Sunday, January 21, 2018

தனியாருக்கு லாவம் எனில்....?

பெட்ரோல் வெல இந்த ஆறு வருஷத்துல எவ்வளவு ஏறிடுச்சு, போக போக்குவரத்து தொழிலாளிகளோட சம்பளத்த வேற எவ்வளவு ஒசத்தியாச்சு. போக்குவரத்துக் கட்டணத்த ஒசத்தாம என்ன பன்ன முடியும்? என்கிகிற லகுவான வாதம் பொதுத் தளத்தில் அங்கங்கே வைக்கப் படுகிறது.
ரொம்ப நியாயம்போலத் தோன்றும் இந்தக் கருத்தில் நிறையவே நியாயம் இருக்கிறது.ஆனால் அதைவிட ஒரு பெருநியாயம் நம்மிடம் இருக்கிறது.
டீசல் விலை ஆறு வருடங்களில் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
ஊழியர்களின் ஊதியம் உயர்ந்திருக்கிறது
இரண்டையும் மறுக்க இயலாது. இரண்டின் காரணமாகவும் அரசுக்கு நிறைய செலவு என்பதையும் மறுக்க இயலாது.
ஆனால் இதற்காகவெல்லாம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை.
2006 இல் இருந்து தனியார் பேருந்துகளுக்கும் பேருந்து கட்டணம் ஏற்றப்படவில்லை. ஆனால் இந்தச் செலவுகளைத் தாங்க இயலாமல் எந்தத் தனியார் நிறுவனமும் தனது பேருந்துகளை நிறுத்தவில்லை.
இன்னும் சொல்லப்ப்போனால் நியாயமான இடைவெளியில் எல்லா தனியார் நிறுவனங்களும் புதிய பேருந்துகளை மாற்றவே செய்தன. ஒழுங்காகப் பராமரிக்கவும் செய்தன.
உண்மையைச் சொல்வதெனில் பல அரசு நகரப் பேருந்துகளில் ஒலிப்பானைத் தவிர அனைத்தும் சத்தம் போடுகின்றன.கிழிந்த இருக்கைகள், சிதைந்த இருக்கைகள்.
ஆனாலும் நான் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் மட்டுமே பயணிப்பவன். ஓட்டுநர்களின் தயவினால்மட்டுமே எனது பயணங்கள் சேதாரம் இன்றி தொடர்கின்றன..
தனியார் பேருந்துகளில் ஊதியம் குறைவு. ஆனால் அதை இயக்குவது எளிது. பல அரசுப் பேருந்துகளை இயக்கினால் முதுகுவலி வந்துவிடும்
எந்த முதலாளியும் நட்டத்தோடு பேருந்துகளாஇ இயக்கி இருக்கமாட்டார்.. எனில் லாவம் இருக்கிறது.
தனியாருக்கு லாவம் எனில்....?

2 comments:

  1. பெரும்பாலும் நான் அரசுப்பேருந்தில்தான் பயணிக்கிறேன். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால்தான் நாம் இப்போது சேதாரம் இன்றி பயணிக்கிறோம் என்பது உண்மையே. அவர்களுடைய பாடு சற்றே சிரமம்தான். சரியான பராமரிப்பு இன்றி பேருந்தை இயக்க சிரமப்படுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...