Monday, August 19, 2013

நிலைத் தகவல்...12


இன்று காலை சமயபுரம் தோல்ப்ளாசாவில் இறங்கி வழக்கம்போல பள்ளிக்கு நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது தூரத்திற்குள் மொபெடில் ஒரு பெண் என்னை முந்தி மறித்து நின்றாள்.

ஆறேழு வருடங்களுக்கு முன் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்த குழந்தை.

“ஏய் எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க சார்?”

“ நல்லா இருக்கேண்டா. என்ன பன்ற?”

“M.E பன்றேன் சார். சரி ஏறுங்க சார். பள்ளியில கொண்டு போய் விடுறேன்”

“ வேணாண்டா. நான் போயிக்கறேன். கொஞ்ச தூரம்தானே”

“போற வழிதான். ஏறுங்க சார்”

விடாப் பிடியாக மறுக்கிறேன். ஒரு புள்ளியில் வெடித்தாள்,

“ இப்ப எங்க அண்ணன் வந்திருந்தா அவனோட போயிருப்பீங்கள்ள?”

“அப்படி இல்லடா...”

சமாளித்தேன்.

“இல்ல சார். பொம்பளப் புள்ள ஓட்டி நீங்க உக்கார்ந்து வரது கௌரவக் குறைச்சல். விடுங்க சார் உங்க கிட்டையும் ஆணுங்கற அகம்பாவம் இருக்கு சார்”

ஒன்றும் பேசாமல் ஏறி உட்கார்ந்தேன்.

அப்படித்தானோ?

2 comments:

  1. உங்களுக்கு வந்தது யதார்த்தமான சங்கடம்..
    சங்கடம் தீர்க்கும் வண்ணம் சங்கதியை சொல்லி சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தாங்கள் அறிவுசார் ஆசான் என்பதை மெய்ப்படுத்தி விட்டார் அந்த அன்பு தங்கை...இருவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...