லேபில்

Sunday, January 14, 2018

கவிதை 083

டசன் கணக்கில் இருக்கின்றன விருதுகள் உம்மிடம்
அழகழகாய்...
கட்டி வைத்திருக்கிறீர்கள்
கணக்கும் பொற்காசு முடிச்சுகளை
ஒவ்வொரு விருதோடும்
உருவாக்க முடியும் உங்களால் இன்னுமிரு டசன் விருதுகளை
இவற்றைவிடவும் பேரழகாய்
இன்னும் கணமாக்கமுடியும் பொற்காசு முடிச்சுகளை
வசதி இருக்கிறது உங்களிடம்
வைக்க முடியும் வசீகரமான பெயர்களை விருதுகட்கு
கொடுங்கள்
எந்த விருதை வேண்டுமானாலும்
யாருக்கு வேண்டுமானாலும்
சொல்லிவிடாதீர்கள்
அதற்கான காரணத்தை மட்டும்
அருள்கூர்ந்து

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023