Sunday, August 18, 2024

மக்களுக்கான அறிவு குறித்து பேசும்போது கிழவனைக் கடந்துபோய்விட முடியாது

 

அநேகமாக ஒரு வருடமிருக்கலாம்
அமெரிக்கா சென்றிருந்த ராகுல் சிலிகான் பள்ளத்தாக்கிற்கு செல்கிறார்
ஒருக்கால் நீங்கள் பிரதமரானால் உடனடி முன்னுரிமையை எதற்கு வழங்குவீர்கள் என்று கேட்கிறார்கள்
ஆரம்பப்பள்ளிக் கல்விக்கு
என்று சட்டெனக் கூறுகிறார்
ஏன்
இரண்டு மூன்று சொல்கிறார். அவற்றில் ஒன்று
மக்களுக்கான அறிவை அங்கிருந்து தொடங்குவதுதான் பலனைத் தரும்
இன்று பெரியாரைப் புரட்டுகிறேன்
உயர் கல்விக்கு செலவளிப்பதைவிட ஆரம்பக் கல்விக்கு அதிகமாக செலவளிக்க வேண்டும்
ஏனெனில்,
அப்போதுதான் அறிவுள்ள தேசத்தைக் கட்ட முடியும் என்று
04.08.1932 அன்று ஒரு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அன்றைய கல்வி அமைச்சர் திவான் பகதூர் எஸ் குமாரசாமி கூறியதை
14.08.1932 அன்று பெரியார் குடியரசில் கொண்டாடி இருப்பதை
"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்" என்ற நூலில் தோழர் கவுதமன் பசு தொகுத்திருப்பதைப் பார்க்கிறேன்
இதை ராகுல் வாசித்திருக்க வாய்ப்பில்லை
ஆனால் மக்களுக்கான அறிவு குறித்து பேசும்போது கிழவனைக் கடந்துபோய்விட முடியாது

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...