பிரச்சினை முளைத்து
வளர்ந்து
என்னைக் கொன்றுவிட முனைந்த
அந்த
முப்பத்தேழு நாட்களிலும்
பிரச்சினையை முறித்து
நான் வெளிவந்த பிறகான
இந்த
அறுபத்தியோரு நாட்களிலும்
எங்கிருந்தாய் நீ
ஆனாலும்
நன்றியோடு
இப்போது
நானுன்னைத் தேடுவது
பிரச்சினை
ஆரம்பித்த
அந்தப் புள்ளியில்
நீ
ஓடிப்போவதற்கு முன்
உனதிரு கைகளுக்குள்
என் வலது கைபிடித்து
நீ கொடுத்துப்போன
'இருக்கேன்’ என்ற
அந்த சொல்தான்
தினமும் முத்தமிட்டு
நான்
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
அந்த ஒற்றை சொல்லை
இறுதி முத்தமிட்டு
உன்னிடம்
தரவேண்டும்
யாருக்கேனும்
பயன்படட்டும்
அந்த ஒற்றை சொல்
போக
அதுவுமில்லையெனில்
வேறென்ன இருக்கப்போகிறது உன்னிடம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்