய்து விடும்
சுசிலா அம்மாவின் " நாளை இந்த வேலைப் பார்த்து ஓடி வா நிலா/ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா"///
ReplyDeleteஉயர்ந்த மனிதன் படத்தில் வரும் பாடல் தானே, அது நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா........என்று தான் வரும் என நினைக்கிறேன்.
நமது மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போட்டார்கள் நான்கைந்து கல்லூரி மாணவர்கள்.//
ReplyDeleteவாழ்வின் இனிமையான தருணங்களில் அல்லது மனம் எங்கேயாவது இலயித்திருக்கும் பொழுதுகளில் இப்படியான குழப்பங்கள் இடம் பெற்றால், அதன் பின்னரான தாக்கங்ள், கோபத்தினையும், எரிச்சலையும் தான் வரவழைக்கும்...
உங்களுக்கும் அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்குமே?
இதை நன்கு உணர முயகிறது.//
ReplyDeleteஇவ் இடத்தில் உணர முடிகிறது என்று வந்தால் அழகாக இருக்கும்,
பிடிபட்ட ஐந்தே கால் கோடியும் அவருடையது இல்லை என்று நிறுவித் தப்பிக்க ஒன்றிரண்டு கொடிகளை செலவழித்தும் ஒன்றும் கதை ஆகாமல் இன்றளவும் அவர் பதட்டோத்தோடே இருப்பதாகத் தகவல்.//
ReplyDeleteஇறுதியாக நீங்கள் சொல்ல வரும் சம்பவங்களும், மேற் பந்தியில் நீங்கள் எழுதிய பள்ளி மாணவர்களின் தொலைந்த பொருட்களை மீட்பது தொடர்பான விளக்கங்களும், உங்களின் எழுத்து நடைக்கும், இக் கதை சொல்லும் போக்கிற்கும் உறு துணையாய் நிற்கின்றன.
பிடிபட்ட ஐந்தே கால் கோடியும் அவருடையது இல்லை என்று நிறுவித் தப்பிக்க ஒன்றிரண்டு கொடிகளை செலவழித்தும் ஒன்றும் கதை ஆகாமல் இன்றளவும் அவர் பதட்டோத்தோடே இருப்பதாகத் தகவல்.//
ReplyDeleteஹா..ஹா.........
நாம் என்ன செய்யப் போகிறோம்?//
ReplyDeleteஇறுதியில் மனதினுள் ஒரு பாரிய கேள்வியினை, ஒரு மாநிலத்தின் எதிர் காலத்தினை தீர்மானிக்கப் போகின்ற கேள்வியினை உதிர்த்து விட்டுச் சென்றிருக்கிறீங்கள்.
இயல்பான மொழி நடையினூடாக, நேர்மை, ஊழல், விலை போதல், சோரம் போதல் முதலிய பல உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்தக் கதை இன்னும் பல பேரைச் சென்று சேர வேண்டும் என்பதே என் அவா.
நிரூபன் said...
ReplyDeleteசுசிலா அம்மாவின் " நாளை இந்த வேலைப் பார்த்து ஓடி வா நிலா/ இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா"///
உயர்ந்த மனிதன் படத்தில் வரும் பாடல் தானே, அது நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா........என்று தான் வரும் என நினைக்கிறேன்.
April 10, 2011 9:08 AM
நாளை இந்த வேளை என்றுதான் இருக்க வேண்டும். திருத்திக் கொள்கிறேன்
நிரூபன் said...
ReplyDeleteஇதை நன்கு உணர முயகிறது.//
இவ் இடத்தில் உணர முடிகிறது என்று வந்தால் அழகாக இருக்கும்,
April 10, 2011 9:15 AM
முடிகிறது என்பதுதான் சரி. திருத்துகிறேன்
அப்படியே சொத்துக் கணக்குக் காட்டியிருக்கும் கோடிகளையும் இன்னொருமுறை கணக்கு பார்த்தால் நாடு நலம்பெறும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@Harani
ReplyDeleteஅடப் போங்க ஹரணி,
அவ்வளவு பெரிய கணக்கெல்லாம் பார்க்கக் கூடிய ஆளுன்னு நம்ம பத்தி ரொம்ப தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க. ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி என்பதையே எண்ணில் எழுத வராமல் எழுத்தில் எழுதிக் கொண்டிருக்கும் மக்குகளில் நானும் ஒருவன்.