Sunday, January 14, 2018

முத்தங்கள் மகளே

அந்தக் குழந்தை ஒரு கல்லூரி மாணவியாக இருக்க வேண்டும்.
அவளுக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்வதற்காக அனுமதி கேட்டதும் இருக்கையைத் துடைத்துத் தட்டி புன்னகைத்தவாறே இருக்கையை நோக்கி கையை நீட்டி அமரச் சொன்னாள். அமர்ந்ததும் சிரித்தாள். பிறகு ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டாள்.
ஏனோ தெரியவில்லை அவ்வப்போது என்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே வந்தாள்.
கொஞ்ச நேரத்தில் தோழர் தமிழரசன் என்னை அழைத்தார். அவரோடு உரையாடத் தொடங்கிய என்னைப் தலையை சாய்த்து கன்னத்தில் கைவைத்தபடியே பார்க்கத் தொடங்கினாள்.
தங்கை தீபாவிற்கு 30 ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்தது,
பிறந்து ஏழு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு மிகவும் முடியாமல் போனது,
பிறந்து எட்டரைமணி நேரத்திற்குள் குழந்தையை மணப்பாறையிலிருந்து ஆம்புலன்சில் திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தது
பெற்றவளை மணப்பாறை மருத்துவமனையிலும் குழந்தையை திருச்சி மருத்துவமனைனிலுமாக சேர்த்து படும் துயரம்
ஒருநாள்குழந்தைக்கு பெரிய பெரிய அட்டைபெட்டி அட்டைபெட்டியாக மருந்து வாங்கி சுமந்தது
குழந்தையின் நிலை
என்று தொடர்ந்த உரையாடலில் என்னையறியாமல் அழுதிருக்கிறேன்
செல்லை அணைத்து பாக்கெட்டில் போடுகிறேன். என் கையைப் பிடிக்கிறாள்
பார்க்கிறேன்.
அந்தக் குழந்தையின் கண்களில் வடிகிறது
"தைரியமாக இருங்க அங்க்கிள். தம்பி நல்லாயிடுவான். நான் பாஸ்டிங் இருந்து ப்ரே பன்றேன்.
எதுவும் பேச இயலாதவனாக இறங்க எழுந்தவனின் கையைப் பற்றுகிறாள்,
"ஒன்னும் ஆகாது அங்க்கிள், இறங்கனதும் சாப்டுங்க, ரொம்ப டயர்டா இருக்கீங்க"
இப்பவும் பேச ஏதுமற்றவனாய் அவள் தலையில் கை வைத்து அழுத்துகிறேன் .
கையசைக்கிறாள்.
இந்தக் குழந்தைகளின் ஈரம் எனக்கு பேரதிகமாய் நம்பிக்கையைத் தருகிறது.
இந்த நம்பிக்கைதான் அந்தக் குழந்தை வழியாக இந்தச் சமூகம் எனக்குத் தந்த புத்தாண்டுச் செய்தி.
நீ அள்ளித் தெளித்த ஈரத்தை என்னில் இருந்து உலர்ந்துபோகாமல் காக்க முயற்சிப்பேன்.
முத்தங்கள் மகளே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...