Monday, August 26, 2024

கவிதை 100

 


நனைய வாசலுக்கு வருமாறு
இறைஞ்சி
இரைந்து அழைத்துக் கொண்டிருக்கிற மழையை
வெறுப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இத்தனை வெறுப்போடு
மன்னரைக்கூட ஒருபோதும் நான்
பார்த்தது கிடையாதென்பது
மழைக்கே தெரியும்
தெற்கே வயநாட்டில்
முந்தின நாள் பள்ளியில்
தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்த
மகளின் படத்தைத் திறந்து பார்த்த
குவைத்தில் இருக்கும் தகப்பனுக்கு
தன் மகளோடு அனைவரையும்
சரிந்து வழிந்த மலை
சாப்பிட்டுப் போன செய்தி
பத்து நிமிடத்தில் வருகிறது
அந்தக் குழந்தையின் தந்தையின்
புத்திர சோகத்தை
என் வெறுப்புமிழும் கண்களில்
கண்டிருக்க வேண்டும்
இப்போது என் தெருவில்
அழுது கொண்டிருக்கிறது மழை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...