உள்துறை அமைச்சரை
அலைபேசியில் அழைத்தால்
பிரதமர் எடுப்பதைக்கூட
ஒரு கணக்கில் கொள்ளலாம்
ஐந்து நாட்ளுக்கு முன் வந்துபோன
விடுதலைநாளன்று
வீட்டு வாசலில்
கொடியேற்றச் சொல்வதை
எப்படி செரிப்பதென்று
யோசித்துக் கொண்டிருந்தபோதே
அலைபேசியை
அமைச்சர் எடுத்துவிட்டார்
எப்படி செரிப்பதென்று
அவரிடம் கேட்டால்
எப்போதோ இறந்த சிவாஜி
1960 வாக்கில்
சென்னைக்கு வந்ததாக
அண்ணாமலை சொல்லவில்லையா?
1883 இல் பிறந்த சவார்க்கர்
1857 இல் நடந்த
சிப்பாய் கலகத்தில் கலந்துகொண்டதாக
நானே சொல்லவில்லையா?
வரலாறென்றால்
ஜனங்களை
கடந்த காலத்திற்கு
கொண்டுபோவதுதான்
தம்மை வாழவைக்குமென்றும்
சொன்னவர்
தானே செரிக்க வேண்டும் என்றும்
செரிக்காத பட்சத்தில்
ஈடி வரும் என்றும் கூறவே
நிகழ்காலத்தில்
என்ன செய்வதாக உத்தேசமென்றால்
தங்களைக் கேட்காமல்
தினமும்
தன்னைத்தானே சுற்றுவதற்கு
நாளொன்றுக்கு
பூமிக்கு
140 கோடி வரிபோட்டு
ஜனங்களிடம்
தலைக்கு
நாளொன்றுக்கு
ஒருரூபாய்
வசூலிக்க இருப்பதாக சொன்னார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்