எங்கள் ஊரில் ஒரு ஆண்டை இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட நிலம் இருந்தது. நூற்றுக்ணக்கான பண்ணையாட்கள் அவனிடம் இருந்தார்கள். அவர்களது உழைப்பில் அவன் நாளும் நாளும் பலுத்துப் பெருகிக்கொண்டே இருந்தான்.
ஒருநாள் அவன் தனது பண்ணையாட்களை அழைத்தான். அவர்களது வாரக் கூலியில் இருந்து ஒரு சிறு தொகையை அவன் எடுத்துக் கொள்வதாகவும். அவர்கள் வயது முதிர்ந்து வேலைக்கு வர இயலாமல் வேலையைவிட்டு நிற்கும்போது அதை வட்டியோடு தருவதாகவும் அல்லது இடையிலேயே அவர்கள் இறந்துபோனால் அந்தத் தொகையோடு வட்டியை சேர்த்து அவர்களது குடும்பத்தாரிடம் கொடுத்து விடுவதாகவும் கூறினான்.
வேலையைவிட்டு நிற்கும் போதோ அல்லது இடையில் இறந்துபோனாலோ கிடைக்கும் ஒரு பெருந்தொகை (அவர்களுக்கு இது பெருந்தொகைதான்) பிள்ளைகளின் திருமணத்தை முடித்துவிடலாம் என்று படவே மகிழ்வோடு எல்லோரும் இதற்கு சம்மதித்தனர்
நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தது.
திடீரென்று அந்த ஆண்டை பணத்தைத் திருப்புவதை நிறுத்தினான்.
கேட்டவர்களிடம் எதேதோ ஜால்ஜாப்பு கூறினான். ஒன்றாய்ப் போய்க் கேட்டார்கள். பலிக்கவில்லை.
இந்தப் புள்ளியில் தற்போது அவனிடம் வேலை பார்ப்பவர்களுக்கு இதன் நியாயம் புரிந்தது. போக, நாளைக்கு அவர்களுக்கும் இதுதான் நிலைமை என்பதும் புரிந்தது. ஒன்றிணைந்து போய்க் கேட்டார்கள்.
பலிக்காது போகவே வேலைக்கு போகாமல் தெருவில் நின்று போராடினார்கள்.
தெருவில் நின்று இவர்கள் போராடுவது ஊருக்கு இடைஞ்சலாக இருப்பதாக ஒருவன் ஊர் நாட்டாமையிடம் பிராது கொடுத்தான்.
அவனையும் பண்ணையாட்களின் பிரதிநிதிகளையும் நாட்டாமை அழைத்தார்.
"என்ன பிராது?"
‘இவங்க தெருவுல நின்னு போராடுறதால அமைதி கெடுது’
‘நியாயம்தானே இவன் சொல்றது. ஏம்பா இப்படி தெருவுல நின்னு இடஞ்சல் பன்றீங்க’
விவரத்தை சொல்கிறார்கள்
‘கூப்பிடு அந்த ஆண்டையை’
‘ஏம்பா இப்படி.’
’காசு இல்ல. ரொம்ப நெறுக்கடி’
‘ ஏண்டா பொசக்கெட்டவனே, காசு இல்லங்கறவன் எப்படிடா தெருத் தெருவா உங்க தாத்தனோட நூறாவது பொறந்த நாளக் கொண்டாட முடியுது.
ஒழுங்கா பொறந்தநாளக் கொண்டாடுறத நிறுத்திட்டு ஒழச்சவங்க காச திருப்பிக் கொடு.
இதுதான் நாட்டாமத் தீர்ப்பு’
முடித்தார்.
இந்த நாட்டாம எந்த லா காலேஜ்லயும் படிக்கல கோர்ட்டுலயும் வழக்காடல, கொறஞசபட்சம் ரெண்டரை லட்சம் மாச சம்பளம் வாங்கல எஜமானக்களே
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்