இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு மூன்று நூல்கள் வந்திருக்க வேண்டும்.( Vetrimozhi Veliyeetagam) என்மீது கொண்ட பேரன்பால் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். தொகுத்துத் தர இயலவில்லை. விடாது நச்சரித்துக்கொண்டிருந்த தம்பி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கோவத்தில் பேசுவதையே நிறுத்திக் கொண்டான். ஆனாலும் புத்தகத் திருவிழா முடிந்ததும் அவற்றைத் தொகுக்க வேண்டும். பெரம்பலூர் புத்தகத் திருவிழா சமயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு சிறப்பாக வெளியீட்டு விழாவை பெரம்பலூரில் நடத்திவிட ஆசை. பார்ப்போம் இயற்கை என்ன செய்கிறது என்று. இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு முன்னரே காலாவதியாகிவிட்ட பயணச்சீட்டோடுதான் என் பயணம் நகர்வதாகப் படுகிறது. பார்ப்போம்
இந்தநிலையில் எனதுஇளைய தோழன் அகவி Vinayaga Moorthyயின் “தலித் கவிதையியல்” யாளி பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. அட்டை மிக அழகாகவும் புத்தகத்தின் ஆழத்தை எடுத்துச் சொல்கிறவிதமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
பெரம்பலூரில் இருந்து யாரேனும் எழுதமாட்டார்களா என்று என் நெஞ்சில் எப்போதும் கனன்றுகொண்டே இருக்கும் ஏக்கத்தை இந்தநூல் நிறைவு செய்திருக்கிறது.
அகவி மிகப்பெரிய எழுத்துக்காரன். என்ன, அந்த இளைஞன் இன்னும் இதை உணர்ந்தானில்லை.அந்த உண்மையை இவன் உணாரும் புள்ளியில் இவனிடமிருந்து நிறைய வெளிவரும்.
வாழ்த்துக்கள் அகவி. போக இன்னும் நிறைய இருக்கிறது.
முடியும் அகவியால்.
க. மூர்த்தி, Dhahir Batcha போன்றோரின் நூல்களை ஆவலோடு ஏங்கி எதிர்பார்க்கும் இந்தப் பொருட்டற்றவனின் ஆசையை இந்த இளைய தோழர்கள் அன்போடு பரிசீலிக்க வேண்டும்.
வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
இப்போதைக்கு என் வாழ்த்தும் முத்தமும் அகவி
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்